|
285.
(இ-ள்) புற்று
இடம் ... செல்வார் - புற்றையே தாம்
வாழுமிடமாக விரும்பி எழுந்தருளிய இறைவனைத் துதித்து வணங்கிய பின்,
பரிசனங்கள் சுற்றிச் சூழ்ந்து வரச் செல்லும் நம்பிகள்; நற்பெரும் பான்மை
கூட்ட - பெரிய நல்ல ஊழ்வினை கூட்டி வைத்தமையாலே; நகை பொதிந்து
... கண்டார் - மகிழ்ச்சிக் குறியாகிய புன்முறுவலுடன் விளங்கும் சிவந்த
வாயையும், வில்லை ஒத்த நுதலின் கீழே வேலொத்த கண்களையும் உடைய
ஒளிசெய்து விளங்கும் ஆபரணங்களைப் பூண்ட பரவையாரைக் கண்டார். 139
பரவையார் போதும்
போதில் - தொழுது - சூழச் செல்வாராகிய
நம்பி அந்த விளங்கிழை யவரைக் கண்டார் என்று இரண்டு பாட்டுக்களையும்
கூட்டி முடிக்க. மேற்பாட்டில் பரவையார் இறைவனை வணங்கப் போதலும்,
பின் பாட்டில் நம்பிகள் அவரை வணங்கித் திரும்பி வருதலும், இடையில்
இருவரும் ஊழாகிய தெய்வங் கூட்டக் காணலும் கூறப்பெற்றன.
284. (வி-ரை.)
வணங்கப் பரவையார் மறுகுசூழப் போதும் போதில்
- மூன்று அங்கங்கள் முறையேமூன்று உலகங்களை வென்றதற்கு
அடையாளமாக, மூன்றுபொருள்கள் ஆர்த்தன. மேலும் - நடுவும் - கீழும்
உள்ளன மூவுலகங்கள் என்பர். இவையே சுவர்க்க மத்திய பாதலமாம்.
மூவுலகையும் வெல்லுதலாவது இம்மூன்று உலகத்திலும் இவருக்கு ஒப்பாரும்
மிக்காருமில்லையாதல். தமிழ் நூற்களின்படி இதுவே தலைவியினது
இலக்கணமாதலின் இவ்வாறு கூறினார். ஒவ்வோர் உலகை வென்றதற்கு
ஒவ்வோர் பகுதி காரணமும் உதாரணமு மாயிற்று. பரவையாரது அடிகள்
மண்ணை அடிப்படுத்தி மிதித்தற் றொழிலாலும், அல்குல் அரவுலகை
அரவரசாகிய நாகத்தினும் மிக்க வடிவினாலும், காஞ்சியில் உள்ளனபோன்ற
மணிகள் அரவுகளில் இல்லாமையினாலும், குழல் மேகத்தின் மிக்க
நிறத்தாலும் வென்றதை, முறையே, அங்கங்குள்ள சிலம்பும் - காஞ்சியும் -
வண்டுகளும் தெரிவித்து ஆர்த்தன என்க. மண் அடிப்பட்டது;
விண்பணிந்தது; ஆனால் அரவுலகு உறுதியாய் வெல்லப்பட்டது; ஆதலின்
இதைத் தெரிவிக்குமாறு ‘துணிவு கொண்டு காஞ்சி ஆர்க்க' என்றமை
காண்க. அல்குல் பெண்மைத் தானமாதலின் வென்ற துணிவு கொண்டு
எனச் சிறப்புத் தோன்றக் கூறியபடி. “பையா வசைத்த வல்குல்“ என்ற
திருவிருத்தம் (அப்பர் - கோயில்) ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. விண் -
புண்ணியத்தால் வரும் இன்பானுபவமும், மண் - புண்ணிய பாவங்களால்
வரும் மிச்சிரமாகிய கலப்பு அனுபவமும் பெறும் இடங்கள் ஆதலின்
இவற்றைக் கீழ்ப்படுத்தலே அமையும். ஆனால் அரவுலகு என்ற கீழுலகம்
பாவத்தால் விளையும் துன்பானுபவத்திற்கே உரியதாதலின் அது முற்றும்
வெல்லப்பட்டொழிதல் வேண்டும் என்பதுபற்றி “வென்ற துணிவுகொண்டு“
என்றதாம் துணிவுகொண்டு - அடியும் குழலும்போல வெளித் தோற்றாது,
அல்குலினது செயல் காஞ்சி யணியின் தன்மையால் அனுமானித்துத்
துணியப்படு பொருளாதலும் குறிப்பாம். அடி - அல்குல் - குழல் -
பாதாதிகேச வருணனை. மண்ணும் அரவுலகும் அன்றி விண்ணும் என்ற
பொருளில்வந்த இறந்தது தழுவிய எச்சவும்மை. சிறப்பும்மையுமாம். பரவையார்
என்ற பெண்மணியின் அவதாரத்தால் சிவத்துவம் விளங்க நாகலோகம்
தூர்ந்து ஒழியக் காரணமாயிற்று என்ற குறிப்பும் காண்க. இதனால் பரவையார்
மறுகுசூழ ஒருவரை வணங்கப்போந்த நடைச் சிறப்பும், பயனும் கூறியபடி. 138
285. (வி-ரை.)
ஆளுடைய நம்பி - சிவபெருமானாலே
ஆட்கொள்ளப்பெற்ற பேற்றினை உடைய நம்பிகள இவ்வாறே
ஆளுடையஅரசு, ஆளுடையபிள்ளையார், ஆளுடையஅடிகள் என
வருவனவும் காண்க. “உடைய அரசுலகேத்து முழவாரப்
|