|
ஏரொளியை
இருநிலனும் விசும்பும் விண்ணும்
ஏழுலகும் கடந்தண்டத் தப்பால் நின்ற
பேரொளியை - என்ற சிவமாகிய பேரொளியைத் தாங்கி நிற்கும். |
(3) இக்கயிலைத் தாழ்வரையிலே
ஞான ஒளியுடன் விளங்கும் யோகிகள்
முனிவர்களிடையே அவர்களது மனங்கவரும் சத்தியுடன் மற்றும் ஒரு
பேரொளி தோன்றிற்றாதலின் இது அதிசயமாயிற்று என்க. தட்சிண
கயிலாயமாகிய திருக்காளத்தி மலையிலேயும் ஐந்துமா றடக்கி யுள்ளார்
அரும்பெரும் சோதியாலும், எந்தையார் திருக்காளத்தி மலையினி விரவொன்
றில்லை என்று பின்னர்க் கூறுவதும் இங்கே சிந்திக்கத்தக்கதாம்.
இறைவனே உலகத்திற்கு விளக்கத்தைச் செய்து காட்டும்
கருத்தனாதலின் பேர் ஒளி எனப் பெறுவன். மாயிருள் ஞால மறுவின்றி
விளங்கப் - பல்கதிர் விரிந்தன் றொருமுகம் என்பது திருமுருகாற்றுப்படை.
ஆயிரம்
ஞாயிறு - ஆயிரம் என்றது எண்ணிறந்த - அனேகம் - எனும் பொருளில் வந்தது.
"ஆயிரம்
ஞாயிறு பொங்கு பேரொளி" என்பது சிவபெருமானது
பேரொளியாகிய சிவவொளி; சிவனது பிரகாசம் என்க. ஆயிர ஞாயிறு
போலும் ஆயிர நீண்முடியானும் என்பது அப்பர் சுவாமிகள் தேவாரம்.
சுந்தரமூர்த்திகள் சிவபெருமானது பேரொளியைப் பெற்றவர் என்பது இங்குக்
குறிக்கப்பெற்றது சிவபெருமான் ஒரு காலத்திலே தமது திருவுருவைக்
கண்ணாடியிற் பார்த்து அதில் தோன்றிய உருவத்தை வா என்று அழைக்க,
அதுவே சுந்தரராக வந்தது - என்னும் வரலாறும் இங்கே குறிக்கத்தக்கதாம்.
இதுபற்றி,
கயிலை
நாயகன் காமரு தன்னுருப்
பயிலும் ஆடியிற் பார்த்தங் கழைத்தலும்
வெயில்செய் வெங்கதிர் கோடி விராய்எனச்
செயிரி லாதமெய்த் தேசொடும் தோன்றினார் |
எனும்
பேரூர்ப்புராணம் பள்ளுப்படலம் (1) பாட்டும் காண்க.
அப்பாட்டிலும் வெங் கதிர்கோடிஎனவும்,
மெய்த்தேசு எனவும்
குறித்தல் காண்க. 16
| 27.
|
அந்தி வான்மதி சூடிய வண்ணல்தாள்
|
|
| |
சிந்தி
யாவுணர்ந் தம்முனி தென்றிசை
வந்த நாவலர் கோன்புகழ் வன்றொண்டன்
எந்தை யாரரு ளாலணை வானென, |
17 |
(இ-ள்.)
அந்தி ... உணர்ந்து - மாலையில் வானிற்றோன்றும்
பிறைச்
சந்திரனைச் சிரத்திலே சூடிய பெருமானது திருவடிகளைத் தியானித்து
உண்மை யுணர்ந்தவராய்; அம்முனி - (மாதவர்
வினாவக்கேட்ட) அந்த
உபமன்னிய முனிவர்; தென்றிசை ... வன்றொண்டன்
- (கயிலையிலே
யிருந்து) தென்றிசையில் வந்து அவதரித்த நாவலூர்நம்பிகளாகிய புகழ்ச்சிமிக்க
வன்றொண்டர்; எந்தையாரருளால் - எமது பெருமானுடைய திருவருளினாலே;
அணைவான் என - மீண்டும் கயிலைக்கு எழுந்தருள்கின்றார் என்று சொல்லி;
(வி-ரை.)
என்று மாதவர் வினாவக்கேட்ட அம்முனி
என
வருவித்துக் கொள்க. அம்முனி அண்ணல்தாள் சிந்தியா வன்றொண்டன்
அணைவான் என உணர்ந்து - என்று சொல்லி - என முடித்துக்கொள்க.
அருளால் என்பது, அருளால் தென்றிசை
வந்த எனவும், அருளால்
அணைவான் எனவும் தீவகமாய்ப் பொருள் கொள்ளநிற்றலும் காண்க....
தென்றிசை மீது தோன்றியம்மெல்லியலாருடன் காதலின்பங் கலந்து
அணைவாய் என(27) என்று அறியப்
|