|
உலரும்
தனமும் மனமும் - மனம் உலர்தலால் உடம்பும்
உலர்வதாம்; ஆதலின் உடன்சேர்த்துக் கூறினார்.
வினையேன் ஒருவேன்
அளவோ பெருவாழ்வு உரையீர் -
பெருவாழ்வு - இகழ்ச்சிக் குறிப்பினாலே துன்ப மிகுதியைக் குறித்தது.
இவ்வாழ்வு என் ஒருத்தியின் அளவே நிகழ வேண்டுவதா? ஒருவேன்
என்பதனை நீங்கமாட்டேன் (ஒருவுதல் - நீங்குதல்) எனக்கொண்டு
முன்வரும் உலரும் தனமும் மனமும் நீங்கமாட்டேனாயினேன்
என்றுரைத்தலும் ஒன்று. இவ்வுரைக்கு இவ்வளவுதனா எனது பெருவாழ்வாய்
முடிந்தது என்று முடித்துக்கொள்க. பெருவாழ் வுரையீர் - நான் வாழும்
வழியைச் சொல்லுங்கள் என்று முரைப்பார்.
பலரும் புரியும் துயர்தான்
இதுவோ - ஒருவர்தாம் துன்பஞ்
செய்வாராயின் பிறர் அதனை விலக்குதலே அறநெறியா யிருப்பவும்,
அவ்வாறு செய்யாமலும், அவ்வாறு விலக்காவிட்டாலும் வாளா இராமலும்,
அவருடன் சேர்ந்து தாமும் துன்பஞ் செய்வதோ அற இயல்பு? என்க.
அலரும் நிலவும் மலரும்
முடியார் - அலர் - சிவபெருமானுக்குரிய
கொன்றை மலர். இது கார்காலத்தைக் குறிப்பது. காதல் நிகழ்ந்து பெருகும்
காலம் அதுவேயாம். நிலா காதலை மிகுவிப்பது. மலர்தல் - சிறந்து
பெருகுதல். இவ்விரண்டும் பெருகச் செய்தலின் அவர் திருவருள் காதலாய்
மேன்மேல் விளைகின்றது. அதற்கு மருந்து அவர் அருளேயாதலின்
அவரருள் பெற்றுடையார் அறிந்தால் தாம்பெற்ற திருவருளை எனக்குக்
கொடுத்து ஆற்றுவர். அவரோ அறியாதிருக்கின்றார். நீங்களாவது
அறிவியுங்கள் என்பார்போலக் குறிப்பித்தவாறு. அறிந்தால் அருளுவர்
என்பது குறிப்பு.
ஆற்றாமையால் வாய் நெகிழ்ந்து வறிதே சொல்லும்
சொற்களாயினமையால் இச்செய்யுட்கள் ஒரு தொடர்ச்சிபெற்று வராது
வெவ்வேறு பல பொருள்களைக் குறித்த தனிச் சிறுசிறு சொற்றொடர்களாக
முடிந்துவரும் யாப்பமைதியும், சொல்லமைதியும், கொண்டுவிளங்கும் அழகு
காண்க. இத்தகைய பொருளமைதிகொண்ட “கூற்றாயினவாறு“,
“சடையாயெனுமால்“ என்ற தேவாரப் பதிகங்களின் அமைதியையும் இங்கு
வைத்துக் காண்க. 176
| 323.
|
“தேருங்
கொடியும் மிடையும் மறுகிற்
றிருவா ரூரீர்! நீரே யல்லால்
|
|
| |
ஆரென்
றுயரம் மறிவா? ரடிகே
ளடியே னயரும் படியோ விதுதான்?
நீரும் பிறையும் பொறிவா ளரவின்
னிரையுந் நிரைவெண் டலையின் புடையே
யூருஞ் சடையீர்! விடைமேல் வருவீ
ருமதன் பிலர்போல் யானோ வுறுவேன்?“
|
177 |
(இ-ள்.)
தேரும்.........அடிகேள்! - தேர்களுங் கொடிகளுமாகி
நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருவாரூரில் எழுந்தருளிய இறைவரே
நீரேயல்லாமல் என் துன்பங்களை அறியவல்லார் யாவர்? அடிகளே!;
அடியேன்.....இதுதான் - அடியேன் வருந்தும் அளவும் இவ்வளவே!;
நீரும்........வருவீர் - கங்கையும், மதியும், புள்ளிகளையுடைய வாள் போன்ற
பாம்புக் கூட்டங்களும், வரிசையான வெண்தலைகளின் பக்கங்களில் ஊர்ந்து
தவழ்தற்கிடமாகிய சடையையுடையவரே! இடபத்தின்மீது எழுந்தருளுபவரே!;
உமது..........உறுவேன்? - உம்மிடம் அன்பிலாதவர்கள் போல யானோ
இத்துன்பத்தைப்படுவது?
(வி-ரை.)
தேரும் கொடியும் மிடையும் மறுகில் திருவாரூரீர்
-
திருவாரூர் தேர் அழகுக்குப் பேர் போனது. “விதானமும் வெண்கொடியும்
இல்லா வூரும்“ என்
|