பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்401

Periya Puranam

     333. (இ-ள்.) கைக்கடா.......பயிற்றிச் செல்ல - கையிற் பிடித்துப்
பழக்கும் கடா - குரங்கு - கோழி - சிவல் - கவுதாரி என்றிவற்றைப்
பிடித்துக்கொண்டு இருபக்கங்களிலேயும், முன்னேயும் செல்கின்றவர்கள்
அப்பிராணிகளைப் பயிற்றிய சொற்களைச் சொல்லிப் போகவும்; மிக்க.......
சூழ - பூக்கள் நிறைந்த பூக்கூடைகள் கொண்டு போவாரும், வாசனைப்
பண்டத்துடன் கூடிய வெள்ளிலை முதலியவற்றை ஏந்தும்
அடைப்பைக்காரரும் சூழ்ந்து வரவும்; மைத்தடம்......மறுக - மையணிந்த
விசாலமான கண்களையுடைய பெண்கள் மயங்கவும்; நீள்மறுகில் வந்தார் -
நீண்ட தெரு வழியாக (நம்பிகள்) வந்தார்கள்.

     332. (வி-ரை.) சைவநல் தவக் களிறு - சைவம் தவஞ்செய்து இவரை
ஆசாரியராகப் பெற்றது. களிறு - சைவம் என்பது ஒரு சமயம் என்பதனோடு
அமையாது சமயாதீதமாயும் விளங்குவதாம். “சைவ முதலாம் அளவில்
சமயமும் வகுத்துமேற் சமயங்கடந்த மோன சமரசம் வகுத்த நீ“ என்று
தாயுமானார் கூறுவதை நோக்குக. நிலை கடந்த அக்கொள்கையை ஒருவரும்
நேரே காணுதல் இயலாது. அதற்காக அது தானே ஓர் உரு எடுத்து வந்தால்,
தனக்குமேற் பெரியது வேறொன்றில்லாத அது, பெரிய யானையை
ஒத்திருக்கும் என்பார் களிறே என்றார். யானை மதமுடையதாதலின்
(யான் + ஐ = யான் என்றதை உடையது. தன்னை உயர்வாகக் கருதுவது)
சைவம் இவரைப் பெற்றதால் தன்னை உயர்வாகக் கருதியது என்பது.
தலைதூக்கிச் செல்லும் இராசாங்கத் தமர்ந்தது. இறைவனே “உறழ்ந்த கல்வி
யுடையானு மொருவன் வேண்டுமென இருந்து“ இவரைப் பெற்றார் என்று
சிவப்பிரகாசர் பாராட்டினர்.

     புரங்கள் செற்ற விடையவர் - திரிபுமெரித்த காலத்திலே திருமால்
இடபமாய்த் தாங்கினார்; ஆதலின் இரண்டு பொருள்களையும் ஒன்றுபடுத்திக்
கூறினார்.

“தடமதில்க ளவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் றிருமால்காண் சாழலோ“

என்பது திருவாசகம்.

     தாவில் சீர்ப் பெருமை ஆரூர் - குற்றமற்ற சிறப்பாவது தன்பாற்
பிறந்தார் எல்லாரும் முத்தியடைதல்....பெருமையாவது அச்சிறப்புப்
பிறிதொன்றிற்கு மில்லாமை. சீர்ப்பெருமை என்பதனைத் தலைவன்
என்பதற்கு அடைமொழியாகி உரைப்பதுமொன்று.

     ஆரூர் மறையவர் தலைவ! - ஆரூரில் எழுந்தருளிய வேதியர்
பெருமானே!

     மேவினர்...போற்ற - இரண்டு பாலும் வேறு வேற மேவினரும்,
ஆயமும்போற்ற என்று கூட்டுக. மேவினராகிய ஆயம் வேறு வேறாகப்
போற்ற என்று உரைத்தலும் ஆம். ஆயம் - மகளிர் கூட்டம்.

     வேறு வேறாயும் போற்ற - வேறு வேறாகப் போற்ற - என்பனவும்
பாடங்கள்.  186

     333. (வி-ரை.) கடா - குரங்கு - கவுதாரி - இவற்றைப் பயிற்றிப்
போய்ப் பெரியோர் திருமுன் காட்டிச் சன்மானம் பெறுதல் அந்நாளில்
அரசர் சமூகத்திற் பெருவழக்காம். இந்திரத்திருவின் மேலாம் கோலத்துடன்
சென்றதற்கேற்ப இதனையும் கூறினார். கை என்பதனைப் பற்றி
என்றதனோடு கூட்டிக் கைப்பற்றிப் பயிற்றிச் செல்ல என்றுரைத்தலுமாம்.
கடா - ஆட்டுக்கடா தகர்ப்பாய்ச்சல் முதலிய காணுதல் அரசர்
விளையாட்டுப் பொழுது போக்குக்கள். இவைகளைப் பின்னர்க் காண்க.

     பயின்மொழி பயிற்றிச்செல்ல - பெரியோரைச் சூழ்ந்த கூட்டத்தில்
வரும் போது அதற்கேற்ப வருதல் வேண்டுமாதலின் முன்னர்ப் பயிற்றிப்
பழக்கிய நன்மொழிகளால் அவைகளை வழிப்படுத்திச் செல்ல என்க.
இவையுடன்செல்லுதல் உலாச் சிறப்பின்பொருட்டுமாம். திருநகரச் சிறப்பு
21-ம் திருப்பாட்டுக் காண்க. தகர் வென்றி - சிவல் வென்றி முதலிய
புறப்பொருட்டுறைகளையும் காண்க.