|
வேட்கையினாலே மென்மையாகிய
இயலுடைய பரவையாரைத் தமக்குத்
தரும்படியாக நம்பியாரூரர் பாம்பு மாலைகள் பூண்ட பரமனாரது
திருவடிகளை வணங்கினார். 150
இந்நான்கு
பாட்டுக்களும் ஒரு முடிபுகொண்டன.
வன்றொண்டர் - கண்டு - ‘இளங்கொடி - யார்?'
என்ன, -
முன்னின்றார் - ‘பரவையார் - அரியார்' எனச் செப்ப, நம்பியும், -
‘பேர்பரவை..........என்ஆசை எழுபரவை' என்று பலவும் நினைந்து -
தொடக்குண்டு - ‘ஆட்கொண்டவர்பால் நண்ணுவன்' என்று உண்மகிழ்ந்து
- கோயில்புகப், - பரவையார் - முன்னரே - ஒரு மருங்கு - கோயிலினின்று
- புறப்பட்டார், - மெல்லியலார் தமைவேண்டி - ஆரூரர் - ஆரம்
புனைந்தாரது - அடிபணிந்தார் - எனத் தொடர்ந்து முடித்துரைத்துக்
கொள்க.
293. (வி-ரை.)
மனம்கொண்ட - மனத்தைத் தன்வசமாக்கி
யிடங்கொண்ட.
இளங்கொடி - முன்னர் விரைக்கொடி - மடக்கொடி
என்றதற்கேற்ப
இளங்கொடி என்றார். இங்கு இளங்கொடி என்பது பண்புத் தொகைப்
புறத்துப் பிறந்த அன்மொழியாய்க் கொடிபோன்றாரைக் குறித்தலின் யார்?
என்ற வினைமுடிபு கொண்டது.
யார் என்ன?
- யாரோ என்று முன்னர் அதிசயித்தும் (286)
நினைந்தும் (290) நின்றவர் இப்போது தமக்குள்ளே யார்? என்றார்.
ஒருவரையும் நோக்கிக் கேட்கா விடினும், அது சொல்லாய்க் கேட்கப்படவே
அப்போது அவ்விடத்து முன்னே நின்றார் விடைசொன்னார் என்றபடி.
மனங்கொண்ட மயிலியல் முதலியன பிறர்பால் அறிவிப்பது மரபன்று என்க.
நங்கை பரவையார்
- பெண்மையிற் சிறந்தாரை நங்கை என்பது
மரபு. நங்கை பரவை என்பதே இவரை அழைத்த மரபுபோலும். தஞ்சை
இராசராசச் சக்கரவர்த்தியார் தமது இராசராசேச்சுரத்திலே தாபித்துள்ள
இவரது செப்புப் படிமத்தில் நங்கை பரவை என்று பெயர்
தீட்டப்பெற்றிருத்தலும் அறிக.
உம்பர் தாத்தார்க்கும் சேர்வரியார்
- யார்? என்று கேட்டார்க்குப்
பேரோடு, தன்மையும் உரைத்தல் மரபாதலின் அரியார் என்று அறிவித்தனர்
என்க. உம்பர் தரத்தும் யார்க்கும் சேர்வரியார் என்க. மக்கள் தேவர் நரகர்
என்ற மூவகை உயர்திணையிலும் தேவர் உயர்ந்தோர்; அவர் தரத்திலே
உள்ளார்க்கும் என உம்மை உயர்வு சிறப்பு. உயர்திணை எல்லாம்
அடங்கும்பொருட்டுத் தேவரே - அன்றி அவர் தரத்தாரே -
யாவரேயாயினும் என்பார் தரத்தும் ஆர்க்கும் என்றார். உம்மை தொக்கது.
உம்பரின் மேலாயினவர் விட்டுணுமூர்த்தி; அவருக்குக்
கிருட்டிணாவதாரத்திற் சிவதீக்கை செய்து அவர்முடிமேல் அடிவைத்தவர்
உபமன்னிய முனிவர் (24); அவரால் துதிக்கப் பெறுபவர் நம்பிகள். இவர்
அவர்க்கே உரியவர் அல்லது உம்பர் தரத்தார்க்கும் சேர்வரியார் என்றபடி.
147
294. (வி-ரை.)பரவை
- தலைவனுக்குத் தலைவியினது பெயர்
கேட்டலும் அதில் ஓர் விருப்பம் நிகழ்வது ஒரு அகப்பொருள் உண்மை.
பெயர் வினாதல் என்ற துறையில் வரும் பாட்டுக்களைக் காண்க. அவ்வாறே
பரவையார் என்ற பெயர் கேட்டலும் நம்பிகள் நாவலர் காவலராதலின்
அப்பெயரிற் சென்ற விருப்பத்தை இவ்வாறு அறிவிக்கின்றார். ஒரு பாட்டில்
எழுபரவை அடக்கிய நாவலர் என்று சேக்கிழார் பெருமானை மகாவித்வான்
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் பாராட்டியுள்ளார்கள்.
முறையினொரு சிறுதூக்கி னெழுபரவை யும்புக முடித்துற நிறுத்தா னிவன்
மொழியெங்க டம்பிரான் வல்லப முணர்ந்திலைகொல் - சேக்கிழார்
பெருமான் பிள்ளைத் தமிழ். இதில் உள்ள பரவை எழு என்பதை ஆசிரியர்
என் ஆசை எழுபரவை என்று முடித்து இரட்டுற மொழிந்து காட்டியதும்
ஒரு அழகாம். கடல்கள் ஏழென்பர்.
|