பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்405

Periya Puranam

பொருள்களுக் கெல்லாம் ஒளிகொடுத்து அவற்றின் மேலும் எழுந்து
விளங்கும் ஒளியாயுள்ளன; ஒரு காலத்துத் தோன்றும் இயல்பினராகிய
மாலினாலே காணமுடியாத அளவையுடையன;“ 193

     340. (இ-ள்.) வெளிப்படை. “வேதங்களாகிய யானையின்மீது நிற்பன;
அறியாமை யுடையேனாகிய நான் செய்த பிழைகளைப் பொறுத்தருளி -
என்னை ஆளாகக் கொண்டன; (மேலும் வரக்கடவனவாகிய) குற்றங்களை
எல்லாம் போக்கவும் இசைந்து நின்றன பூத கணங்களின் தலைவராகிய
தேவரீரது தாமரைபோன்ற சீபாதங்கள்.“

     341. (இ-ள்.) வெளிப்படை. இவ்வாறு போற்றுகின்ற நம்பிகளுக்கு
இடப ஏற்றின் தலைவராகிய பெருமானும் அந்நிலையிலே அவர் வேண்டிய
அப்பொருளையே அவருக்கு அருள் செய்வதற்காக, நிலைபெற்ற
சிறப்புப்பொருந்திய அடியார்களது வழி வழியாக வரும் திருத்தொண்டின்
திறங்களை உணரும் அறிவு கொடுத்து (அறியச் செய்து) மேலும்
அவர்களது பெருமைகளைத் தாமே அருளிச் செய்வாராயினார். 195

     இந்த ஆறு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன. (அலங்கலந்
தோளினான் - 334) ஆதரவுகூர - வாயில் புக்கார்; - கொன்றை
வேய்ந்தார் - அவர்க்கு எதிர் - காட்டும்படி - தோன்றி நிற்கப் -
பாதங்கள் - பணிந்துபூண்டு - “நின் - பதம் - எதிர் நின்றன; ஆடின-;
கறுத்தன; சிவந்தன; - பொலிந்தன; - வேதிப்பன; - சோதிய;- அளவின;-
இருந்தன;- ஆண்டன;- இசைந்தன“ (என்று) இன்னவாறு ஏத்தும்
நம்பிக்குச் - சேவகனார் - அருளவேண்டி - நல்கி - அருளிச் செய்வார் -
என்று தொடர்ந்து முடித்துக் கொள்க.

     336. (வி-ரை.) ஆதரவுகூர - அன்புமிக. ஆதரவு - சார்பிலே எழும்
விருப்பம். கூர்தல் - மிகுதல்.

     கொடி நெடுங் கொற்ற வாயில் - கொடி - கோபுரங்களின் மீதும்
வாயில்களின் மீதும் வெண் கொடிகள் உயர்த்திக் கட்டுதல் மரபு.
“வெண்கொடியாடும்“ என்றுமுன்னர்க் (243) கூறியதும் காண்க. நெடும் -
பெரியோர் உள்ளம்போல ஓங்கிய. “விளங்கும் வாயில், அப்பதியில்
வாழ்பெரியோர் உள்ளம்போல, ஓங்குநிலைத் தன்மையவாய்“ (திருகுறிப்பு.
புரா. 88) என்பது காண்க. கொற்றம் - வாயில் வெற்றி பொருந்திய தாதல் -
அதாவது எஞ்ஞான்றும் தீமை உள்ளே வாராமற் காத்தல். “உலகுய்ய
உமைபாகர் அருள் செய்த வொழுக்கமல்லாற், றீங்குநெறி யடையாத
தடையுமாகி“ (திருக்குறிப்பு - புரா - 88) என்பது காண்க. வாயில் - இது
தேவாசிரியனை வணங்கியதும் திருக்கோயிலுனுள்ளே புகும் முதற்றிருவாயில்.
166 பக்கம் - படம் பார்க்க.

     காணக் காட்டும்படி - காணுமாறு காட்டும்படி. இறைவன்
காட்டுவித்தாலன்றி உயிர்கள் காணா; ஆதலின் காணக் காட்டும் என்றார்.
“காட்டுவித்தாலாரொருவர் காணாதாரோ காண்பாரார் கண்ணுதலாய்
காட்டக்காலே“ என்பது தேவாரம். நம்பிகள் காணுமாறு காட்டுவதற்காக
எதிரே தோன்றி நிற்க என்க.

     பாதங்கள் - எதிர் நின்றனவாகிய திருவடிகள். இவையே சத்தியின்
வியாபகம். இவற்றைக் காணுமாறு காட்டிய வகையினாலே இவ்வியாபகத்திலே
நிறைந்தவர்களாயும், திருவடி நிலையர்களாதலின் அடியவர்கள் எனுங்
காரணப் பெயர் பெற்றாராயுமுள்ள அடியவர்களின் தன்மையும், அவர்கள்
பெற்ற பேறும் உணர்த்தியவாறாயிற்று. அந்த ஆதரவுடன் நம்பிகள்
உட்புக்காராதலின் அவர் வேண்டிய அதனையே தரும்படி இறைவன் தமது
பாதங்களைக் காணக் காட்டினார். முன்னர் “அந்நிலை யவர்தாம் வேண்டு
மதனையே அருள வேண்டி“ என்றது இக்கருத்துப்பற்றியே என்க.

     பூண்டு - தலைக்குப் பூணாகச் சூடிக்கொண்டு. 1190


     குறிப்பு. 1இப்பாட்டின் கீழ்த் திருநெல்வேலிச் சுவடிகள் சிலவற்றில் 16
பாட்டுக்கள் அதிகமாகவும் இடைச் செருகலாகவும் காணப்படுகின்றன.
அவற்றை இப்புராணத்திறுதியில் அநுபந்தத்திற் காண்க.