| |
வன்றங்கு
முன்னின்றா “ரவர்நங்கை பரவையார்
சென்றும்பர் தரத்தார்க்குஞ் சேர்வரியா“
ரெனச்செப்ப,
|
147 |
| 294.
|
“பேர்பரவை
பெண்மையினிற் பெரும்பரவை
விரும்பல்கு
|
|
| |
லார்பரவை
யணிதிகழு மணிமுறுவ லரும்பரவை சீர்பரவை யாயினா டிருவுருவின் மென்சாப
லேர்பரவை யிடைப்பட்ட வென்னாசை
யெழுபரவை“,
|
148 |
| 295.
|
என்றினைய
பலவுநினைந் தெம்பெருமா
னருள்வகையான் |
|
| |
முன்றொடர்ந்து வருங்காதன்
முறைமையினாற்
றொடக்குண்டு
“நன்றெனையாட் கொண்டவர்பா
னண்ணுவ“னென்
றுண்மகிழ்ந்து
சென்றுடைய நம்பியும்போய்த் தேவர்பிரான்
கோயில்புக,
|
149 |
| 296.
|
பரவையார்
வலங்கொண்டு பணிந்தேத்தி
முன்னரே
|
|
| |
புரவலனார்
கோயிலினின் றொருமருங்கு
புறப்பட்டார். விரவுபெருங் காதலினான்
மெல்லியலார் தமைவேண்டி யரவினா
ரம்புனைந்தா ரடிபணிந்தா ராரூரர் |
150 |
293.
(இ-ள்.) வன்றொண்டர்......என்ன
- அவ்வாறு பரவையார்
பூங்கோயில் போய்ப்புக்கதை நம்பிகள் பார்த்து “எனது மனதைத் தனது
இடமாகக் கொண்ட மயில் போன்ற சாயலையும், இனிய கொவ்வைச்
செங்கனிபோன்ற வாயையும் உடைய இளங்கொடி போன்ற இப்பெண் யார்?“
என்று கேட்ப; அன்று......செப்ப - அப்போது அவ்விடத்தில் அவர்
முன் நின்ற அடியார்கள் “அவர் தாம் நங்கைபரவையார் என்ற
பேருடையவர்; தேவத் தன்மை வாய்ந்தவர்களுக்கும் போய் அடைவதற்கு
அரியவர்“ என்று சொல்ல; 147
294. (இ-ள்.)
பேர்பரவை - இவரது பேர் நங்கை பரவை;
பெண்மையினில் - இவரிடத்துக் காணும் பெண்மைக் குணங்களைக்
கூறுமிடத்து; பெரு உம்பர் அவை விரும்பு அல்குலார் பரவு ஐ - பெரிய
தேவர் சபை விரும்புகின்ற திலோத்தமை முதலிய அரம்பையர்களும்
துதிக்கத் தக்க தெய்வமாம்; அணிதிகழும் மணிமுறுவல் அரும்பர் அவை -
மேலே தொங்கிய மூக்கினணியில் உள்ள முத்துக்களினும் மேம்பட்டு
விளங்கும் அழகிய பல்வரிசையோ முல்லையரும்புகளேயாம்; சீர் பரவு ஐ
ஆயினாள் - (சீர் - இலக்குமியும், பரவி - விரும்பும், ஐ - அழகு,
ஆயினாள் - உடையவர்) இலக்குமியும் விரும்பும் அழகுடையார்;
திருவுருவு இன் மென் சாயல் - கண்டாரால் விரும்பப்படும் தன்மை
நோக்கமுடைய இவரது உருவத்துடைய இனிய மெல்லிய சாயலின்;
ஏர் பரவை இடைப்பட்ட - அழகிய பரவுதலிடையில் அகப்பட்ட;
என் ஆசை எழுபரவை - எனது விருப்பமானது எழுகடல் போன்றதாம். 148
295. (இ-ள்.)
வெளிப்படை மேலே குறித்தபடி பாராட்டி
இவைபோன்ற பல எண்ணங்களையும் நினைந்தவராய், எமது இறைவன்
அருளிய வழியினாலே, முன்னிருந்தே தொடர்ச்சியாய் வரும் காதலாகிய
தொல் விகுதியினாலே கட்டுப்பட்டவராய், “நன்றாக என்னை ஆளாகக்
கொண்ட இறைவனிடத்தே சென்று சேர்வேன்“ என்ற கருத்துடனே,
உள்ளத்திலே மகிழ்ச்சியுடன் செல்வாராய் ஆளுடைய நம்பிகளும் போய்த்
தேவதேவனாகிய இறைவனது திருக்கோயில் புகுதலும்; 149
296. (இ-ள்.)
வெளிப்படை (பொற்கோயில் போய்ப் புக்க) பரவையார்
அதனை வலமாக வந்து இறைவனைத் தொழுது துதித்துத் தமது வழக்கப்படி
வழிப்பாட்டை முடித்துக்கொண்டு, நம்பிகள் கோயில் புகும் முன்பே,
இறைவனது திருக்கோயிலிலிருந்து வேறு ஒரு பக்கமாக வெளிச் சென்றார்.
தம்மிடத்தே வந்து பொருந்திய பெரிய
|