பேரழலி னெய்சொரிந்தா லொத்தன;மற் றதன்மீது
சமிதை யென்ன
மாரனுந்தன் பெருஞ்சிலையின் வலிகாட்டி மலர்வாளி
சொரிந்தான் வந்து.
|
173 |
318.
(இ-ள்.) என்ற
உரை ........ வளர்ந்து பொங்க - என்று சேடி
சொன்ன விடையைக்கேட்ட வுடனே “அவர் எமது இறைவராகிய
தியாகேசருடைய தமரேயோ?“ என்று சொல்லி, அச்சொல் வாய்ப்பாட்டு
நிறையுமுன்னே, வன்றொண்டரிடம் மனத்திலே கொண்ட காதல் அளவுகடந்து
மேலே பொங்கியதனாலே; நின்ற ........ தாங்கி - முன்னே தம்மிடம்
நிலைபெற்று நின்ற நிறையும் நாணம் முதலிய நான்கு குணங்களும் ஒருமித்து
நீங்க, உயிர் ஒன்றை மட்டும் ஆற்றாது பாரமாய்த் தாங்கிக்கொண்டு; மின்
தயங்கு ....... போது - மின்னல்போலத் துவள்கின்ற றுண்ணிய இடையினை
யுடையாராகிய பரவையார் பெருமூச்செறிந்து மெல்லிய பூம்படுக்கையில்
வீழ்ந்தார்; அப்போது, 172
319. (இ-ள்.)
ஆரம் ........... படுத்து - மணமுடைய கலவைச்
சந்தனச் சேற்றைப் பூசியும், அரிய மணமுடைய பனிநீரை மழைபோலச் சிறு
துளிகளாகப் பக்கங்களிலெல்லாம் வீசித்தெளித்தும், குளிரியினது ஈரமுள்ள
இளந்தளிர்களை இட்டும்; மடவார்.........ஒத்தன - (இவ்வாறாகத்) தோழிப்
பெண்கள்செய்த இவைகளும் இவைபோன்றன பிறவுமாகிய எல்லா
உபசாரங்களும் முன்னரே பெரு நெருப்பாய் மூண்ட அதன்மேல் அதனை
வளர்க்குமாறு நெய்யையும் சொரிந்தது போலாயின; அதன்மீது ...... வந்து -
அதன்மேலும் அவ்வழலைப் பின்னும் வளர்க்க வுணவு தருவதுபோல
மன்மதனும் வந்து தனது ஒப்பற்ற வில்லின் வலிமையைக் காட்டிப் பூவாகிய
அம்புகளை மேன்மேலும் எய்தான். 173
கேட்டலும்
- “எம்பிரான் தமரேயோ“ என்னா முன்னம் - பொங்க -
நீங்க தாங்கி - நுண்இடையாள் - உயிர்த்து - வீழ்ந்தபோது - ஆட்டி -
வீசிப் - படுத்துச் செய்த - எல்லாம் - ஒத்தன; மாரனும் - காட்டி - வாளி
சொரிந்தான் - என இவ்விரண்டு பாட்டும் கூட்டி முடித்துக்கொள்க.
318. (வி-ரை.)
என்னா முன்னம் - என்று வாய்விட்டுச் சொன்னார்;
அச்சொல் சொல்லி முடியுமுன்னே எனப் பிரித்து உரைத்துக் கொள்க.
இச்சொல்லும் பிற்செயல்களும் ஒருங்கு நிகழ்ந்த விரைவை உணர்த்த என்னா
முன்னம் என்றார். “தென்னா வென்னா முன்னந் தீசேர் மெழுகொப்பாய்“
என்ற (திருவெம்பாவை - 7) திருவாசகம் காண்க.
வன்றொண்டர்
- சேடி “எதிர் நின்றாண்ட திருத்தொண்டர்“
என்றமைக்கேற்ப வன்றொண்டர் என்றார்.
பால் வைத்த மனக்காதல்
- வன்றொண்டரிடம் மனம் வைத்ததால்
நிகழ்ந்த காதல் - வைத்தமனத்திலே நிகழ்ந்தகாதல் - என மனத்தை
இருவகையும் கூட்டுக.
அளவின்றி வளர்ந்து
பொங்க - எம்பிரான் - தமர் - என்ற
உணர்ச்சி காதலை வளரச்செய்து மேலும் பொங்கச் செய்தது. பரவையாரது
அன்பின் திறமுணர்த்தியதாம். தாம் தமர்க்கு உரியவர் என்ற உணர்ச்சி
காதல் பொங்குதற்குக் காரணமாம்.
நின்ற
- இதற்கு முன்னெல்லாம் தம்மிடத்தே நிலைபெற்று நின்ற.
நின்ற என இறந்தகாலக்குறியாற் கூறியதால் இப்போது துணைநில்லாது
ஒதுங்கியமை குறித்தார்.
நிறை நாண் முதலாங் குணங்களுடன் நீங்க
- நிறை என்னும்
ஒழுக்கமானது அதற்குப் பற்றுக்கோடாகிய நாணம் முதலிய
நாற்குணங்களுடனே ஒரு சேர நீங்க. நிறை என்பது அடக்க
வேண்டியவற்றை மனதிலே அடக்கி ஒழுகுதலாகிய மகளிர்க்குரிய
இயல்பாகிய ஒழுக்கம். அது நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்ற நான்கு
|