|
289.
(வி-ரை.) கவின்
பொழிந்த திருமேனி கண்கொள்ளாக் கதிர்
விரிப்ப என்றது அழகிய மேனியானது கண் கூசுமாறு கதிர்களை
விரித்தலாலே. உலகமுவப்ப வலன்ஏர்பு திரிதரு, பலர்புகழ் ஞாயிறு கடற்கண்
டாங்கு, ஓவற விமைக்குஞ் சேண் விளங் கவிரொளி என்ற
திருமுருகாற்றுப்படைக் கருத்தை நோக்குக.
விண்கொள்ளாப் பேரொளியான் -
கதிர் விரித்தலால் சூரியன்
முதலிய பெரிய ஒளிப்பொருள்களின் ஒளிக்கெல்லாம் இடந்தந்திருந்த
விண்ணும் இதைக் கொள்ள இடம் போதாது என்று சொல்லும்படி மிகுந்த
பேர் ஒளியை உடையவன். அநேககோடி இளஞ்சூரியர் விளங்குவதுபோன்ற
சோபை என்க.
எதிர் நோக்கும்
- அவர் நோக்கொடு இவர் நோக்குப் பொருந்த
நோக்கியதால் எதிர் என்றார். நோக்கொடு நோக்கு ஒக்க என்க.
வேட்கை, நாணம் மடம் அச்சம் பயிர்ப்பை வலிந்து
எழலும் -
நாணம் முதலியவற்றை வேட்கை வென்று மேலெழுந்தது. ஒரு பெண்
நாயகனைப் பெறும் முறையிலே நாணம் முதலியவற்றை இழத்தல்
இழுக்காகாது என்க.
வேட்கை - வேள்
- பகுதி. விருப்பம். இஃது எல்லாவகை
விருப்பத்தின்மேலும் செல்லுமாயினும், இங்கு ஒருவேனை ஒருத்தி விரும்பும்
மன விருப்பமாகிய காதலின் மேல் நின்றதைக் குறிக்க எண் கொள்ளாக்
காதலின் என்றார். எண் கொள்ளா - எண்ணத்திற் கொள்ளப்படாத.
முன்பு எய்தாதது ஒரு
வேட்கை - இதற்கு முன் இவ்விருப்பம்
இவர் மனத்து நிகழ்ந்ததில்லை. எனவே தலைவன்பாற் சென்ற காதலாகிய
உள்ளநிகழ்ச்சி குறித்தவாறு.
நாண் முதலிய நான்கும் மகளிர்க்கு இயல்பாயமைந்த
குணங்களாம்.
நாணம் - மகளிர் இயற்கை. மடம் - அறிவிக்க அறிதலும், அவ்வாறு
அறிந்ததை விடாது பற்றுதலும் ஆம் என்ப. அச்சம் - வெளிப்படை.
பயிர்ப்பு - முன் பயிலாத பொருளில் அருவருப்பு.
மண்கொள்ளா
- மேலே சொல்லியவாறன்றி, இதுவரை
மண்ணுலகத்துள்ளே எப்பொருளாலும் கவர்ந்துகொள்ளாப்பெறாத
என்றலுமாம். 143
290. (வி-ரை.)
இஃது ஐயம் என்ற அகப்பொருளமைந்த துறை. 286-ம்
பாட்டில் நம்பிகள் மனத்தே நிகழ்ந்ததுபோல் இது பாவையார் மனத்தே
காட்சியின் பின் நிகழ்ந்ததாம். முன்னே வந்து - நான் காணுமுன்னே தானே
வலிய வந்து. என் முன் என்று கூறுவாருமுண்டு. பின்னர் எதிர் தோன்றும்
என்றமையால் அது பொருளன்றென்க.
எதிர் தோன்றும்
முருகனோ? - முருகன்தான் இவ்வாறு
கண்கொண்டு காணமுடியாத அழகுடைய' கதிரை வீசும் மேனியுடையான்
என்ற நினைவினால் முருகனோ என்னும் உணர்வு முதலில் உண்டாகியது
கவின்பொழிந்த திருமேனியாதலின் முருகனோ என்றார். ஆயிரங்கோடி
காமர் அழகெலாந் திரண்டொன்றாக மேயின என்ற கந்தபுராணங் காண்க.
தன்நேரின் மாரனோ?
- பின்னர்ப், பெருகொளியின்கீழ் அமைந்த
அழகினைக் காணவே அழகுடைய உருவமுடையானொரு மன்மதனோ? என
எண்ணினார். முருகன் தமது பெண்மை நலம் கவர எழுந்தருள ஏதுவில்லை;
எனவே மாரனோ என்று அடுத்து நினைந்தார். இவ்வழகு மாரனது அழகின்
மேம்பட்டு உருவுடன் கூடி விளங்குதலின் தன் நேரின் மாரனோ? என்றார்.
தார்மார்பின் விஞ்சையேனா?
- சைவவிடங்கின் அணியும்,
சாந்தமும், மாலையும், தாருமாகி (276) முன்பெய்தாத காதல் வேட்கை எழச்
செய்தமையின் தார்மார்பின் விஞ்சையனோ என்றார். விஞ்சை - வித்தை;
விஞ்சையன் - வித்தியாதரனுமாம். விஞ்சை - வித்தை - போலி. தார் -
மார்பின் மாலை. உருள்பூந் தண்டார் புரளு மார்பி
|