|
337.(வி-ரை.)
மன்பெரும் திருமாமறை - மன்னுதல் - நிலைபெறுதல்.
பெரும் - எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கி நிற்றலாற் பெரிய
என்றார். திரு - “திருநின்ற செம்மை“ என்றபடி செம்மைக்கு ஏதுவாகிய
பொருளைத் தன்னுட் கொண்டு தருகின்றனவாய் விளங்குதலால் திரு
(மாமறை) என்றார். திரு - என்றும் வாராத செல்வம். பசுநூல்களாற்
கூறப்படும் திருவெல்லாம் நிலைபெறாதனவாய்ச் சிறுமையுமுடையன;
மாமறை கூறுநெறியாற் பெறுந் திருவே நிலைபெறும் பெருமையுமுடைய
திருவாமாதலின் அது மன்பெருந்திரு எனப்பட்டது. மா -
அளவிடற்கரிதாம்படி விரிந்த. நிலைத்த - பெரிய - திருவைப்பொருந்தித் -
தருகின்ற - அளவில்லாத மறை - என்க. வேதங்கள் நான்காயினமையின்
அடைமொழிகளும் நான்காயின போலும்.
மறை வண்டு சூழ்ந்து
- வேதமாகிய வண்டுகள் மது
உண்ணும்ஆசையாற் சுற்றி யொலிப்ப சூழ்ந்து - செய்து என்னும்
வாய்பாட்டு வினையெச்சம் செய என் வாய்ப்பாட்டெச்சமாகி உபசாரத்தால்
ஒலிப்ப எனப் பொருள் தந்து நின்றது. “மாமறைகள், சொன்ன துறைதொறும்
தூப்பொரு ளாயின“ என்பது அப்பர் பெருமான் (திரு இன்னம்பர் - 1)
தேவாரம்.
சூழ்ந்த என்றமையால் இவற்றின் இடையிலே மது விளங்கும்
என்பதாம். எசுர் வேதத்தின் இருதயத்திலே விளங்குவன சிவ என்னும்
இரண்டெழுத்துக்கள் (அட்சரத்துவயம்) எனப் பெரியோர்கள் துதித்திருத்தல்
காண்க. “எழுதரிய மறைச்சுரும்பு கிடந்து புறத்தலம்ப“ என்பது
திருவிளையாடல். சூழ்ந்து - என்றதனால் சுற்றிப்புறத்துக் கிடப்பதேயாம்
எனவும், அகத்திற் சுவைப்பது அன்பர் சிந்தை எனவும், அப்பாதம்
சிந்தைத்தாமரையிலே தேனாக ஊறி அனுபவிக்கப்பெறுவன எனவும்,
குறித்ததாம். மறைசூழ்ந்து - பாதத்தை அகப்படுத்துமாறு சூழ்ச்சிசெய்ய
என்பதும் குறிப்பு.
“மன்று ளாடும்மது வின்னசை யாலே மறைச்சு
ரும்பறை புறத்தின்
மருங்கே“ (242) என்று முன்னர்க் கூறியதும் காண்க. “பண்டைமறை
வண்டரற்ற“ என்றார் அருணந்தி சிவாசாரியர்.
அன்பர் சிந்தை அலர்ந்த செந்தாமரை -
“கீழ்மையிற்
றொடர்ந்து கிடந்தவென் சிந்தைப்
பாழறை யுனக்குப் பள்ளியறை யாக்கிச்
சிந்தைத் தாமரைச் செழுமலர்ப் பூந்தவி
செந்தை நீயிருக்க விட்டனன்.." |
| திருக்கழுமல
மும்மணிக்கோவை - 4 |
என்ற பட்டினத்தடிகள்
திருவாக்குக் காண்க.
“அன்புடைத்
தொண்டர்க் கமுதருத்தி, யின்னல் களைவன“
“சிந்திப் பவர்க்குச் சிறந்து செந்தேன், முந்திப் பொழிவன“ |
என்பன அப்பர் பெருமான்
திருவிருத்தங்கள். இவ்வலர்ந்த தாமரையிலே
ஊறுவது இறைவனது திருவடியாகிய மது - தேன். அது தருவது பரமானந்த
அநுபவமாம்.
இவ்வாறன்றிச் சிந்தையிலே அலர்ந்த செந்தாமரை
எனக் கொண்டு
சிந்தையை அந்தத் தாமரைபூக்கும் நீர் நிலையாகக் கூறுவாருமுண்டு.
அவர்கள்,
“........அன்பர் இதய மென்னும், செழுமலரோ
டையின்மலர்ந்து
சிவானந்தத் தேன்றதும்பு தெய்வக் கஞ்சத், தொழுதகு சிற்றடி.....“
(விருத்தகுமார பாலரான படலம்) என்று திருவிளையாடற் புராணமுடையார்
இதற்குப் பொருள் கூறியிருத்தலைக் கூறுவர்; ஆயின் இங்குச் சிந்தைக்குரிய
ஓடையாகிய உவமானமும், தாமரைக்குச் சிந்தையாகிய உவமேயமும்
வருவித்துரைப்பர். இங்குக் கொண்ட பொருளிலே மறை வண்டு -
சிந்தைத் தாமரை - ஆனந்த மது - என உவமான உவமேங்கள் இயல்பிற்
பொருந்திநிற்
|