| 337.
|
மன்பெ
ருந்திரு மாமறை வண்டுசூழ்ந்
|
|
| |
தன்பர் சிந்தை யலர்ந்தசெந் தாமரை
நன்பெ ரும்பர மானந்த நன்மது
வென்ற ரத்து மளித்தெதிர் நின்றன;
|
191 |
| 338.
|
ஞால
முய்ய நடமன்று ளாடின;
|
|
| |
கால
னாருயிர் மாளக் கருத்தன;
மாலை தாழ்குழன் மாமலை யாள்செங்கை
சீல மாக வருடச் சிவந்தன,
|
192 |
| 339.
|
நீதி
மாதவர் நெஞ்சிற் பொலிந்தன;
|
|
| |
வேதி
யாதவர் தம்மைவே திப்பன;
சோதி யாயெழுஞ் சோதியுட் சோதிய;
வாதி மாலவன் காணா வளவின; |
193 |
| 340.
|
வேத
வாரண மேற்கொண்டி ருந்தன;
|
|
| |
பேதை
யேன்செய் பிழைபொறுத் தாண்டன;
வேத மானவை தீர்க்க விசைந்தன;
பூத நாதநின் புண்டரீ கப்பதம்.
|
194 |
| 341.
|
இன்னவா
றேத்து நம்பிக் கேறுசே வகனார்
தாமும்
|
|
| |
அந்நிலை
யவர்தாம் வேண்டு மதனையே யருள
வேண்டி
மன்னுசீ ரடியார் தங்கள் வழித்தொண்டை யுணர
நல்கிப்
பின்னையு மவர்க டங்கள் பெருமையை யருளிச்
செய்வார்.
|
195 |
336.
(இ-ள்.)வெளிப்படை.
நான் இந்த அடியார்களுக்கு
அடியேனாவேன்' என்னும் அன்பு தமது திருவுள்ளத்திலே மேலிட்டெழக்,
கொடிகள் கட்டியதாய், நெடியதாய், வெற்றியே தருவதாய் உள்ள
உட்கோபுரத் திருவாயிலைப் பணிந்து, கைகளைச் சிரமேற் கூப்பிக்கொண்டு,
திருக்கோயிலினுள்ளே நம்பிகள் புகுந்தார். (அப்போது) மணமும் அழகும்
உடைய கொன்றை மலரைச்சூடிய தியாகேசர் அவர் எதிர்காட்சி காணக்
காட்டுமாறு அவர்க்கு எதிரே தோன்றி நிற்க(க்கண்டு) அவரது சீபாதங்களை
வணங்கி அவற்றைச் சிரமேற்றாங்கிக் கொண்டவராய்; (பின்வரும் நான்கு
திருப்பாட்டுக்களிற் கூறியவாறு துதிப்பாராயினர்.) 190
337.(இ-ள்.)வெளிப்படை.
நிலைபெறுகின்ற பெருந்திருவைத் தருகின்ற
அளவில்லாத வேதங்களாகிய வண்டுகள் மொய்த்து ஒலிப்ப, அன்பால்
நினைவாரது உள்ளச் செந்தாமரையிலே (ஊறுகின்ற) நல்ல பெரிய
பரமானந்தம் என்கின்ற நல்ல தேனைப் பெறத் தகுதியில்லாத எனது
தரத்திலேயும், பெறும்படி கொடுத்து எதிரே தாமே போந்து நின்றன; 191
338.(இ-ள்.)வெளிப்படை.
உலகம் உய்யும்பொருட்டு ஐந்தொழிற்
பெருங்கூத்தைத் திருஅம்பலத்திலே ஆடின; இயமனது உயிர்போகும்படி
கோபித்தன; மாலையணிந்த கூந்தலையுடைய உமையம்மையார் தமது
செங்கையினாலே உபசரித்துத் தடவச் சிவந்து காட்டின; 192
339.(இ-ள்.)வெளிப்படை.
நீதியில் நிற்கும் தவமுடையார்களது
மனத்திலே ஒளி வீசி விளங்குவன; அறியாதவர்களையும் அறிவித்துத்
திருத்துவன; ஒளிப்
|