| 301.
|
என்று
சாலவு மாற்றல ரென்னுயிர்,
|
|
| |
நின்ற
தெங்கென நித்திலப் பூண்முலை
மன்றல் வார்குழல் வஞ்சியைத் தேடுவான்
சென்று தேவா சிரியனைச் சேர்ந்தபின், |
155 |
| 302.
|
காவி
நேர்வருங் கண்ணியை நண்ணுவான் |
|
| |
யாவ
ரோடு முரையியம் பாதிருந்
தாவி நல்குவ ராரூரை யாண்டவர்
பூவின் மங்கையைத் தந் தெனும் போழ்தினில், |
156 |
| |
|
|
| 303.
|
நாட்டு
ல்லிசை நாவலூ ரன்சிந்தை |
|
| |
வேட்ட
மின்னிடை யின்னமு தத்தினைக்
காட்டு வன்கட லைக்கடந் தென்பபோற்
பூட்டு மேழ்பரித் தேரோன் கடல்புக, |
157 |
| |
|
|
| 304. |
எய்து
மென்பெடை யோடிரை தேர்ந்துண்டு |
|
| |
பொய்கை
யிற்பகல் போக்கிய புள்ளினம்
வைகு சேக்கைகண் மேற்செல வந்தது
பையுண் மாலை தமியோர் பனிப்புற. |
158 |
301. (இ-ள்.)
என்று.......என - மேலே குறித்தபடி பலவும் சொல்லி
மிகவும் தரியாராய் எனது உயிர் (பரவை) எங்குச் சென்று நின்றது என்று;
நித்திலம்......சேர்ந்தபின் - முத்துக்கள் அழுத்திய அணிகள் பூண்ட
முலையினையும், வாசனை பொருந்திய அழகிய கூந்தலையும் உடைய
வஞ்சிக்கொடி போன்றவராகிய பரவையாரைத் தேடுதற்காகப் போய்த்
தேவாசிரிய மண்டபத்தை அடைந்த பின்னர், 155
302. (இ-ள்.)
காவிநேர்வரும்.......இருந்து - கருங்குவளை மலரே
நேராக எதிராய் வருகின்றதோ என்று சொல்லத்தக்க கண்களையுடைய
பரவையாரைப் பெறுவாராகிய நம்பிகள் ஒருவரிடமும் ஒரு பேச்சும் பேசாமல்
அங்கு வீற்றிருந்து; ஆவி நல்குவர்........போழ்தினில் - (அமரர் நாடாளாதே)
ஆரூரைத் தமக்குத் தலைநகராக வைத்து ஆட்சி புரிபவராகிய இறைவர்
அழகுடைய இனிய பரவையை எனக்குத் தந்து அதன்மூலம் எனது
உயிரையும் எனக்குத் தருவர் என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதில், 156
303. (இ-ள்.)
வெளிப்படை. (உலகில்) நல்ல புகழை நாட்டும்
திருநாவலூரராகிய நம்பிகளது மனம் விரும்பிய மின்போன்ற
இடையினையுடைய பரவையாராகிய இனிய அமுதத்தைக் கடலைக்
கடந்துபோய்க் காட்டுவேன் என்று செல்வதுபோல, வெவ்வேறாகிய ஏழு
நிறக் குதிரைகள் பூட்டிய தேரில்வரும் சூரியன் மேல்கடலிற் செல்ல (சூரியன்
அத்தமிக்க), 157
304. (இ-ள்.)
எய்தும்......செல - பிரியாமல் தம்மோடு பொருந்திய
மென்மைத் தன்மையுடைய பெட்டைகளுடன்கூடிப் பல இடத்தும் இரைதேடி
உண்டு பொய்கையிலே பகற் காலத்தை உண்டாட்டயர்ந்து இனிதாகக் கழித்த
பறவையினங்கள் தாம் தாம் ஒடுங்கும் கூடுகளைச் சென்று அடையவும்;
தமியோர் பனிப் புற - (அப்பறவைகளைப்போலத் தத்தம் துணையுடன் கூடி
இனையாயின்றித்) தனித்துள்ளார் பயந்து நடுங்கவும்; பையுள் மாலை
வந்தது - பிரிந்தார்க்குத் துன்பஞ்செய்யும் தன்மையுடைய மாலைப் போது
வந்து கூடிற்று. 158
இந்நான்கு பாட்டுக்களும் மேற்கூறிய மூன்று பாட்டுக்களின்
கருத்தைத் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன. (அருள் எந்நெறிச்
சென்றதே?) - என்று - ஆற்றலர் - என, - வஞ்சியைத் தேடுவான்
சென்று - சேர்ந்தபின், நண்ணுவான் -
|