|
இவ்வாறே
வடமொழியிலும் போசராசர் சபையில் ஒரு கவி சூரியன்
மேல்கடல் விழுந்தான் என்ன, அதுகேட்ட ஒரு பெண்கவி பறவைகள்
மரப்பொந்துகளில் அடைந்தன என்ன, இரண்டுங் கேட்ட காளிதாச
மகா கவி மதனன் தனித்த யுவ - யுவதிகளிடம் மெல்ல அடைவான்
என்றார் எனக் கூறியதாக உள்ள கவியின் அழகும் இங்கு வைத்துக் காண்க.
மேற்செல - பனிப்பற - மாலைவந்தது - என்று இரண்டும்
சேரச்
சொன்னமையின் மாலையாகிய ஒரு பொருளே அவரவர் பக்குவ நோக்கிச்,
சேர்ந்தார்க்கு விருப்பும், பிரிந்தார்க்குப் பனிப்பும் தருவதாம் எனக் குறிப்பித்த
அழகு காண்க. இரண்டு செயலும் செய்வது ஒரே பொருள் என்பார்
மேற்செலவுக்கும் பனிப்புறுதலுக்கும், இடையில் மாலையை வைத்துக்
கூறினார். பிரிந்த வழியே பனிப்புளதாம் எனும் அகப்பொருளைக் குறிக்க,
இனம் சேக்கை மேற்செல என்பதினின்றும் பையுள் மாலையை இடையிற்
கொடுத்துப் பனிப்புற என்று பிரித்துக் கூறினார்.
பனித்தல்
- நடுக்கமுறுதல்; நோயுறுதல். புறத்தே மாலையின்
குளிராலும், அகத்தே வேட்கையின் வெப்பத்தாலும் நோயுறுதல் ஈண்டுக்
கருதப்பெற்றது.
மேற்செல
- இரைதேரும்போதும், உண்ணும்போதும், பொய்கையில்
ஆடல்பாடல் புரியும்போதும் என்றிவ்வாறு பகல்முழுதும், பின்னர் மாலையிற்
சேக்கைக்குச் செல்லும்போதும், இரவிலும், எப்போதும் இணைபிரியாது
ஆனந்தமாக வாழும் பறவைகளின் வாழ்வு ஒரோர் காலத்துமட்டும்
இணையாகக்கூடி வாழும் மனிதர் வாழ்வை விட மகிழ்ச்சி தருவது என்ற
பொருளும் குறிப்பாற் பெறுவது காண்க. இணை பிரிந்தோர் - அவ்வாறு
பிரியாது கூடி மகிழ்வோரைக் காணில் தம் துன்பம் மிகப் பெறுவர் என்பது
உலக இயல். புள்ளினம் பெடையோடு பொய்கையிற் பகல் போக்கிச் சேக்கை
மேற்சொல்ல, அது கண்டு தமியோர் பனிப்புற - என்றுரைத்தலுமாம்.
சுற்றம்
பலமின்மை காட்டித்தன் றொல்கழ றந்ததொல்லோன்
சிற்றம் பலமனை யாள்பர மன்றுதிண் கோட்டின்வண்ணப்
புற்றங் குதர்ந்துநன் னாகொடும் பொன்னார் மணிபுலம்பக்
கொற்ற மருவுகொல் லேறுசெல் லாநின்ற கூர்ஞ்செக்கரே |
(346) |
| |
|
நீகண்
டனையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான்
சேய்கண் டனையன்சென் றாங்கோ ரலவன்றன் சீர்பெடையின்
வாய்வண் டனையதொர் நாவற் கனிநனி நல்கக்கண்டு
பேய்கண் டனையதொன் றாகிநின் றானப் பெருந்தகையே |
(84) |
என்ற திருக்கோவையார்த்
திருவாக்குகளின் கருத்துக்களும் காண்க. 158
| 305. |
பஞ்சின்
மெல்லடிப் பாவைய ருள்ளமும்
|
|
| |
வஞ்ச
மாக்கடம் வல்வினை யும்மரன்
அஞ்செழுத்து முணரா வறிவிலோர்
நெஞ்சு மென்ன விருண்டது நீண்டவான்.
|
159 |
(இ-ள்.)
வெளிப்படை. பஞ்சினும் மெல்லிய பாதங்களையுடைய
பாவைபோன்றாரது உள்ளமும், வஞ்சனை செய்யும் மாக்களுடைய வலிய
வினையும், அரனுடைய திருவைந்தெழுத்தையுமெண்ணாத மடவோர்களது
நெஞ்சும், போல நீண்ட பெரிய வானம் இருளடைந்தது.
(வி-ரை.)
பரவையர் உள்ளம் - பாவையர் - பரவைபோன்ற
விலைமாதரை என்பர். பஞ்சின் மெல்லடி. மைவிழியார் மனையகல்
என்புழிப்போல விலைமாதர்களின் வஞ்சனைக் கோலத்தைச் சுட்டியது.
பின்னர் (307) தம் ஆருயிர், வரன்கை தீண்ட மலர்குல மாதர்போல்
எனக் குலமகளிர் இயல்பை வேறுவைத்துக் காட்டிய
|