பக்கம் எண் :


418 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
  முன்னமா லயனறியா முதல்வர்தா மெழுந்தருள,
அந்நிலைகண் டடியவர்பாற் சார்வதனுக்                           கணைகின்றார்,
  200

347. தூரத்தே திருக்கூட்டம் பலமுறையாற் றொழுதன்பு
 
  சேரத்தாழ்ந் தெழுந்தருகு சென்றெய்தி நின்றழியா
வீரத்தா ரெல்லார்க்குந் தனித்தனிவே
                           “றடியே“னென்
றார்வத்தாற் றிருத்தெர்ணடத் தொகைப்பதிக                            மருள்செய்வார்,
201

348. தம்பெருமான் கொடுத்தமொழி முதலாகத்
                           தமிழ்மாலைச்
 
  செம்பொருளாற் றிருத்தொண்டத் தொகையான
                            திருப்பதிக
மும்பர்பிரான் றானருளு முணர்வுபெற வுலகேத்த
எம்பெருமான் வன்றொண்டர் பாடியவ
                      ரெதிர்பணிந்தார்.
202

     346. (இ-ள்.) வெளிப்படை. நிலைபெற்ற சிறப்புடைய வயல்களாற்
சூழப்பெற்ற திருவாரூர்த் தியாகேசரது பாதங்களில் தமது முடி பொருந்தும்படி
வணங்கி, அவரது திருவருளை மேற்கொண்டிருந்த பொழுதிலே, பிரம
விட்டுணுக்களால் நினைக்கவும் முடியாத அம்முதல்வர் எழுந்தருளினாராக;
அதனைக்கண்டு நம்பிகள், தேவாசிரியனிற் கூடியிருக்கும் அடியார்களிடத்தே
சார்வதற்கு அங்கு அணைவாராகி,       200

     347. (இ-ள்.) வெளிப்படை. அடியார் திருக்கூட்டத்தைத் தூரத்து
நின்றே பல முறையாலும் வணங்கியும், அன்பின் மிகுதியினாலே மீண்டும்
தாழ்ந்தெழுந்தும், பின்னர் அருகேபோய் நின்றுகொண்டு, எக்காலத்தும்
அழியாத வீரமுடையார்களாகிய அவர்கள் ஒவ்வொருவர்க்கும் தனித்தனியாக
அவ்வவர் திருப்பெயர் சொல்லி இவர்க்கு அடியேன், இவர்க்கு அடியேன்
என்றும், பின்னர் அதற்கு வேறாகத் தொகுதியாய்க் குறித்து
இத்தொகுதியார்க்கு அடியேன் என்றும் துதித்து மேன்மேல் எழுகின்ற
ஆசையினால் திருத்தொண்டத்தொகை என்ற பேர்பெற்ற திருப்பதிகத்தை
நம்பிகள் அருளிச் செய்வாராய்,  201

     348. (இ-ள்.) வெளிப்படை. தமது இறைவன் எடுத்துக்கொடுத்த
மொழிகளையே முதலாக வைத்துத் தொடங்கிய தமிழ்ப் பாமாலையாய்ச்
செம்பொருள் கொண்டு திருத்தொண்டத் தொகையாகிய திருப்பதிகத்தை
அந்த இறைவனே அருளும் உணர்வுபெறுதலால் உலகம் ஏத்துமாறு எமது
தலைவராகிய வன்றொண்டர் பாடி முடித்து அத்திருக்கூட்டத்தின் முன்னர்
வணங்கினார்.   202

     இம்மூன்று பாட்டுக்களும் ஒரு முடிவு கொண்டன. மன்னவரை -
வணங்கி - மேற்கொள் பொழுதில் - முதல்வர் - எழுந்தருளச் -
சார்வதனுக்கு அணைகின்றாராய்த் - தொழுது - தாழ்ந்து - எழுந்து -
சென்று - எய்தி - நின்று - தனித்தனி - வேறு - அடியேன் என்று -
பதிகம் அருள் செய்வார் - முதலாக - மாலை - பொருளால் - பெற -
ஏத்தப்பாடி - வன்றொண்டர் - எதிர்பணிந்தார் - என்று தொடர்ந்து
முடித்துக்கொள்க.

     346. (வி-ரை.) ஆரூர் மன்னவர் - தியாகேசர். “ஆரூர் ஆண்ட“
(தேவாரம்)

     திருவருள் மேற்கொள் பொழுது - தாம் பெற்ற அத்திருவருளின்
வழியாய் நின்றபோது - திருவருளாணையின்படியே பாடத் தொடங்கியபோது
என்பர்.

     அந்நிலை கண்டு - “அவர்க்கெதிர் காணக் காட்டும் படியெதிர்
தோன்றி நிற்கும்“ (336) நிலையை இதுவரை கண்டுகொண்டிருந்த நம்பிகள்
இப்போது அவர் அக்காட்சியை மறைத்து எழுந்தருளிவிட்ட அந்த
நிலையினைக் கண்டு. எழுந்தருள என்பது இறைவன் முன் காட்டிய
வெளிப்பாட்டு நிலையினை மறைத்துத் தமது வியாபக நிலையினுட்போகும்
நிலையைக் குறிக்கும் சைவசம்பிரதாய வழக்கு. “என்றெழுந்தருளினாரே“
(திருநீலகண்ட நாயனார் புராணம் - 42) “எழுந்தருளினாரையர்“
(அமர்நீதிபுரா - 47) முதலிய பல இடத்