|
வாழ்ந்திடத் தீதிலாத்
திருத்தொண்டத்தொகைதர நம்பிகள் இங்கு வருமாறு
ஆணையிட்ட அருள் நிகழ்வதற்கு இப்பொருளை ஆங்கே கண்ட காட்சியே
காரணமாய் அதன் பயனே இதுவாயிற்று என்பார், ‘மூவுலகின் பயனாகி'
என்றார்.
சிவனருளோ என்று ஐயற்றார்க்கு அதனை விளக்கும்
கருவி
வேண்டுவதாம்; அவ்விளக்கும் இதுவே என மணிவிளக்கோ என்றார்.
அவ்வாறு சிவனருள் விளக்கமாயின் அதற்குப் பயன் வேண்டும்; அப்பயனும்
இதுவேயாம் என்று முடித்தவாறு. 276-ல் கண்டபடி வழிபட்டு வந்த
தெய்வமணிப் புற்றினுள்ள மணியின் விளக்கமோ என்றலுமாம்.
நாவலர் காவலர்
- திருநாவலூரில் அவதரித்த பெருமான். தமிழ்
நாவலர் தலைவர் என்பதும் ஆம், நாவலராதலின் இவ்வாறு இப்பொருளைத்
தமிழ் விளக்கத்தாலே விளங்கக் கண்டார் என்பது குறிப்பு.
நாவலர் நின்றார்
- (தொழுது செல்வாராகிய நம்பிகள்) கண்டார்
(285) - (கண்டு) அதிசயித்தார் (285) - நினைந்து நின்றார் - என்க.
நடுநின்றார் படைமதனார்
- மலரம்பும் கரும்புவில்லும் பிறவும்
படையாகக் கொண்டு உலக முழுதும் எல்லா உயிர்களிடத்தும்
ஆணைசெலுத்தும் மதனார், இங்குக், கண்ட நம்பிக்கும் காணப்பட்ட
நங்கைக்கும் நடுவே நின்றாராயினார். இருவரிடமும் தொழில் செய்ய ஏற்ற
இடம் இருவர்க்கும் நடுநிற்றலேயாதலின் இடம் தேர்ந்து நின்றாராயினார்.
ஒருபாற் கோடாது நடுநிலையாய் நின்றார் என்றலுமாம். தலைவன் தலைவியர்
கூடியவழி நேர் நின்று ஒரு தொழிலும் செய்யாமல் நிற்றலும், பிரிந்து
தனித்தவழித் தொழில் செய்தலும் மதனுடைய இயல்பு ஆதலின் இங்கே ‘நடு
நின்றார்' என்றார். பின்னர் “வாளிதொடுப்பதே“ என்று நம்பிகளும்
(310)
“படைமன்மதனார் புடைநின்றகலார்“ என நங்கை பரவையாரும் (322)
கூறுவன காண்க.
இத்திருப்பாட்டிலே ‘நான்முகன் ஒவியம் எழுத ஒண்ணாமை'
என்றது
பிரமன் ஒருக்கால் பெண் சிருட்டித் தொழில் கைவராதபோது இறைவனையும்
இறைவியையும் வழிபட்டு அது கைவரப்பெற்றான் என்ற (காஞ்சிப்புராணம் -
தழுவக்குழைந்த படலம்) சரிதத்தைக் குறிப்பதாகக் கூறுவாறுமுண்டு. 141
| 288.
|
தண்டரள
மணித்தோடுந் தகைத்தோடுங்
கடைபிறழுங்
|
|
| |
கெண்டைநெடுங்
கண்வியப்பக் கிளரொளிப்பூ ணுரவோனை யண்டர்பிரான் திருவருளா லயலறியா மனம்விரும்பப்
பண்டைவிதி கடைகூட்டப்
பரவையா
ருங்கண்டார். |
142 |
(இ-ள்.) தண்தரளம்....கண்வியப்ப
- குளிர்ந்த முத்தும், மணிகளும்
இழைத்த தோடுகளையும் தாண்டி ஓடும் தன்மைவாய்ந்த கடை பிறழ்கின்ற
கெண்டை மீன் போன்ற வடிவமைந்த கண்கள் வியப்படைய; கிளர் ...
உரவோனை - எழுந்து வீசும் ஒளியணிகளணிந்த நம்பிகளை; அண்டர் ...
விரும்ப - தேவதேவனாகிய சிவபிரானது திருவருளினாலே, (அவனருளை
யல்லாது) வேறொன்றையும் இதுவரை அறியாத தமது மனம்
விருப்பத்தையடைய; பண்டைவிதி ..... கண்டார் - முன் கயிலாயத்தில்
பெருமான் விதித்த ஆணை இருதலையும் சேரும்படிக் கூட்டுவித்ததாதலின்
பரவையம்மையாரும் கண்டாராயினர்.
(வி-ரை.)
நெடுங்கண் வியப்ப - காதளவோடுதலும், பிறழ்தலும்
அழகிய பெண்களின் கண்களுக்கியல்பாம். “மானிளம் பிணையோ“,
“விற்குவளை“ என்று முன்னரும் முதலிற் சுட்டியதுபோல, இங்கும்
கண்ணையே முதலிற் சுட்டியது கண் அழகின் பெருமை குறித்து. அவ்வாறு
நம்பிகளையும் வியக்கச்செய்த இக்கண்களே இப்போது தாம் வியப்படைய
என்க. இது நம்பிகளின் அழகினைத் தெருட்டியபடியுமாம். தோடும்
|