பக்கம் எண் :


390 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

றும், “வீதிகள் தோறும் வெண்கொடியோடு விதானங்கள்“ என்றும், நித்திய
நைமித்திகங்கள் இரண்டிலும் கொடி சிறந்துவிளங்கும் தன்மையை அப்பர்
பெருமான் பாராட்டியதும் இத்தலமே. ஆதலின் தேரும் கொடியும் மிடையும்
எனச்சேர்த்துக் கூறினார்.

     திருவாரூரீர் நீரே - என்பதனைத் திருவாரூர்ப் பெருமானுக்கும்,
ஆரூர் நம்பிகளுக்கும் பொருந்துமாறு இரட்டுற மொழிந்து கொள்ளலும்
ஆம்.

      நீரும் பிறையும் அரவின் நிரையும் நிரைவெண் தலையின் புடையே
ஊரும் - “தெழித்தோடுங் கங்கைத் திரை“ என்றபடி கங்கை, பிறை, அரவு
என்ற மூன்றும் தவழ்ந்து ஊரும் தன்மை உடையனவாதல் காண்க.

      நிரை வெண்தலை - வரிசையான வெண்தலைகளாலான தலைமாலை.
“தலைக்குத் தலைமாலை யணிந்த தென்னே“ என்ற சுந்தரமூர்த்தி நாயனார்
திருவஞ்சைக்களத் தேவாரம் காண்க.

      விடைமேல் வருவீர் - விடை தரும உருவமானது. அதனை
மேற்கொண்டு வருதலாவது இறைவன் தருமத்தைச் செலுத்த வெளிப்படுதல்.
வருவீர் என்பதனைச் சடையீர் என்பது போல விளியாகக் கொள்க. அன்றி
வருவீராக என்று வியங்கோள் விண்ணப்பமாகக் கொண்டு இனிமேலாவது
விடைமேல் வந்து என்னைக் காக்கக் கடவீர் என உரைத்தலுமாம். பகைப்
பொருள்களைப் பகை தீர்த்து ஒன்று சேர்க்கும் செயல் காண இருந்தும்
தருமத்தைச் செலுத்தும் நீர், இப்போது இப்பொருள்கள் இயற்கை மாறி
எனக்கு இன்னல் செய்யப் பார்த்தும் பகைதீர்த்து ஆளாதிருத்தல் அழகன்று
என்பது.

      திருவாரூரார் - என்பதும் பாடம். 177

324. என்றின் னனவே பலவும் புகலு
     மிருளா ரளகச் சுருளோ தியையும்
 
  வன்றொண் டரையும் படிமேல் வரமுன்
     பருள்வா னருளும் வகையார் நினைவார்? சென்றும் பர்களும் பணியுஞ் செல்வத்
     திருவா ரூர்வாழ் பெருமா னடிகள்
“அன்றங் கவர்மன் றலைநீர் செயு“மென்
     றடியா ரறியும் படியா லருளி,
178

325. மன்னும் புகழ்நா வலர்கோன் மகிழ
     “மங்கை பரவை தன்னைத் தந்தோம்;
 
 

இன்னவ் வகைநம் மடியா ரறியும்
     படியே யுரைசெய் தன; “மென் றருளிப் பொன்னின் புரிபுன் சடையன் விடையன்
     பொருமா கரியின் னுரிவை புனைவான்
அன்னந் நடையாள் பரவைக் “கணிய
     தாரூ ரன்பான் மண“மென் றருள,

179

326. காமத் துயரிற் கவல்வார் நெஞ்சிற்
     கரையில் லிருளுங் கங்குற் கழிபோம்

 
  யாமத் திருளும் புலரக் கதிரோ
     னெழுகா லையில்வந் தடியார் கூடிச்