|
இல்லையே
என்னாத - சரிதக்குறிப்பு. வெல்லுமா மிகவல்ல
இக்கருத்தை ஆசிரியர் வேடமே மெய்ப்பொருளெனத் தொழுது வென்றார்
என்று விரித்தருளினர். குன்றையார் - செங்குன்றூர் என்னும் நகரில் வந்தவர்.
முல்லையந் தார் - வணிகர்க்குரிய மாலை. 2. இலைமலிந்த வேல் - பரசு.
மங்கை - திருமங்கலம். 3. மும்மை - திருநீறு - கண்டிகை - சடைமுடி.
மெய்ம்மையே திருமேனி.......அடியேன் இப்பாசுரத்தின் ஒன்றரை
அடியிற்றுதித்தது சண்டீசர் அரனார் மகனாரான சிறப்புப்பற்றிப்போலும்.
வம்பறா வரிவண்டு..........அடியேன் என்ற 5-வது பாசுரத்தில் ஆளுடைய
பிள்ளையாரைத் துதித்திருப்பதும் காண்க. 4. திருநின்ற செம்மை -
சிவத்தன்மை. பெருநம்பி - இதனை ஆசிரியர் புராணத்து விரித்தது காண்க.
பேயார் - பேயுருவம் வேண்டிப் பெற்ற காரைக்காலம்மையார். விரிவு
புராணத்துட் காண்க. 5. அடியலாற் பேணா எம்பிரான் - ஈசன் கழலே
பேணுஞ் சம்பந்தன் - காந்தாரம் - சம்பந் - சீகாழி - 11. அண்ணல்
சரிதைகள் பரவிநின் றுருகு சம்பந்தன் - குறிஞ்சி - திருவிடைச்சுரம் - 11;
கழுமலம் விரும்பிய கோயில் கொண்டவர்மேல், வலிகெழு மனமிக
வைத்தவன் மறைசேர் வருங்கலை ஞானசம்பந்தன் - குறிஞ்சி
திருக்கழுமலம் - 11. கைச்சிறு மறியவன் கழலலாற் பேணாக் கருத்துடை
ஞானசம்பந்தன் - குறிஞ்சி - சம்பந் - அச்சிறுபாக்கம் - 11 என்ற
தேவாரங்கள் காண்க. நாட்டமிகு தண்டி - சரிதக் குறிப்பாகும். நம்பிரான்
திருமூலன் - சைவசித்தாந்த மரபிலே ஆகமந் தமிழில் மொழிந்த பெருமான்
என்பது குறிப்பு. அம்பரான் - திருஅம்பர் நகரினை யுடையார். 6. கழலே
மறவாது - சங்கரன்றாள் மறவாமை பொருளென்றே.....மறவாமை தலை
நின்றார் என இதனை ஆசிரியர் இப்புராணத்துள் விரித்தமை காண்க.
சீர்கொண்ட புகழ் வள்ளல் - விரிவு புராணத்துட் காணப்பெறும்.
கார்கொண்டகொடைக் கழறிற்றறிவார் - பருவக் கொண்மூப் படியெனப்
பாவலர்க், குரிமையி னுரிமையி னுதவி திருமுகப்பாசுரம் -
பதினொராந்திருமுறை தண்டாதகொடை கழறிற் - புராணம்(14) 7.
பொய்யடிமையில்லாத புலவர் - பொய்மை யிலாத்தமிழ்ச் சங்க மதிற்கிபிலர்'
பரணர்நக்கீரர் முதனாற்பத் தொன்பது பல்புலவோர் - அரன்
சேவடிக்கே.......கவி பல பாடும் புலவர்கள் என்பது நம்பியாண்டார்
நம்பிகள் திருவந்தாதி. கருவூர்த்துஞ்சிய - கைதடிந்த வரிசிலையான் -
சரிதக்குறிப்புக்கள். 8. நிறைக்கொண்ட......அடியேன் - சரிதக்குறிப்பு.
9.
காக்கின்ற பெருமான் - நிகழ்காலத்தாற் கூறியது குறிக்க. பொன்னடிக்கே
மனம் வைத்த புகழ்த்துணை - வழிவழி யகம்படித் தொண்டுரிமை பூண்ட
ஆதிசைவர். 10. தொகையடியார்களைத் துதித்தது இப்பாசுரம். 11.
தென்னவனா யுலகண்ட செங்கணார் - சரிதக்குறிப்பு. நிம்ப நறுந்தொங்கற்
கோச்செங்கணான் - திருத்தொண்டர் திருவந்தாதி அன்பராவார் -
பதிகப்பயன் குறித்தது.
தலவிசேடம் - முன்னர்க் காண்க. (163 - 164 -
பக்கங்கள் பார்க்க.)
| 349.
|
உம்பர்நா யகரடியார் பேருவகை தாமெய்த
|
|
| |
நம்பியா ரூரர்திருக் கூட்டத்தி னடுவணைந்தார்
தம்பிரான் றோழரவர் தாமொழிந்த தமிழ்முறையே
யெம்பிரான் றமர்கடிருத் தொண்டேத்தலுறுகின்றேன்.
|
203 |
(இ-ள்.)
உம்பர் நாயகர்.....அணைந்தார் - இறைவனது அடியவர்கள்
மிக மகிழ்ச்சியடைய ஆரூர் நம்பிகள் அத்திருக்கூட்டத்துட் சென்று
அணைந்தனர். தம்பிரான்.....உறுகின்றேன் - தம்பிரானும் தோழருமாகிய
அவர்கள் சொல்லிய அத்தமிழ்த் திருப்பதிகங்காட்டிய அம்முறையிலே
தனித்தனியாய் விரித்து, இறைவனுக்கு கந்தவர்களாகிய அடியார்களது
திருத்தொண்டின் வரலாறுகளையும் தன்மைகளையும் எடுத்துக்கூறித் துதிக்க
முற்படுகின்றேன். (இது ஆசிரியர் கூற்று.)
|