பக்கம் எண் :


366 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

இருந்து, - எனும் போழ்தினில் - தேரோன் கடல்புக, - புள்ளினம்
சேக்கைகள் மேற்செல, - தமியோர் பனிப்புற, பையுண்மாலை வந்தது -
என்று கூட்டிமுடிக்க.

     301. (வி-ரை.) என்று மேலே கூறிய மூன்று பாட்டுக்களிலும் குறித்தபடி
சொல்லி. என் உயிர் நின்றது எங்கு என - எனது உயிர்போன்ற பரவை
எங்கு நின்றது என்று சொல்லி. எனது உயிரே இப்போது என் உடலிலில்லாது
புறம்பே வேறொன்றிற் சென்று தங்கியது போன்றதாம். அவ்வொன்று எங்கு
நின்றது என்பதும் குறிப்பு. உயிர்போன்றாரை உயிர் என்று உருவகப்படுத்திக்
கூறியதால் நின்றார் என்னாது நின்றது என்றார். அப்படி என் உடலிலிருந்து
சென்றிருப்பதாகத் தோற்றும் என் உயிரைத் திருவாரூர் இறைவர் எனக்கு
அளித்துக் காப்பார் என்பார் ஆவி நல்குவர் என்றமையுங் காண்க.
உயிர்போன்ற பரவையாரைக் கொடுத்தால் எனக்கு உயிர் கொடுத்தவராவர்
என்பது.

      வஞ்சி - காட்சி காட்டி மறைத்தமையால் வஞ்சிக்கும்
தொழிலுடையவர் போன்றனர் என்பது குறிக்க வஞ்சி என்ற பெயராற்
கூறினார். “பஞ்சிற் றிருந்தடி நோவப் போயெனை, வஞ்சித்திருந்த மணியறை
யிதுவே“ (ஆளுடைய பிள்ளையார் - திருமும் மணி - 16) என்ற பதினொராந்
திருமுறையும் காண்க.

      தேடுவான் சென்று - தேடும் பொருட்டுப் போய்.

      தேவாசிரியனைச் சேர்ந்தபின் - தேவாசிரிய மண்டபத்தை
அடைந்தபின். கொடியாகிய அது (அருள்) எந்நெறிச் சென்றதே (298 -
299 - 300) என்று தேடுவான் சென்று பின் தேவாசிரியனைச் சேர்ந்தார்;
அதன்பின். (தேவாசிரியன் - 137 பார்க்க).

      மன்றலங்குழல் - என்பது பாடம். 155

      302. (வி-ரை.)
காவி நேர்வருங் கண்ணி - கண்ணுக்கு நீலமலர்
உவமானமாம். ஆதலால் நேர் (ஒப்பு) பெற்று வருகின்ற. கண்ணி -
கண்களையுடையவள் (280). ‘மானிளம் பிணை'யாய் இளமையிலிருந்து பின்னர்
(286) ‘விற்குவளை'யாயினதையே நம்பிகள் கண்டாராதலாலும், அவ்வாறு கடை
பிறழுங் (288) கெண்டை நெடுங்கண் வியப்ப உரவோனைப் பரவையாருங்
கண்டார்' ஆதலாலும், காவிபோன்று தம் எதிர் வரும்கண் என்றார். காவி -
நீலம். மன்தன் அம்புகள் ஐந்தில் கடைசியாக வருவது காவி. வரும்கண்
என்னவே முன்னை நான்கு அம்புகளும் நடுநின்ற படைமதனன் விட்டாயிற்று
என்பது குறிப்பு. “மலர்நீலங், கொல்லுமத னம்பின் குணம்“ என்பது அதன்
இலக்கணம் ஆதலின்“ என்னுயிர் நின்றது எங்கு“ என்றும், “மங்கையைத்
தந்து ஆவியையும் நல்குவர்“ என்றும் குறிப்பிட்டார் என்க.

      ஆரூரை ஆண்டவர் - “அமரர் நாடாளாதே ஆரூராண்ட“ -
திருத்தாண்டகம்.

      பூவின் மங்கை - பூ - அழகிய, இன் - இனிய, மங்கை - பரவை -
மங்கைப் பருவமுடையார் என்பதும் ஆம். “அவளும் பன்னீராட்டைப்
பிராயத்தளாய்“ என்று பெண் மக்களின் மணப்பருவம் கூறும் தமிழ்
இலக்கணமும் காண்க. பதுமினி சாதிப் பெண் என்றலுமொன்று. பூவின்
மங்கை - திருமகள் போன்ற பரவை என்று உரைப்பாருமுளர். அவ்வுரை
பொருந்தாமை மேலே காட்டினாம். 286 - 290 பாட்டுக்களின் உரை காண்க.
பூவின் மங்கை என்றதனால் முன்னம் கயிலையிற் பூக்கொய்யுங்காற் கண்ட
கமலினியாரை என்ற குறிப்புமாம். 156

      303. (வி-ரை.) நாட்டும் நல்இசை நாவலூரன் - நல் இசையை
(உலகில்) நாட்டும் திருநாவலூரர் என்று கூட்டிப் பொருள் உரைக்க.

     சிவபெருமானது புகழையும் அடியார் புகழையும் உலகில் நிலவச்
செய்வதற்கே அவதாரஞ் செய்தாராகலின் நல்லிசை நாட்டும் நாவலூரன்
என்றார். “மாதவஞ் செய்த தென்திசை வாழ்ந்திடத், தீதிலாத் திருத்
தொண்டத்தொகை தரப் போதுவார்“ என்று முதலிற் குறித்தமை காண்க.
“பொருள்சேர் புகழ்“ என்ற குறளுக்குப் பரிமேலழகர் உரைத்ததுபோல,
ஏனையோர் இசைகள் ஒன்றும் முற்றும் நல்லன ஆகாமையின் அரன்