| 312.
|
அடுத்து மேன்மே
லலைத்தெழு மாழியே
|
|
| |
தடுத்து
முன்னெனை யாண்டவர் தாமுணக்
கடுத்த நஞ்சுன் றாங்கக் கரங்களா
லெடுத்து நீட்டுநீ யென்னையின் றென்செயாய்? |
166 |
இது
கடலை நோக்கிக் கூறியது. சமுத்திரோபாலம்பனம் என்பர்.
(இ-ள்.)
அடுத்து.......ஆழியே - மேலும் மேலும் அடுத்து
அலைகளை வீசி எழுகின்ற கடலே; தடுத்து.......நீட்டுநீ - பிறதேவர்களை எல்லாம் துன்புறுத்திய
நஞ்சை, என்னை முன்னே தடுத்து ஆட்கொண்ட இறைவனே உண்ணும்படி உன் அலைகளாகிய கைகளினாலே
எடுத்து நீட்டிக் கொடுத்த
நீ; என்ன இன்று என்செயாய்? - என்னை இன்றைக்கு என்ன
செய்யமாட்டாய்?
(வி-ரை.)
அடுத்து மேல்மேல் அலைத்து எழும் - கடலினது
ஆரவார மிகுதி கூறியவாறு. பிரிந்தார்க்கு வருத்தம் மிகச் செய்வது கடலின் ஆரவாரமென்பது
அகப்பொருளிற் காணும் உண்மைக் குறிப்பாம்.
அலைத்து எழும்
- ஆழியே! அலைத் தெழுதலே உனது
இயல்பாயிற்று. ஆதலின் பிறரையும் அலைத்தல் உனது தொழிலுமாயிற்று. உன்னையே அலைத்து
எழுவதன்றிப் பிறரையும் அடுத்தடுத்து மேன்மேலும் அலைப்பாயாயினாய் என்றபடி. அலைத்து
- வருத்தி.
எனையாண்டவர் தாம்
உண - எனையாண்டவர்க்கும், அவர் தாமே உண்ணும்படி. உயர்வு சிறப்பு உம்மை
தொக்கது. தாம் - அவர் தாமே.
எவரும் தாங்கலாகாமையில் அவர் தாமே உண்ண.
எடுத்து நீட்டு நீ
- உண்பதற்கு நஞ்சு கொடுக்கின்றோமே என்று சிறிதும் மறைவும், நாணமும், அச்சமுமின்றி
வெளிப்படையாய் எடுத்து
நீட்டிய நீ.
என்னை
- நானே நேரிற் பெற்றுக்கொண்டு போயினேன். (ஆலாலசுந்தரன் என்ற பெயர்க்காரணம்
காண்க.) ஆதலின் உன் தன்மை நேரில் அறிந்துள்ளேனாகிய என்னை என்க. என் தலைவனுக்கே
வெளிப்பட நஞ்சு கொடுத்த நீ என்னை என்னதான் செய்யமாட்டாய் என்ற குறிப்பு.
இன்று
- இன்றைக்கு. நாளை மணம் நிகழ்ந்த பின் ஒன்றும் செய்ய இயலாது என்க.
| 313.
|
பிறந்த
தெங்கள் பிரான்மல யத்திடைச்
|
|
| |
சிறந்த
ணைந்தது தெய்வநீர் நாட்டினிற்
புறம்ப ணைத்தடம் பொங்கழல் வீசிட
மறம்ப யின்றதெங் கோ?தமிழ் மாருதம்! |
167 |
இது
தென்றலை நோக்கிக் கூறிய கூற்று.
(இ-ள்.)
தமிழ் மருதம்! - இனிய தென்றலே!; பிறந்தது
........ மலயத்திடை - நீ பிறந்தது எங்கள் பெருமானாகிய இறைவனுடைய பொதிய மலையிலேயாம்;
சிறந்து ........ புறம்பணைத் தடம் - (அவ்வாறு பிறந்த இடத்தினின்று இங்குச் சிறப்புப்பெற்று
வந்து) சேர்ந்த வழியாவது தெய்வத் தன்மை பொருந்திய சோழநாட்டுத் தடாகங்களின்
வழியாம்; பொங்கு ..... எங்கோ? - (இவ்வாறாகவும்) தீக் காற்று வீசும்படியாக நீ
வன்மை பழகியது எங்கேயோ? (மாருதம் - அண்மைவிளி).
(வி-ரை.)
தமிழ் - இனிமை. இனிய மொழியாதலின் தமிழ்
மொழிக்குக் காரணப் பெயராய் வந்ததென்பர். தமிழ் தழீஇய சாயல்
என்றதும் காண்க. மலயத்திலே தமிழ் முனியிருத்தலின் அங்கே பிறந்த மாருதம் தமிழ்
மாருதமாயிற்று என்று கொண்டு தமிழுடன் பயின்ற மாருதம் என்றுரைத்தலுமொன்று.
|