பக்கம் எண் :


352 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

நாணினாற் கூடுமோ அவ்வாறு விதியாகிய கூட்டுங் காரணத்தால் கூடுவதால்
கடை கூட்ட எனப் பெற்றது. கடை கூட்டுதல் - அநுபவத்திற்குக் கொண்டு
வருதல் என்பதுமாம்.

      வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வானுகத்தின் றுழைவழி
நேர்கழி கோத்தெனத் தில்லைத்தொல் லோன்கயிலைக் கிளைவயி னீக்கியிக்
கெண்டயங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேனய
வேன்றெய்வ மிக்கனவே.

     எனவரும் திருக்கோவைச் செய்யுளின் கருத்தை யுன்னுக.

     பாவையாரும் - உம்மை, நம்பிகள் “வேற்கண் விளங்கிழையவரைக்
கண்டார்“ என்றதோடு, பரவையாரும் “உரவோளைக் கண்டார்“
எனப்பொருள் தருதலின் இறந்தது தழுவிய எச்ச உம்மையாம். இருவர்
நோக்கும் தழுவாதவழி,நோக்குதலாற் பயன் இல்லையாதலின் உம்மை
கொடுத்துக் கூறியவாறு. இதன் இயல்பு “கண்ணொடு கண்ணினை
நோக்கொக்கின்“ என்ற குறளிற் காணப்பெறும் என்பது முன்னர்க் குறிக்கப்
பெற்றது. இத்திருப்பாட்டுப் பாவையார்பால் நிகழ்ந்த காட்சி என்னுந்துறை.
நம்பிகள் பால் நிகழ்ந்த காட்சி (285) திருப்பாட்டில் காண்க. 142

289. கண்கொள்ளாக் கவின்பொலிந்த திருமேனி
                           கதிர்விரிப்ப
 
  விண்கொள்ளாப் பேரொளியா னெதிர்நோக்கு
                           மெல்லியலுக்
கெண்கொள்ளாக் காதலின்முன் பெய்தாத
                         தொருவேட்கை
மண்கொள்ளா நாண்மடமச் சம்பயிர்ப்பை
                          வலிந்தெழலும்.
143

290. “முன்னேவந் தெதிர்தோன்று முருகனோ?
                     பெருகொளியாற்
 
  றன்னேரின் மாரனோ? தார்மார்பின்
                      விஞ்சையனோ?
மின்னேர்செஞ் சடையண்ணன் மெய்யருள்பெற்
                       றுடையவனோ?
என்னே! யென் மனந்திரித்த விவன்யாரோ?“
                      வெனநினைந்தார்.
144

     289. (இ-ள்.) கண்கொள்ளா....பேரொளியான் - கண்பார்வைக்கு
அடங்காத (கண்காணக் கூசும்படி மிகுந்த) அழகு பொழிந்த திருமேனியிலே
வீசும் கிரணங்களின் விரிவு ஆகாயத்தினும்பட்டு அடங்காது பெருகுகின்ற
பெரிய ஒளி உருவமுடைய நம்பிகளை; எதிர்நோக்கும் மெல் இயலுக்கு -
அவர் கண்ட நோக்குடன் ஒன்றுபட எதிரே நோக்குகின்ற மென்மையாகிய
இயலை வாய்ந்த பரவையாருக்கு; எண் கொள்ளாக் காதலின் - மனத்தில்
அடக்கமுடியாத காதலால்; முன்பு.....எழலும் - இதற்குமுன் இவ்வுலகில்
அனுபவத்தில் வராத ஒரு புதிய விருப்பமானது இந்த உலகத்து உள்ளார்
எவரும் இதுவரை காப்பாற்றிக்கொள்ளாத அளவிலே தாம் கைக்கொண்டு
ஒழுகிய; நாணம் - மடம் - அச்சம் - பயிர்ப்பு என்ற பெண்மைக் குணங்கள்
நான்கினையும் அடக்கி மேலே எழுந்தவுடன், 143

     290. (இ-ள்.) முன்னே.....பெருகு ஒளியால் - என் முன்னே பெருகி
வளரும் பேரொளிப் பிழம்பாய்த் தானாகவே வந்து தோன்றும் முருகப்
பெருமானோ?; தன் நேர் இல் மாரனோ - தனக்கு எவரும் நிகரில்லாத
மன்மதனோ?; தார்மார்பின் விஞ்சையனோ? - வாடாமாலை யணிந்த
விஞ்சையர்களில் ஒருவனோ?; மின்.....உடையவனோ? - மின்னலை ஒத்த
சிவந்த சடையையுடைய சிவபிரானது மெய்யருளைப் பெற்றவனோ? -
என்னே.......யாரோ - எனது மனத்தைத் திரித்த இவன் யாவனோ; என
நினைத்தார் - என்று பலவும் நினைந்தார் (பரவையார்). 144

     இவ்விரண்டு பாட்டுக்களும் ஒருமுடிபு கொண்டன.