பக்கம் எண் :


378 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     எங்கள் பிரான் - எமது இறைவனுடைய மலையிலே பிறந்தனை
யாதலின் அந்நண் புரிமையால் எங்களுக்கு இடையூறு செய்தலாகாது என்ற
குறிப்பு. பிரான் - தண்ணிய அருளுடையான். பெருமான் என்பதன்மரூஉ
என்றுங் கூறுவர். “சுழலார் துயர் வெயிற் சுட்டிடும் போதடித் தொண்டர்
துன்னும் நிழலா“கும் திருவடிகளையுடையவன்.

      மலயம் - பிரானது குளிர்ந்த சார்பன்றியும் தன் இயல்பாலேயும்
குளிர்ந்தது. எனவே நீ பிறந்த இடம் இருவகைக் குளிர்ச்சி பொருந்தியது
என்க.

      சிறந்து அணைந்தது - நீ புகுந்த இடமானது நீர் நாட்டினிற்
புறம்பணைத் தடம். காவிரி கால்வாய்ப் பிரிந்து ஓடும் நீர்களாலும், நிற்கும்
நீர் நிலைகளாகிய புறம்பணைகளாலும் இருவகையிலும் குளிர்ந்தது நீ புகுந்த
இடம். இந்நீர் தெய்வத்தன்மை பொருந்தியதாதலின் நீ பிறந்த
மலையத்தைப்போலவே இதுவும் இரண்டு வகையிலும் குளிர்ந்தது.

      பொங்கு அழல் வீசிட - அழலின் தன்மை பொருந்திப் பெருகி
வீசும்படியாக. நீ பிறந்த இடமும் புகுந்த இடமும் தண்மையுடையனவாகவும்
அழலையுளதாக்கிப் பொங்க வைத்து வீசுமாறு. அழல் - நெருப்பு. அழல்
போன்ற வெங்கதிர்களைக் குறித்தது ஆகுபெயர்.

      மறம் பயின்றது - வன்மை பழகியது. வீசிடும்படிச் செய்யும் வன்மை.
பிறந்த இடமும், புகுந்த இடமுமல்லாது பயிலுதற்கு வேறு இடமில்லை
யாதலின் வேறு எங்கோ? என்று வினாவினார். பிறந்ததும் புகுந்ததுமாகிய
இடத்தினல்லாது பிறக்கு முன்னரே பொருந்திப் பயின்ற தென்பையேல்
நீ தமிழ் இயல் உடையாய்; ஆதலின் மறம் உனதியற்கை யன்று என்பார்
தமிழ் மாருதம் என்று கூறி முடித்தனர். தமிழ் நாவலராதலின் குறிப்பாய்
அத்தொடர்பு காட்டத் தமிழ் மாருதம் என்றாரென்பதுமாம்.

      310 திருப்பாட்டிலே முடித்த என்பார் எனும் எதிர்கால வினைமுற்றை
முறையே 311, 312, 313 பாட்டுக்கள் ஒவ்வொன்றினிறுதியிலும் - தண்மதி!
என்பார் - என் செய்யாய்? என்பார் - மாருதம்! என்பார் - எனக்கூட்டி
முடித்துக்கொள்க. நம்பிகள் சொல்பவை அன்றிரவு ஆரூர்ப்பெருமான்
திருவருள் செய்கின்றவரையில் நிகழ்ந்து கொண்டிருந்தனவாகலின் என்பார்
என எதிர்கால வினைகொண்டு முடித்தார். 167

314. இன்ன தன்மைய பின்னுமி யம்புவான்
 
  மன்னு காதல னாகிய வள்ளல்பாற் றன்ன
ரும்பெற னெஞ்சு தயங்கப்போம் அன்ன
மன்னவள் செய்கை யறைகுவாம்.
168

      (இ-ள்.)இன்ன ... வள்ளல்பால் - (மேலே சொன்னவையேயன்றி)
இவைபோன்ற தன்மையுடைய மொழிகளை மேலும் சொல்வதற்குப்
பொருந்திய காதலை யுடையாராகிய அருட்கொடையாளராம் நம்பிகளிடத்தே;
தன்னரும் ...... அறைகுவாம் - தனது பெறற்கரிய மனம் பின்னின்று
தயங்கிவர முன்சென்றவராகிய அன்னம்போன்ற பரவை நாச்சியாரது செயலின்
திறங்களை இனிச் சொல்வோம்.

      (வி-ரை.) இப்பாட்டுக் கவிக்கூற்று.

      இன்ன தன்மைய பின்னும் இயம்புவான் மன்னுகாதலன் - மேலே
சொல்லியவை போன்றவற்றை மேலும் சொல்வதற்குப் பொருந்திய காதலை
யுடையவன். பின்னரும் இயம்புதல் - மதி - கடல் - மாருதம் போலவே
பிரிந்தார்க்குக் காதலைப் பெருக்கும் குயில் முதலியவற்றைச் சொல்லுதல்.

      இயம்ப மன்னும் காதலன் செய்கையும், அவர்பால் நெஞ்சு தயங்கப்
போம் பரவையார் செய்கையும் நிகழ்ச்சியில் ஒன்றாகவே கலந்து ஒருசேர
நிகழ்தலின் நம்பிகள் செய்கை முற்றாது தொடரப் பரவையார் செய்கையை
எடுத்துக்கூறுதல் காண்க.