பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்407

Periya Puranam

பன. அன்றியும் மது தாமரையினுட்கலந்து அது அலரஅலா உள்ளே
ஊறுவதுபோலச் சிந்தையுட் கலந்த திருவடியே அன்பு முதிர முதிர
ஆனந்தமாய் ஊற்றெடுப்பதாம். இங்குத் திருவடியைக் காட்டக் கண்ட
நம்பிகள் அத்திருவடியே “தன்னை நினையத் தருகின்றான்“ (பதினொராந்
திருமுறை) என்று நம்பியாண்டார் நம்பிகள் அருளியபடி மதுவாகிய
தம்மையே அளித்ததாகப் போற்றுவதுங் காண்க. எனவே திருவடியையே
மதுவாகக் கூறினர் என்பது.

     நன் பெரும் பரமானந்த நன்மது - வேதத்திலே எனைத் தேவர்கள்
பெயரோடு சேர்த்து விஷ்ணுவானந்தம் - அக்கினியானந்தம் -
இந்திரானந்தம் முதலியன கேட்கப் பெறாமையானும், சிவானந்தம் ஒன்றே
கேட்கப்பெறுதலானும், சிவானந்தமே பரமானந்தம் என்க. ஆதலின்
பிரமானந்தம் என்பதிற் பிரமசத்தமானது பிரமனைக் குறிக்காது
பரப்பிரமமாகிய சிவத்தையே குறிப்பதாம் என்றுங் காண்க. நல் - என்ற
இரண்டில் முன்னையது ஆனந்தத்திற்கும், பின்னையது மதுவுக்கும்
அடைகளாம். பரமானந்தமாவது - உயர்வு ஒப்பு இல்லாததும்
அழிவில்லாததும் ஆகிய சிவத்துவ விளக்கமாம். அதனை அழுந்தியறிதலே
அநுபவமெனப்படும். “இன்பமே எந்நாளுந் துன்பமில்லை“ என்றது
திருவாக்கு.

     என்தரத்தும் அளித்து - பெறச் சிறிதும் தரமில்லாத
என்னிடத்திலேயும். உம்மை இழிவு சிறப்பு. அளித்து - கொடுத்து.
அளியினாற் (கருணையினாற்) கொடுத்து எனவும் குறிப்பிட்ட அழகு காண்க.

“என்னையு மாளுந்தன்மைக் கெந்தையெம் பெருமா னீசன்
றன்னரு ளிருந்த வண்ணம்....“
                         - (திருஞான - புரா - 226)

என்பனவாதி திருவாக்குக்கள் காண்க. பெருமானது அருளிப்பாடுகள்
தம்மிடம் வெளிப்பட நிகழக் கண்டபோது தமது சிறுமையையும், அவரது
அளவிறந்த பெருமையையும் எண்ணி எண்ணி ஆராமைப்பட்டு
அநுபவித்தல் பெரியோரியல்பு.

“இத்தனையும் எம்பரமோ வைய! ஐயோ!
எம்பெருமான் றிருக்கருணை யிருந்த வாறே“

என்ற அப்பர் பெருமான் தேவாரமும்,

“யாவர்க்கு மேலா மளவிலாச் சீருடையான்
யாவர்க்குங் கீழா மடியேனை - யாவரும்
பெற்றறியா வின்பத்துள் வைத்தாய்க்கு.......“

என்ற திருவாசகமும் காண்க.

     வண்டுசூழ் - என்பதும் பாடம். 191

     338. (வி-ரை.) நடம் - ஐந்தொழிற் பெருங்கூத்து. இதனையே
அற்புதக் கூத்து - ஆனந்தக்கூத்து - பொற்றில்லைக்கூத்து என்று பலவாறும்
வகுத்துப் புகழ்ந்து ஆணையிட்டனர் திருமூலதேவ நாயனார். (திருமந்திரம்
ஒன்பதாந் தந்திரம் பார்க்க).

     ஞாலம் உய்ய - உயிர்கள் கடைத்தேறி உய்யும்படியாகப் படைத்தல்
- காத்தல். அழித்தல் - மறைத்தல் - அருளல் என்னும் ஐம்பெருந்
தொழில்களும் இறைவன் செய்கின்றான்; ஆதலின் ஞாலம் உய்ய என்றார்.
இவையே தோற்றம் - நிலை - இறுதி - மறைப்பு - அருள் எனவும்
கூறப்பெறும். இவற்றைப் புரிதலையே நடம் ஆடின என்பர். ஞாலம் -
உயிர்களின்மேல் நின்றது. இவற்றின் விரிவு முன்னர் 42-ம் பாட்டிலும்,
இன்னும் வந்த பிற இடங்களிலும் கண்டுகொள்க.

     உய்ய நடம் ஆடின - ஞாலம் - சேதனம் - அசேதனம் என
இருவகைப்படும்; அவற்றுள்ளே அசேதனம், சேதனத்தின் அநுபவத்திற்கே
உரியது. சேதனமாகிய உயிர்கள் மலத்தாற் கட்டுப்பட்டன. மல மறைப்பு -
இருள். இவ்விருள் மிக வலிமை வாய்ந்தது. அது தானாய் அகலாது; உயிரோ
அதனை அகற்ற வலிமையற்றது; ஆதலின் இயல்பாகவே மலமற்றவனாய்
எல்லாம்வல்லவனாம் ஒருவன் வேண்டும். அவன்