பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்391

Periya Puranam
  சேமத் துணையா மவர்பே ரருளைத்
தொழுதே திருநா வலர்கோன் மகிழத்
தாமக் குழலாள் பரவை வதுவை
தகுநீர் மையினா னிகழச் செய்தார்.
180

     324. (இ-ள்.) என்று......நினைவார் - என்று இவ்வாறாகிய
சொற்களையே மேலும் பலவாகச் சொல்கின்ற இருண்ட மேகம்போலக்
கருமையுடைத்தாய் அளகமாய் உருவமைந்த சுருண்ட கூந்தலையுடைய
பரவையாரையும் நம்பிகளையும் இவ்வுலகில் வருமாறு அருளிச்செய்த
சிவபெருமான் இப்போது அருள் செய்யும் வகையை யாவரே நினைக்க
வல்லவராவர்?; சென்று.....அடிகள் - தேவர்களும் வந்து தொழுகின்ற
செல்வம் நிறைந்த திருவாரூரிலே வாழ்கின்ற தியாகேசப் பெருமான்;
அன்று......அருளி - “அன்றைக்கே திருவாரூரிலே (தம்மாற் படிமேல் வர
அருளிச் செய்யப்பெற்றாராகிய) அவ்விருவருக்கும் திருமணத்தை நீங்கள்
செய்யுங்கள்“ என்று திருவாரூரின் அடியார்கள் தெரியும்படியாகக் கனவில்
அருளிச்செய்து, 178

     325. (இ-ள்.) மன்னும்......அருளி - “மங்கைபரவையை உணக்கு
நாயகியாகக் கொடுத்தோம். இவ்வாறு நாம் கொடுத்தருளிய செயலைத்
திருவாரூரிலே வாழும் நமது அடியார்கள் அறியும்படியும் அருளிச்
செய்துள்ளோம்.“ என்று நிலைத்த புகழுடையாராகிய திருநாவலூர் நம்பிகள்
மகிழுமாறு அவர் அறியும்படி அருளிச்செய்து (பின்னர்); பொன்னின்
......அருள - பொன்னைப் புரிசெய்தாற்போன்ற சடையினையும்,
இடபத்தினையும், போர்வல்ல பெரிய யானைத்தோலின் போர்வையினையும்
உடைய தியாகேசப்பெருமான் பரவையாரது கனவிலும் எழுந்தருளி
“நம்பியாரூரனுக்கும் உனக்கும் மணம் விரைவிலே நிகழ்வதாம்“ என்று
அருளிச்செய்ய, 179

     326. (இ-ள்.) காமத்துயரில் ...... புலர - ஒருவரை யொருவர்
காதலித்து அது கை கூடி முற்றுப்பெறாத துன்பத்தால் தனித்தனி வருந்திய
நம்பிகள், பரவையார் எனும் இருவருடைய நெஞ்சில் நிறைந்து முடிவின்றி
யிருந்த ஆற்றாமையாகிய இருளும், அவ்விரவு மெல்லக் கழிந்து செல்லும்
யாமங்களாகிய இருளும் நீங்க; கதிரோன்......தொழுதே - சூரியன் உதிக்கும்
காலமாகிய அதிகாலையில் கனவில் உணர்த்தியருளப் பெற்ற திருவாரூர்
அடியார்கள் எல்லாரும் கூடித், தம் அடியார்களுக்கு உற்றவிடத் துதவும்
வைப்பாகிய - துணையாகிய தம்பெருமானது பேரருளைத் தொழுது வாழ்த்தி;
திருநாவலர்கோன்........நிகழச் செய்தார் - திருநாவலூர் நம்பிகள் மகிழுமாறு
மாலையணிந்த கூந்தலுடைய பரவையாரது கல்யாணத்தை அதற்குத் தக்க
சிறப்பினாலே நிகழ்வித்தார்கள். 180

     இம்மூன்று பாட்டுக்களும் ஒருமுடிபு கொண்டன. என்று - பலவும்
புகலும் ஓதியையும் - வன்றொண்டரையும் - வர - மன்பு - அருள்வான் -
வகை யார்நினைவார்?; அடிகள் - “அவர் மன்றலை நீர் செயும்“. என்று
அடியார் அறியும்படி அருளித்-“தந்தனம்; உரை செய்தனம் “ என்ற
நாவலர்கோன் மகிழ அருளி - பரவைக்கு “அணியது மணம்“ - என்றருள;
புலர - எழுகாலையில் - அடியார் கூடித் - தொழுதே - நாவலர்கோன்
மகிழப் - பரவை வதுவை - நிகழச் செய்தார் - என்று தொடர்ந்து
முடித்துக்கொள்க.

     324. (வி-ரை.) என்று - 321, 322, 323 பாட்டுக்களிற் கூறியபடி.

     இன்னன - இவைபோல்வன.

     இருளார் அளகச் சுருள் ஓதி இருள் - நிறம் - அளகம்; குழலை
முடிக்கும் ஐந்து வகையில் ஒன்று. இதனாலே அதற்கு ஐம்பால் என்று பெயர்
கூறுவர். சுருள் - கருமணல் ஒழுக்குப் போன்று சுருண்டு சுருண்டு செல்லும்
இயல்பு. ஓதி - கூந்தல்; சுருள் ஓதி வினைத்தொகைப் புறத்துப்பிறந்த
அன்மொழித்தொகை. இக்கூந்தலையே தேவ