பக்கம் எண் :


396 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     செல்கின்றார் - வாழ்ந்து வருகின்றார் என்னும் பொருளில் வந்தது.
வாழி மண்மேல் விளையாடுவாய் என்று முன்னர்க் கூறியதற் கேற்ப
இப்பொருள் கொள்ளப் பெற்றது. 182

வேறு

329. மாதுடன் கூட வைகி மாளிகை மருங்கு சோலைப்
 
  போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர்
                                தெற்றிச்
சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து                                 தங்கள்
நாதர்பூங் கோயி னண்ணிக் கும்பிடும் விருப்பா                                  னம்பி,
183

330. அந்தரத் தமரர் போற்று மணிகிள ராடை சாத்திச்
 
  சந்தனத் தளறு தோய்ந்த குங்குமக் கலவை
                                 சாத்திச்
சுந்தரச் சுழியஞ் சாத்திச் சுடர்மணிக் கலண்கள்
                                  சாத்தி
யிந்திரத் திருவின் மேலா மெழின்மிக விளங்கித்
                                தோன்ற,
184

331. கையினிற் புனைபொற் கோலுங் காதினி லிலங்கு
                                  தோடு
 
  மெய்யினிற் றுவளு நூலு நெற்றியின் விளங்கு நீறு
மையனுக் கழகி தாமென் றாயிழை மகளிர்
                               போற்றச்
சைவமெய்த் திருவின் கோலந்தழைப்பவீ
                      தியினைச் சார்ந்தார்.
185

      329. (இ-ள்.) மாதுடன் கூட வைகி - பரவையாரோடு சேர்ந்து
வாழ்ந்து இருந்து; மாளிகை....இழிந்து - மாளிகையின் பக்கத்திலே,
சோலையில், நீர்ப்பூக்கள் மலர்ந்து விளங்கும் தடாகத்தின் சார்பில்,
செய்குன்றின் பக்கத்தில், ஒரு திண்ணையில் குளிர்ந்த முத்து விதானத்தின்கீழ்
அமைந்திருந்த அழகிய ஆதனத்திலிருந்து இறங்கிச் சென்று; நாதர்........
நம்பி - தங்களுடைய இறைவர் எழுந்தருளிய பூங்கோயில் அடைந்து
கும்பிடவேண்டும் என்ற விருப்பத்துடன் நம்பிகள்,           183

     330. (இ-ள்.) வெளிப்படை. தேவர்களும் துதிக்கும் அழகிய ஆடை
அணிந்து, குங்குமப்பூக் கலந்த சந்தனக் குழம்பை - அணிந்து, அழகிய
சுழியத்தினைத் தலையில் அணிந்து, ஒளிவீசும் மணிகளழுத்திய
அணிகலன்களையும் அணிந்து, இந்திரச் செல்வக் காட்சியின் மேம்பட்ட
அழகு மிகவும் பொலிந்து தோன்றவும்,                    184

     331. (இ-ள்.) வெளிப்படை. கையிலே தாங்கிய பொற்கோலும்,
காதுகளிலே விளங்கிய கவசகுண்டலங்களும், மார்பிலே துவண்டு அசையும்
பூணுலும், நெற்றியிலே விளக்கஞ்செய்யும் திருநீறும் கண்ட பெண்கள்,
“இப்பெருமானுக்கு இக்கோலமே மிக அழகு செய்வதாம்“ என்று
துதிக்குமாறு திருவீதியினை அடைந்தார்.                   185

     329. (வி-ரை.) கூடவைகுதல் - உடன் வாழ்தல். கூடவைகி - சேர்ந்து.
மேற்பாட்டிற் கூறியவாறு சேர்ந்து விளையாடி வாழ்ந்து வைகுவார், ஒருநாள்
பின் வருமாறு செய்தார் என்க.

     மாளிகை...செழும் தவிசு - மாளிகை - சோலை - வாவி செய்குன்று -
தெற்றி - பந்தர் - இவை தவிசுக்கு விசேடணமாகிய அடைமொழிகளாய்
அந்தத் தவிசின் உயர்வையும்; அதனிலிருந்தோர் அதைவிட்டு இலகுவில்
நீங்கலாகாத அருமையும் குறித்து நின்றன. தவிசு செழுமையாய் இருந்தது;
அது சீதளத் தாளப் பந்தர்க்கீழ் அமைந்திருந்தது; மேற்பந்தரும் கீழ்த்
தவிசும் ஒரு தெற்றியில் அமைக்கப்பெற்றன; அத்தெற்றி ஒரு செய்குன்றின்
புடையிருந்தது; செய்குன்று வாவியின் மாடு அமைந்தது; வாவி
சோலையினிடை இருந்தது; சோலைதானும் மாளிகை மருங்கு நின்றது
எனத் தொடர்ந்து காண்க.