பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்355

Periya Puranam
291. அண்ணலவன் றன்மருங்கே யளவிறந்த காதலினா  
  லுண்ணிறையுங் குணநான்கு மொருபுடைசாய்ந்
                             தனவெனினும்
வண்ணமலர்க் கருங்கூந்தன் மடக்கொடிய
                              வலிதாக்கிக்
கண்ணுதலைத் தொழுமன்பே கைக்கொண்டு
                              செலவுய்ப்ப,
145

292. பாங்கோடிச் சிலைவளைத்துப் படையனங்கன்
                             விடுபாணந்
 
  தாங்கோலி யெம்மருங்குந் தடைசெய்ய மடவரலுந் தேங்கோதை மலர்க்குழன்மேற் சிறைவண்டு
                            கலந்தார்ப்பப்
பூங்கோயி லமர்ந்தபிரான் பொற்கோயில்
                         போய்ப்புகுந்தாள்.
146

     291. (இ-ள்.) அண்ணல்......எனினும் - பெருமையுடையாராகிய
நம்பிகளிடத்தே கொண்ட எல்லை யில்லாத காதல் காரணமாக, முன்னே
தமது மனத்திலே நிறைவு பெற்றிருந்த நாண் முதலிய பெண்மைக் குணங்கள்
நான்கும் ஒரு பக்கமாகச் சாய்ந்து ஒதுங்கினபோதிலும்; வண்ணம்.........
உய்ப்ப - அழகிய மலரின் மணம் பொருந்திய கரிய கூந்தலை யுடைய
மடமையுடைய கொடி போன்ற பரவையாரை வலிமையுடையாராக
ஆக்குவித்து, நெற்றிக் கண்னையுடைய பெருமானைச் சென்று
தொழவேண்டும் என்ற இறையன்பே பற்றுக் கோடாகப் பிடித்துக் கொண்டு
செல்லும்படி வழிப்பத்திக் கொண்டு போக, 145

      292. (இ-ள்.) பாங்கு........செய்ய - சுற்றும் ஓடிப்போய் வில்லை
வளைத்துப் போர் நிலையனாகிய மன்மதன் எய்யும் அம்புகள் பலவும்கூடித்
தம்மைச்சுற்றிக்கொண்டு எப்பக்கமும் தடை செய்யவும்; (அத்தடைகளை
அன்பு கைக்கொண்ட துணையாற் கடந்து) மடவரலும்......புகுந்தாள் -
பாவையாரும், கூந்தலில் அணிந்த தேன்பொருந்திய புதிய மலர்களாகிய
கோதையின்மேல் சிறகருடைய வண்டுகள் சேர்ந்து பாடிக் கொண்டிருக்கச்
சென்று பூங்கோயில் என்ற ஆலயத்தே எழுந்தருளிய இறைவனது
திருவாலயத்துள்ளே போய்ப் புகுந்தார். 146

      இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிவு கொண்டன. காதலினால் -
குணநான்கும் - சாய்ந்தன - எனினும் - அன்பே மடக்கொடியை வலிதாக்கிக்
கைக்கொண்டு செலவுய்ப்ப - பாணம் - எம்மருங்கும் தடை (செய்ய(வும்) -
(அந்த) மடவரலும் - ஆர்ப்பப் - பிரான் - கோயில் போய்ப் புகுந்தாள் -
என்று முடிக்க.

      291. (வி-ரை.) அளவிறந்த காதல் - முன் எண் கொள்ளாக்
காதலின் என்றமை காண்க.

      உள் நிறையும் குணம் நான்கும் ஒருபுடை சாய்ந்தன எனினும் -
பரவையார் மனத்துள்ளே வேறொன்றும் புகுதற்கு இடந்தராத வண்ணம்
நாற்குணமும் நிறைந்திருந்தன; இப்போது ஆற்றில் வெள்ளம் வந்தபோது
நாணல் சாய்தந்து போல அந்நாணம் முதலிய ஒரு புறம் சாய்ந்து காதல்
வெள்ளத்திற்கு இடங்கொடுத்தன; தாமும் அகலாமல் இருந்தன என்பார்
அகன்றன என்னாது ஒருபுடை சாய்ந்தன என்றார்.

      எனினும் - மேற்பட்டுப் புகுந்த காதலின்மேலும்
வலிமையுடையதாயிற்று என்ற இறையன்பினது மிக்க வலிமையைக் குறித்தது.

      கொடி - துவளுந் தன்மையுடையது ஆதலின் கொடி என்றார்.
முன்னரே தலையிற் பாரமுடையது என்பார் கூந்தலைக் குறித்தார். “புயல்
சுமந்து.........பூத்த விரைக்கொடியோ“ என்ற 286 திருப்பாட்டுக் கேற்ப
இங்கும் கூந்தற் கொடி எனப் பெற்றார். கொடி என்பது கொடி போன்ற
பரவையாருக்கு வந்தது. ஆகுபெயர்.

      வலிதாக்கி - வலிமை யுடையவராக ஆக்குவித்து. தனது வசமிழந்த
நிலையில் இருந்தாராதலின் வலிதாக்கி என்று அஃறிணையாற் சுட்டப்
பெற்றதாம். வலிதாக்கி