பக்கம் எண் :


368 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

செய்கின்றானாதலால் இவ்வேழ்பரித்தேர் செல்வதாய் உபசரித்துக் கூறுவது
தமிழ் நூல் மரபென்றர். பூட்டும் ஏழ்பரி என்றதனால் அவை ஏழும்
ஒன்றுசேர்ந்து கட்டப் பெற்றதாய் உள்ளதாகும் ஞாயிற்றின் கதிர் என்பது
குறிப்பாம். கைக்கிளையிற் கவல்வார்க்கு இரவு கடல்போன்றதாம்; ஆதலின்
நானும் (இரவாகிய) கடல் கடந்து காட்டுவன் என்ற தொனிப் பொருள்
பெறுமாறும் காண்க.

     கடல்புக - உபசாரவழக்கு. கடலுட்புகுவது போலச் செல்ல 157

      304. (வி-ரை.) இப்பாட்டில் இயற்கை என்னும் தன்மை நவிற்சி யணி
ததும்பிச் சிறந்து விளங்குதல் அறிந்தனுபவிக்கத்தக்கதாம். மாலை - புள்ளினம்
சேக்கை மேற் செலவும் - தமியோர் பனிப்புறவும் - வந்தது என்று கூட்டுக.

      எய்தும் என்றமையாலே பறவைக்கூட்டம் தத்தம் பெடைகளோடு கூடி
இரை தேர்ந்துவாழும் இயல்பினையும், மென்பெடை என்றதனால் அவற்றிலே
பெட்டைகளுக்குக் காட்டப்பெறும் அன்பினியல்பையும், இரை தேர்ந்து உண்டு
எனவே பறவைகளின் இரையாகிய தானிய மணிகளும், மீன்முதலியனவும்
பிறவும் அங்கங்குச்சென்று இயல்பினையும், பொய்கையிற் பகல் போக்கிய
என்றமையால் உணவு கிடைக்குமிடம் பொய்கை என்னும் இயல்போடு
இக்காலத்தும் மக்கள் விரும்பிச்செல்வதுபோல் வேனிற்கால இன்ப
வாழ்க்கைக்கு உரியது பொய்கை எனும் இயல்பினையும், வைகு
சேக்கைகள் - என்றமையால் பறவைகள் தத்தமக்கு வீடுகளாகக் கூடுகட்டி
அவற்றிற் பள்ளி முதலியவையும் அமைத்துச சுகவாழ்வு வாழும்
இயல்பினையும், மேற்செல என்றமையால் மாலைக்காலம் ஆனவுடன்
பறவைகள் கூடுநோக்கிச் செல்லும் இயல்பினையும், புள்இனம் என்றதனாலே
அவை கூட்டம் கூட்டமாய் வாழும் இயல்பினையும், இனமாய்க் கூடியபோதே
இன்பமுறும் இயல்பினையும், பிறவற்றையும், எடுத்துக் காட்டுவதாய், இவ்வாறு
இயற்கை அழகு நிரம்ப இப்பாட்டுத் தன் சிறிய உருவத்திற் கண்ணாடிபோலப்
பெரிதும் விளங்குதல் கண்டு மகிழ்க.

      பையுள் மாலை - சேர்ந்தார் - பிரிந்தார் - என்பதின்றியே,
மாலையின் பொது இலக்கணம் இருள் தருவதாதலின் பையுள்மாலை என்றார்.

      தமியோர் பனிப்புஉற - (தமி - தனி); தமியோர் - துணையுடன்
கூடாமல் தனித்து வாழ்பவர். அவரவர் தனித்திருந்தாலும் தத்தம்
துணையைப் பொருந்திய உள்ளத்தாராதலாலும், அதுவே பனிப்புறுதற்குக்
காரணமாதலாலும். தமியோர் என்று பன்மை விகுதிபெற்றது. தனித்து
வாழ்வோர் பலரும் என்று உரைத்தலுமாம். எல்லார்க்கும் பையுள் செய்வது
மாலையின் பொது இலக்கணமும், தமியோரைப் பனிப்புறச் செய்தல் அதன்
சிறப்பு இலக்கணமுமாம். தனித்து வழிச்செல்வோருங், வீட்டில் துணையின்றித்
தனித்து வாழ்வோரும் பொருள் வகையிலும் நடுக்கமுறுதல் உலகியல்பிற்
காண்க. தமியோர் என்பது இங்கே தனித்து நின்ற நம்பிகள் - பரவையார்
எனும் இவ்விருவரும் என்று சிறப்பாலும் பொருள் தருவலும் காண்க.

      ஏழ்பரித் தேரோன் கடவுல்புக மாலை வந்தது என்க. காரண காரியப்
பொருளில் வந்ததாம். கடல்புகுதல் காலத்தின் ஒரு பகுதியின் தொழில்.
மாலைவருதல் காலப் பகுதி மற்றொன்றின் தொழில். இவற்றில்
(கடல்புகுதலாகிய) ஒன்றையே (மாலை வருதலாகிய) மற்றொன்றாக மயங்கி
யறிதல் கூடாததாம். ஒவ்வொன்றிற்கும் வெவ்வேறு குணமுடைமையின் இவை
தனித்தனிக் காலக் கூற்றின் வெவ்வேறு பொருள் ஆகிய பகுதிகள் என்பது.

“வருங்கறைப் பொழுது நீங்கி மல்கிய யாமஞ் சென்று
சுருங்கிட வறிந்த புள்ளின் சூழ்சிலம் போசை கேட்டு“
                           - கண் - புரா - 123

என்று பின்னர்க் கூறுமிடத்துங் காண்க.