பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்349

Periya Puranam

     (வி-ரை.) ஓவியம் நான்முகன் எழுத ஒண்ணாமை - நான்முகன்
ஓவியம் எழுத ஒண்ணாமையால் - (மாட்டமையால்).

      கட்டடம் முதலியவற்றிற்குக் கீற்று வரைவு எழுதிக்கொள்ளுதல் போல
ஒருவன் ஒரு பொருளைச் செய்யவேண்டுமாயின் அதன் உருவத்தை முதற்கண்
ஒரு படத்தில் வரைந்து கொள்ளுதல் வேண்டும்.

      இங்கே கண்ட இப்பொருளையும் படைத்தற்கடவுளாகிய பிரமன்
தானே படைத் திருத்தல் வேண்டும்? அவ்வாறு படைக்கு முன் இது
எங்குமில்லாததொரு அரிய பொருளாய்க் கொம்பும் கொடியும் வாழ்வும்
அருளுமாகிய அற்புதப் பொருளாய், அதுவும் வில் முதலியன பூத்த
விரைக்கொடியாய் நிற்றலின், இதற்கு முதலில் ஓர் ஓவியம் எழுதிக்
கொண்டிருத்தல் வேண்டும். அவ்வோவியம் புறத்தே படத்தில் வரைவதற்கு
முன்னர் அதன் உருவத்தை உள்ளத்தில் நன்றாய் எழுதிக்கொண்டனன்றோ
பின்னர்ப் புறத்தில் படத்தில் கையால் எழுதல் கூடும். இவ்வுருவோ அவ்வாறு
உள்ளத்திலும்எழுத இயலாததொன்றாம். எனவே, புறத்தே கரணத்தால் எழுதக்
கூடாமை தானே பெறப்படும். ஆதலின் மனம் முதலிய அந்தக்கரணங்களால்
மிக முயன்று வருத்தப்பட்டு உண்டாக்கியதொரு மணியாகிய விளக்கமோ?
முழுதும் பேரழகின் உருவமாய் மனத்தால் நினைத்து நினைத்து விதித்ததோ?
என்றபடி.

      “யாழுமெழுதி“ என்ற திருக்கோவையார்ப் பாட்டிலே (79)
“இளமாம்போழுமெழுதிற்றொர் கொம்பருண் டேற்கொண்டு போதுகவே“
என்னும் பொருள் நுணுக்கங்களை இங்கு வைத்துச் சுவை காண்க. அவயவ
மெழுத லரிதென விலக்கல் என்ற துறைப்பொருளையுங் குறிக்க.

      “உள்ளக்கிழியி னுருவெழுதி“ எனும் அப்பர் பெருமான்
திருத்தாண்டகமும் காண்க. அது திருவாரூர்ப் பெருமானது தோத்திரமாதலின்,
மேலே சிவனருளோ என்ற நம்பிகளுக்கு இத்தேவாரத்திற் கண்டபடி அவனது
தனிமை தோன்ற, அவனது அருளின் தளிஸமயும் அவ்வாறேயாகும் என்பது
தோன்றிற்று; தோன்றவே இவ்வருட்பொருள் பிரமன் “உள்ளக் கிழியில்
உருவெழுத“ இயலாமை தோன்றிற்று; “ஓவியம் நான்முகன் எழுத
ஒண்ணாமை உள்ளந்தான்“ என்றார்.

      மணி - செயற்கையால் அமையாது இயல்பாய் ஒளியுடைத்தாதலின்
மணி என்றார். பரவையாரும் அதுபோலவே இயல்பான ஒளியும், மேனி
முழுமையும் பேரழகும் வாய்ந்தவர் என்பது கருத்து.

      விளக்கு - மணியின் தன்மையோடமையாது விளக்கின் றன்மையும்
கூடியது. மணி ஒளியுடையதாயினும் சூரியன் முதலிய பிறிதொரு
ஒளிப்பொருளின் முன்பே ஒளிதரும். விளக்கோ தன் பக்கலிலே இருளைக்
கொண்டது இவ்விரண்டுமன்றி இது முழுதும் ஒளியாய்த் தன்னை விளக்க
வேறு பொருள் வேண்டாமையின் மணிவிளக்கு என்றார்.

      நான்முகன் - எழுத - ஒண்ணாமை(யால்) - உள்ளத்தால் -
விதித்த - என்க. ஒண்ணாததாகிய உள்ளத்துடன் விதித்த - என்றும்,
ஒண்ணாத உள்ளத்ததனாகி விதித்த - என்றும் உரைத்தலுமாம். கண்டவுடன்
இவ்வளவும் விளக்கியதாதலின் விளக்கோ என்றார்.

     நான்முகன்
- இதன் பொருள் பின்னர்த் திருஞான சம்பந்தமூர்த்தி
நாயனார் புராணம் “எண்ணிலாண் டெய்தும் வேதா“ என்ற 1110-வது
திருப்பாட்டிற் காண்க.

      மூவுலகின் பயனாகி - மூவுலகின் உள்ளாரும் பாராட்டும் அழகிய
புண்ணியப் பொருளாகி. பார் - அரவுலகு - விண் என்ற மூவுலகும்
வெல்லப்பெற்றமை முன்பு 284 திருப்பாட்டிற் கூறினமைக்கேற்ப மூவுலகின்
பயனாகி என்றார்.

      மூவுலலுகிலுள்ளாரும் புவனியிற் பிறந்து சிவபூசை, அடியார்பூசை
செய்தே கடைத்தேற வேண்டியவர்கள்; அவ்வாறு செய்தற்கு மாதவஞ் செய்த
தென்றிசை