பக்கம் எண் :


34 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     சுத்த யோகிகள - சுத்த அவத்தையிலே நின்ற சிவயோகிகள்.

     பல்லாயிரர் - எண்ணில்லாதவர்கள். பத்தராயும் முனிவராயும்
எண்ணிக்கையில் பல்லாயிரவராயும் உள்ள யோகிகள் என்று சேர்த்தி
யுரைத்தலுமாம். பல்லாயிரர் - பல்லாயிர முனிவர் - பல்லாயிர
யோகிகள்
என்றுரைத்துக்கொள்க.

     சூழ - தம்மைச் சூழ்ந்திருக்க.

     இருந்துழி - இருந்தபோது என்றுபொருள் கொள்க. இருந்த உழி
என்பது இருந்துழி என்றாயிற்று. உழி என்று காலத்தையும் இடத்தையும்
காட்டும் உருபு.

     சூழ இருத்தலின் இயல்பை - “அம்மலங் கழீஇ அன்பரொடு
மரீஇ
”என்னும் சிவஞானபோதப் பன்னிரண்டாம் சூத்திரத்துக் காண்க.
முத்தராகிய அணைந்தோர் தன்மைகளில் அன்பருடன் கூடியிருப்பதும்
ஒன்றாதலால் இவ்வாறு எடுத்துக் கூறினார். “ஒருப்படு சிந்தையினார்கள்
உடனுறைவின் பயன் பெற்றார்”என்பது முதலிய பலஇடங்களிலும் பின்னர்
இப்புராணத்திலே ஆசிரியர் அன்பர் கூட்டத்தின் இயல்பையும் சிறப்பையும்
எடுத்துக் காட்டியுள்ளார். ஆங்காங்குக் கண்டுகொள்க.             15

26. அங்க ணோரொளி யாயிர ஞாயிறு
 
  பொங்கு பேரொளி போன்றுமுன் றோன்றிடத்
துங்க மாதவர் சூழ்ந்திரந் தாரெலாம்
‘இங்கி தென்கொ லதிசயம்?’ என்றலும்,
16

     (இ-ள்.) அங்கண் ......... தோன்றிட - அவ்விடத்தே ஒரு பெரிய
ஒளியானது ஆயிரம் சூரியர்கள் ஒருங்கே தோன்றி வளரும் பெரிய
ஒளிபோல் முன்னால் தோன்றவே; துங்க மாதவர் ... எலாம் - தூய
தவமுனிவர்கள் சூழ இருந்தார்கள் எல்லாரும்; இங்கு ... அதிசயம்? என்றலும்
- இங்கே இது தோன்றுவது என்ன அதிசயம்? என்று வினாவுதலும்;

     (வி-ரை.) அங்கண் ஒர் ஒளி ஆயிர ஞாயிறு பொங்கு பேரொளி
போன்று முன்தோன்றிட - அவ்விடத்து அவர்கள் முன்பாக ஒரு பெரிய ஒளி
தோன்றிற்று - அஃது ஆயிர ஞாயிறுகள் சேர்ந்து மேல்மேல் வளர்ந்து
பெருகிய ஒளிபோன்றிருந்தது என்க. துங்க மாதவர் - துங்கம் - தூய்மை.
மேற்பாட்டிலேகூறிய முனிவர் யோகிகள் என்ற இருவகையும் தவத்தால்
கிடைக்கின்றன ஆதலின் மாதவர் என ஒன்றுசேர்த்துக் கூறினார். துங்கம் -
பெருமையுமாம்.

     அதிசயம் - இன்னதென்று தெரிந்து அனுபவிக்கப் பெறும் பெருமித
உணர்ச்சியை அதிசயம் என்பர். பெருமித உணர்ச்சி மட்டும் உண்டாகி
இன்னதென்று அறியப்படாதது - அற்புதம் என்க. இதனை “அதிசயம்
கண்டாமே
” என்றும் “அற்புதம் அறியேனே” என்றும் ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகள் அதிசயப்பத்து - அற்புதப்பத்து என்ற திருவாசகப் பகுதிகளிற்
கூறியருளினார். இதன் விரிவை எனது “நீத்தார் பெருமை” என்ற நூலிற்
காண்க.

     இங்கிதென் கொல் அதிசயம் என்றலும் - இங்கு யாங்கண்ட அதிசயம்
இது என்கொல் என்றனர்; என்று வினவுதலும் - பேர் ஒளிப் பொருள்கள் பலவற்றினுள்ளே அவற்றைக் கவரும் மற்றும் ஒரு பேரொளி காணப்படுதலே
அதிசயம் எனப்படும் என்னை? (1) தூயமால் வரைச் சோதி எனவும்,
மெய்யொளி தழைக்கும் தூய்மை” எனவும், மேலே கூறியபடி பேரொளி
யுடையது இத்திருமலை.

(2) அது, “... ... ... ... ...

சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத்
திகமொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்