பக்கம் எண் :


400 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     கொள்ளினும் அமையும். இப்பொருட்கு ஒவ்வொன்றினும் தனித்தனி
சென்று இயைவதால் அழகிவை என்னாது அழகிது என ஒருமையாற்
கூறியதாம்.

     சைவ மெய்த்திருவின் கோலம் - இந்திரத்திரு என வாளா கூறிய
அக்கோலத்தினின்றும் வேறுபடுத்தி இதன் உயர்வு தெரிவிக்குமாறு மெய் -
திரு - இன் என்ற அடைமொழி கொடுத்துக் கூறினார். இதுவே
மெய்க்கோலமாதலின் ஏனைய இந்திரத்திரு முதலிய எல்லாம் பொய் என்று
குறித்தபடி. இதுவே அழகுடையதுமாம் என்றபடி.

     கோலம் - மேற்பாட்டிலே கண்ட இந்திரத்திரு, கோலமாய்க்
கருதத்தக்கதன்றாதலின் இதனையே கோலம் என்று கூறினார். இது
அழிவில்லாததாதலினாலும், சிவத்தின் சார்பு பெறுதலானும் இது
மெய்த்திருவின்கோலமாயிற்று. ஆயினும் நம்பிகள் ஏன் இந்திரத்திருவின்
எழில் பெறப்பூண்டார்? எனின் அது (187) இறைவனது ஆணையாதலாலும்,
பிராராத்தவாசனையை இதனுடன் தொலைக்கும் வகையினாலும் என்க.

     திரு - கண்டாரால் விரும்பப்படுவதாதலின் கண்ட மகளிர் “அழகிது“
எனப் போற்றினர். இன்கோலம் - நெற்றியில் விளங்கும் நீற்றினால்
நிறைவுபெற்று உலகை விளக்கம் செய்வதாதலின் சைவமெய்த்திருவுடைய
இனிய கோலமாயிற்று.

“காண வினியதுநீறு கவினைத் தருவது நீறு“
“பூச வினியது நீறு.......பேச வினியது நீறு“

என்பனவாதி தேவாரத் திருவாக்கின் பொருளை இங்கு வைத்துணர்க.

     உயிர்க்கோலமான இம் மெய்த்திருக்கோலத்தைப் புறக்கணித்து ஏனை
ஆடை ஆபரணங்களையும், வாகன முதலிய சடங்களையும் பெரிதாய்
எண்ணி வீண்நாள் போக்கும் இந்நாள் மாக்கள் ‘சைவமெய்த்
திருவின்கோலம்' என்று ஆசிரியார் இடித்துக் கூறி எடுத்துக்காட்டிய
இதன் உண்மையை உற்றுநோக்கி உணர்ந்து உய்வார்களாக.

     தழைப்ப - தழைக்கும்பொருட்டு. நம்பிகள் அன்று திருவீதியினைச்
சார்ந்ததன் பயன் குறிப்பிட்டவாறு. தீதிலாத் திருத்தொண்டத்தொகை“யை
அன்றைக்கே உலகத்திற்ருத் தருதலும், அதனால் சைவமெய்க்கோலம்
என்றும் தழைக்க உளதாதலும், நிகழ்தலின் தழைப்ப என்றார்.

     பொற்செண்டும் - என்பதும் பாடம்.  185

332. நாவலூர் வந்த சைவ நற்றவக் களிறே! யென்று,
 
  மேவலர் புரங்கள் செற்ற விடையவர்க் கன்ப!
                               வென்றுந்,
தாவில்சீர்ப் பெருமை யாரூர் மறையவர் தலைவ!
                                வென்று,
மேவினரிரண்டு பாலும் வேறுவே றாயம் போற்ற,
186

333. கைக்கடா குரங்கு கோழி சிவல்கவு தாரி பற்றிப்
 
  பக்கமுன் போது வார்கள் பயின்மொழி பயிற்றிச்
                                 செல்ல
மிக்கபூம் பிடகை கொள்வோர் விரையடைப்
                           பையோர் சூழ
மைத்தடங் கண்ணி னார்கண் மறுகநீண் மறுகில்
                                வந்தார்.
187

     332. (இ-ள்.) “நாவலூர்.........களிறே“ என்றும் - “சைவத்தினது
நல்ல தவத்தினது பயனாகித் திருநாவலூரில் அவதரித்த களிறு போன்றவரே“
எனவும்; மேவலர்......அன்ப“ என்றும் - “பகைவரது திரிபுரங்களையும்
எரித்த விடையவராகிய சிவபெருமானிடத்து மிக்க அன்புடையவரே“
எனவும்; “தாவில்.......தலைவ“ என்றும் - “குற்ற மற்ற சிறப்பும் பெருமையும்
உடைய திருவாரூர் வேதியர் பெருமானே“ எனவும்; மேவினர்..........போற்ற -
இரண்டு பக்கமும் வேறு வேறாய் மேவினராகிச் சூழ்ந்த பரிசனங்களும்
மகளிர் கூட்டமும் துதிக்க,  186