|
மெய்ப்பொருள்
- என்றும் உள்ளதாகிய சத்துப்பொருள்; இறைவன்.
இவனல்லாதன எல்லாம் மெய்ப் பொருளல்லாதவையே. அவ்வாறு
மெய்ப்பொருளல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணர்ந்து அலைவதுதான்
மயக்கம். அதுவே பிறப்புக்குக் காரணம் - எனத் திருவள்ளுவர்
“பொருளல்லவற்றை” எனும் திருக்குறளால்
அறுதியிட்டார்.
சாத்தும்
- என்பதனை நீற்றுக்கும் கூட்டுக.
மாலையும்
- நீறும் - இவற்றைத் தனக்கென வேண்டானாயினும்
உலகராகிய உயிர்களின் பொருட்டு அணிந்து கொள்வான் இறைவன்.
“பூசுவதும்
பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ” |
என்ற திருவாசகம்
காண்க.
அள்ளும்நீறு
- மனங்கவரு மாண்புடைய திருநீறு. அள்ளுதல் -
சித்தந்திரை கொள்ளுதல். “இளங்கொங்கையிற் செங்குங்குமம் போலும்
பொடி”(திருப்பல்லாண்டு); அள்ளுதல்
- விரல்களினாற் கூட்டி எடுத்தல்
என்றலுமாம்.
நீறு
- நீற்றப்பெற்றது; உயிர்களின் வினைகளை நீறு செய்வது.
பஸ்மசாபாலஉபநிடத முதலிய வேதங்களாற் றுதிக்கப்பெற்ற பெருமை
வாய்ந்தது. அவைபோலவே திருஞானசம்பந்த நாயனார் திருநீற்றுப் பதிகம்
என ஒரு தமிழ்வேதத்தனிப் பதிகத்தாலே இதனைத் துதித்திருப்பதும்
காண்க. 21
| 32.
|
அன்ன வன்பெய ராலால சுந்தரன்
|
|
| |
முன்ன
மாங்கொரு நாண்முதல் வன்றனக்
கின்ன வாமெனு நாண்மலர் கொய்திடத்
துன்னி னானந் தனவனச் சூழலில். |
22 |
(இ-ள்.)
அன்னவன் ... சுந்தரன் - அவர் பெயர் ஆலாலசுந்தரர்
என்பதாம்; முன்னம் ... சூழலில் - முன் ஒரு நாள் கயிலையில்
இறைவனுக்குச் சாத்துவதற்காக விதிப்படியுள்ள புதுப் பூக்களைக்கொய்து
எடுக்கும் பொருட்டுத் திருநந்தன வனத்திலே அவர் சேர்ந்தனர்.
(வி-ரை.)
ஆலால சுந்தரன் - ஆலகால விடத்தைச் சிறிதளவாகச்
செய்து கையிலே ஏந்திச் சென்று சிவபெருமானிடத்துக் கொடுத்தமையால்
இப்பெயர் வந்தது.
“அன்ன
சுந்தரற் காலால மாழியின்
முன்னம் முன்னவ னுண்ணமற் றன்னதைத்
தன்ன கங்கைத் தழீஇக்கொடு நல்கலாற்
றுன்னு மாலால சுந்தர நாமமே” |
என்பது பேரூர்ப் புராணம்.
தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெறும்பொருட்டுத்
திருப்பாற்கடல்
கடைந்ததுவும், அதுகாலை ஆலகால விடம் எழுந்ததுவும், அப்போது
தேவர்களைக் காக்கவேண்டி அதனைச் சிவபெருமான் உண்டருளியதோடு
சாட்சியாக யாவரும் கண்டு தொழுது உய்யவேண்டிக் கழுத்தின் அளவிலே
விளக்கமாக நிறுத்தியதுவும், பிறவும் சிவ - விஷ்ணு -
பிரம - முதலிய
மாபுராணங்கள் எனும் பதினெண் புராணங்களும் பேசும். ஆதலின் அது
எம்மதத்தரும் சம்மதிக்கும் விளக்கமான உண்மையாம்.
நாண்மலர்
- அன்றலர்ந்த புதுமலர்.
இன்ன
ஆம் எனும் - இவை இவை பெருமானுடைய பூசைக்கு ஆகும்
என்று விதிக்கப்பெற்ற. இவ்விதிகள் புட்பவிதி முதலியவற்றுட் காண்க. (வரும்
பாட்டிலும் இவ்வாறே கொள்க.)
அன்னவன்
பெயர் ஆலால சுந்தரன்; முதல்வன் தனக்குஆம்
மலர்
கொய்திட நந்தனவனச் சூழலில் (அவன்) துன்னினான் - எனக் கூட்டி
முடிக்க.
|