|
உய்ப்ப - என்று கூட்டுக.
தொழுகின்ற செயலுக்கு ஏற்றபடி சத்தியுடையதாக
ஆக்காவிடில் அங்குச் செயல் செய்யுமாறில்லை ஆதலின் உய்த்தலின்முன்
வலிதாக்கி என்றார்.
கண்ணுதலைத் தொழுமன்பு
- தம் மனத்தை மாறுபடுத்திய மாரன்
செயலுக்கு மருந்து அவனை எரித்த கண்களையுடைய இறைவனே யாதலின்
அக்குறிப்புப் பரவையார் மனத்திற்றோன்றவே செல்லும் வலிபெற்றார்;
ஆதலின் கண்ணுதலைத் தொழும் அன்பே உய்ப்ப என்று சுட்டினார்.
கைக்கொண்டு செல வுய்ப்ப வலியிழந்தாரைக் கையைப்பிடித்துச்
செலுத்து மாறுபோல அன்பு பரவையாரைப்பற்றிக் கொண்டுபோய் உள்ளே
உய்ப்பவும் (செலுத்தவும்) என்க. 145
292. (வி-ரை.)
பாங்கு - பக்கமாக. ஓடி - மேலே 237-வது
திருப்பாட்டில் சொல்லியபடி நடு நின்றவாறே மனந்திரித்த மன்மதன்
இப்போது இவர் வலிபெற்றுத் தன்னை வென்று சென்று விட்டார் என்ற
நாணத்தால் நிலைபெயர்ந்து ஓடிப் பாணம் விட்டு அவர் எம்மருங்கும்
செல்வதைத் தடை செய்தான் என்பது.
கோலி -
வளைத்துக்கொண்டு - குறிவைத்து வளைத்து. இருநில
முழுதுந் தனதெனக் கோலி - நன்னூல்.
மடவால்
- பெண். மடமையை யுடையாள். உம்மை, இவள்
மடவரலேயாயினும் இவளைக் கைக்கொண்ட அன்பின் துணையாலே
புகுந்தாள் என்ற குறிப்புக் காட்டும் சிறப்பும்மையாம்.
தேங்கோதை மலர்க்
குழல்மேல் - குழலின் தேமலர்க்
கோதைமேல் என்று மாற்றுக.
தேங்கமழ் குழலின் வாசம் திசையெலாம் சென்று
சூழப்
போந்தார் என்று 283 திருப்பாட்டிற் கண்டோமாதலின் இடையுற்ற இந்நினைவுகளிலிருந்து
முன்னினைவைப் புதுப்பிக்க இவ்வாறு கூறினார்.
வண்டார்த்தல்
- பரவையார் போய்ப் புகுந்தாராதலின் நிலை
மாறுபாட்டில் தடைப்படுதலும் செல்லலும் ஆகிய அசைவினால் உண்டாகும்
செயல்.
வளைசிலம்ப
வார்கழல்கள், ஆர்ப்பாவஞ் செய்ய அணிகுழன்மேல்
வண்டார்ப்ப -
திருவாசகம் - திருவெம்பாவை - 12. |
முன்னர் விண்ணும் பணியும் என்று ஆர்த்த வண்டுகள்,
இப்பொழுது பரவையாரை அன்பு கைக்கொண்டு பூங்கோயிலுட் புக
வலிதாக்கிச் செலுத்தக்கண்டு அதனைத் தடை செய்ய மாரன் பாணங்கள்
வலியற்றன என்று ஆரவாரித்தன. காமன் அவ்விண்ணவரில் ஒருவனே
ஆதல் காண்க. அவன் வலிமை ஒதுக்கப்பட்டமை கண்டார்த்தன என்பது
குறிப்பு. மதனன் வில்லிற்குச் சுரும்பு நாண் உண்மையும் கருதுக.
பூங்கோயில்
- முன்னர் 283-ல் பூங்கோயிலுள்ளார் என
உரைத்ததையே தொடர்ந்து கூறியது நடைத்தொடர்பைக் குறித்தது. உரை
முன்னர்க் காண்க.
பொற்கோயில்
- இலக்குமி வரம் பெற்றமை குறிப்பாம்.
கோயிலும் அதன் பெயரும் கூறியபடியால் கூறியது கூறலாகாமை யுணர்க.
நாவலர் காவலர் நின்றார் என நம்பிகள், காட்சியில்
ஈடுபட்டு
நின்றமை கூறிய ஆசிரியர், பரவையாரும் அவ்வாறு நின்றார் என்னாது
நினைந்தார் (144) புகுந்தார் என, நில்லாமலே செல்லுதல் கூறியது
பரவையாரது பெண்மைக் குணத்தின் திண்மையைக் காட்டியபடியாம்.
போய்ப்புக்காள் - என்பதும் பாடம். 146
| 293.
|
வன்றொண்ட
ரதுகண்டென் மனங்கொண்ட
மயிலியலி
னின் |
|
| |
றொண்டைச்
செங்கனிவா யிளங்கொடிதான் யா?
ரென்ன,
|
|
|