|
தும் காண்க. இவ்வாறன்றி,
இதற்கு இறைவன் கோயிலுக்குள்
எழுந்தருளினாரோ, அன்றித் தேவாசிரியனுக்கு எழுந்தருளினாரோ
என்றெல்லாம் எடுத்துக்கொண்டு உரை கூறுவது மரபன் றென்க.
அடியவர்பாற் சார்வதனுக்கு
அணைகின்றார் - ஆண்டவனது சார்பு
நேரே காணாவாறு மறைந்தருளியமை கண்டனர்; அதுகாலை அடுத்த சார்பு
அவனடியார்களாகிய இவர்களேயாம் என்று கொண்டனராய் இவர்களைச்
சார அணைகின்றார் என்பதும் குறிப்பு.
“சார்புணர்ந்து
சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்“ |
என்பது குறள். இக்குறளுட்
போந்த உண்மையை இங்கு வைத்துக் கண்டு
களிக்க. இக்குறளினைத் திருக்கயிலாய ஞான உலாவிலும், திருக்களிற்றுப்
படியார் என்ற ஞான சாத்திரத்திலும் வைத்து ஆளப் பெற்றுள்ளதே இதன்
பெருமையை விளக்கும். சாரவேண்டிய அடியையும் அடியாரையும்
சார்ந்தவர்களே, தாம் இப்போது சார்ந்து நின்ற உலகச் சார்பை ஒழித்துப்
பிறவித்துன்ப நீங்குவர் என்பதாம். இதனால் அணைந்தோர் தன்மையை
விளக்கியவாறு.
அணைகின்றார் என்ற சொல்லினழகும் நோக்குக.
சார்பு
- சைவசித்தாந்தத்திலே சிறப்பாய்ப் பேசப்பெறும் அரிய
உண்மையை விளக்குவதோர் சொல். உயிர் சார்ந்ததன் வண்ணமே
தன்வண்ணமாய்க் கொண்டு நிற்கும் என்பது சைவசித்தாந்த உண்மை.
“மாந்தர்க், கினத்தியல்ப தாகு மறிவு“ (குறள்) என்பதும்
இப்பொருள் பற்றியது.
“ஆணவத்தோ
டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோ டத்துவிதஞ் சாருநா ளெந்நாளோ“ |
| -
தாயுமானார் |
முதலிய திருவாக்குக்கள்
காண்க. சார்தல் என்னும் இவ்வரிய பொருளையும்
சொல்லையும் இப்புராணத்துட் பின்னர்க் காணும் பல இடங்களிலும்
இவ்வாறே பொருள் கொண்டு உய்த்துணர்ந்து கொள்க.
அணைகிறார்
- அணைந்தார் தன்மைகளை சிவஞானபோதம் 12-ம்
சூத்திரம் பேசும். எதிர் காட்சி கண்ட முதற்றிருவாயிலிலிருந்து
தேவாசிரியனை நோக்கி வருகின்றாராகி - அணைகின்றாராகி - முற்றெச்சம்.
செல்வதனுக்கு - என்பதும் பாடம். 200
347. (வி-ரை.)
திருக்கூட்டம் - கூட்டம் - கூடியிருந்த
அடியவர்களைக் குறித்தது - ஆகுபெயர். இத்திருக் கூட்டத்தின் இயல்பும்
விரிவும் முன்னர்த் திருக்கூட்டச் சிறப்பிற் காண்க. அதனைத் தூரத்தே
தொழுதல் - அதன் பெருமையும், அதனை நோக்கத் தமது சிறுமையும்,
அதனை வணங்கும் முறையும் குறித்ததாம். திருக்கூட்டம் பேணாதேகும்
ஊரனுக்கும் புறகு என்று வெகுண்ட விறன்மிண்டர் மகிழுமாறு தூரத்தே
தொழுதார் என்பாரும், இது அவரது கோபத்தின் மிகுதி குறித்தது
என்பாருமுண்டு.
பல முறையால் தொழுது
- மனம் - மொழி - மெய் என்ற மூவகை
வணக்கமும், மூன்றுறுப்பு - ஐந்துறுப்பு - எட்டுறுப்பு - என்னும் பலவகை
உடல் வணக்கமும், இவை ஒன்றுக்கு மேற்பட மீளமீளச் செய்தலாகத்
தொகையின்மிக்க வணக்கமும் அடக்கிப் பல முறையால் என்றார்.
“மகிழ்ந்தெழுந்து பலமுறையும் வணங்கு கின்றார்“ என்றதும் காண்க.
(திருஞான - புரா - 1023)
அன்பு சேரத் தாழ்தல்
- மேன்மேல் அன்பு கூர்தலால் மீண்டும்
வீழ்ந்தெழுந்து வணங்குதல். சேர - சேர்தலால்; சேரும் பொருட்டு
என்றுரைத்தலுமாம் தாழ்ந்து - விரும்பி என்றுரைப்பினுமாம்.
|