|
ஆதிமாலவன்
காணா அளவின - பன்றியாய்ச் சென்று திருவடி
தேடிக் காணாதவர் திருமாலே யாதலானும், இங்குக் கூறுவது அந்தப்
புண்டரீகப் பதமேயாதலாலும் மாலவன் என்ற பாடமே சிறந்ததாம்.
ஆதி - தொடக்கம் - தோன்றுதல். ஈறிலாதவன் ஈசன் ஒருவனே
என்றபடி இறைவன் ஒருவனே ஆதியும் அந்தமுமில்லாதவன்;
அநாதியாயுள்ளவன். தமக்கு ஒரு ஆதியை - தொடக்கத்தை - உடையார்
அநாதியை அறியார். ஆதலின் ஆதி மாலவன் காணா அளவின என்றார்.
ஆதியுமந்தமுமல்லா வரும்பெருஞ் சோதி என்பது திருவாசகம். பெருஞ்
சோதியேயாயினும் சிலர் காணப்பெறாமலிருப்பது அவர்களது
பக்குவக்குறையிலேகாண்க. சோதியேசுடரேசூடரேசூழொளி விளக்கே
என்ற திருவாசகமும்காண்க. சோதியாய் எழும் மூன்று சோதியும்
இறைவனது மூன்று கண்களாம். கண்கள் கருவிகளேயாதலின் இவற்றுள்ளே
உயிரின் செயல் கலந்தாலன்றி இவைகட்குச் செயல் இல்லை.
இம்மூன்றினுள்ளும் உட்சோதியாயிருந்து இறைவன் அவற்றிற்கு ஒளி
தருவன் என்பதும் குறிப்பு. கறுத்தனவாயினும் சிவந்தன; பொலிந்தனவாயினும்
வேதிப்பன; சோதியவாயினும் காணா வளவின; என அணிபெறத் தொடர்ந்து
துதித்த சுவையும் காண்க. வேதிப்பன - என்ற கருத்து குருடர்க்கு முன்னே
குடிகொண் டிருப்பன என்ற திருவிருத்தத்திலும், மாலவன் காணா - என்ற
கருத்து கருடத் தனப்பாகன் காண்டற் கரியன என்ற திருவிருத்தத்திலும்
அப்பர் பெருமான் அருளியமை காண்க. சோதிய - என்பது சோதியாய்
நிறைந்தான் சுடர்ச்சோதியுட் சோதியான் (திருவையாறு - இந்தளம் - 7)
என்ற திருஞான சம்பந்த நாயனார் தோவரத்துட் காண்க.
பொலிவன
- மாலயன் - என்பனவும் பாடங்கள். 193
340. (வி-ரை.)
வேத வாரண மேற்கொண்டிருந்தன - வேதங்கள்
இறைவனைமேற்கொண்டு போற்றுகின்றன என்பது. வேதத்தில் விளங்குந்
திருவடி என்க. வாரணம் - யானை. யானைபோலப் பெருமையும்
விளக்கமும் தருதலால் வேதம் வாரணம் எனப்பெற்றது. ஆரணம் -
வேதம் எனக் கொண்டு வேதமாகிய ஆரணம் எனக் கூறுவாரும்,
ஆரணம் - வேதத்தின் ஞானபாகமாகிய உடநிடதமென்று கூறுவாரும்
உண்டு. வாரணம் - குதிரை எனக்கொண்டு வேதமாகிய குதிரையின்மேல்
என்றுங் கூறுப. இறைவன் மாணிக்கவாசகர் பொருட்டு வேதக்
குதிரையின்மேற் குதிரைச் சேவகனாகி வந்தான் என்ற சரிதமும்,
பண்ணியல், வைதிகப் புரவியும் (பதினொராந் திருமுறை -
கோயினான்மணி - 4) முதலிய திருவாக்குக்களையும் இங்கு எடுத்துக்
கூறுவர். ஆயின் குதிரைக்கு வாரணம் என்ற வழக்கு பெருநூல்களிற்
காண்பதரிதாம்.
ஆரணங்களே யல்ல மறுகிடை வாரணங்களும் மாறி
முழங்குமால்
என முன்னர்க் கூறுதலும், வேதங்கள் நிஷாதசுரத்திற் பயிலப்பெறுதலும்
இங்கு வைத்துணரத் தக்கன. நிஷாதம் - யானையின் பிளிற்றோசை.
மலைக்கொளானை என்ற திருக்கடவூர்த் திருக்குறுந்தொகையிலே
அப்பர் பெருமான் இறைவனைக் கலைக்கை யானை கண்டீர்
கள்ளவானை கண்டீர் முதலாகப் பதிக முழுதும் யானையாகவே
காட்டியதும், வேதமாகிய வெஞ்சுடரானையார் என்றருளியதும் காண்க.
செய்பிழை பொறுத்தாண்டன
- இதன் விரிவு முன்னர்த் திருமலைச்
சிறப்பின் வரலாற்றிலும், தடுத்தாட்கொண்ட வரலாற்றிலும் காண்க.
செய்பிழை - செய்த பிழை என இறந்த காலப் பொருளில் வந்தது.
பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன என்பது அப்பர் பெருமான் தேவாரம்.
ஏதமானவை தீர்க்க
இசைந்தன - முன் செய்த பிழை பொறுத்
தாண்டது போலவே, இனி வருங்காலத்திற் செய்யக்கடவனவாகிய
பிழைகளையும், அவற்றால்வரக்
|