“பிறப்பென்னும்
பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு“ என்பது குறள். |
| |
“செம்மைபெற
வெடுத்ததிருத் தோடுடைய செவியனெனு
மெய்ம்மைமொழித் திருப்பதிகம் |
| -
(திருஞான - புரா - 76) |
“தீதுறு
பிறவிப் பாசந் தீர்த்தல்செம் பொருளாக் கொண்டு“ -
(மேற்படி 1245) முதலிய திருவாக்குக்கள் காண்க.
சைவசமய பரமாசாரிய மூர்த்திகளது தேவார திருவாசகங்களின்
பயன்
பிறவி நீங்கி வீடடைவதேயாம் என்பது ஆன்றோர் துணிபு. செம்பொருளால்
என இத்திருப்பதிகத்துக்குப் பொருள்கண்டார் ஆசிரியர்.
திருத்தொண்டத் தொகையான
- திருத்தொண்டர்களது வரலாறும்
பண்பும் இன்ன என்று தொகுத்துக் கூறுவதான. முன்பாட்டிற் கண்டது
பதிகப்பெயர். இங்குக் கூறியது அதன் பொருளமைதியும் விவரணமுமாம்.
தொகையான - தொகைக் கூற்று ஆயின. திருப்பதிகம் -
பத்துப்பாட்டுக்கொண்ட பாமாலை பதிகம் எனப்பெறும். இது
பொதுவிலக்கனத்தாலே, சிறுபான்மை 11 - 12 பாட்டுக்கொண்ட
பாமாலைகளுக்கும் பொருந்த வழங்குவது. இங்கு 11 திருப்பாட்டுக் கொண்ட
இத்தமிழ்மாலை பதிகமெனப்பெற்றது. பதிகம் - முன்னர் (48)
இப்புராணத்திற்குப் பதிகமாய்க் கொள்ளப் பெற்றதென்று உரைத்தலுமாம்.
உம்பர்பிரான் தான் அருளும் உணர்வுபெற உலகு ஏத்த
- உம்பர்
பிரான் - தேவவுலகிலே அரசு வீற்றிருந்தருளிய தியாயகேசர். அவர்
அருளிச்செய்த உண்மையறிவினை உண்முகமாகப் பெற்றதனாலே அதனை
உலகம் ஓதி உய்யும்பொருட்டுப் பாடி என்க. மொழிஎடுத்துக் கொடுத்தருளு
முன்னரே பொருள்களை உண்ணின்று உணர்த்தினார். என்பது “மன்னுசீர்
அடியார் தங்கள் வழித்தொண்டையுணர நல்கி“ (341) என மேலே
கூறியதனாற் பெற்றாம்.
எனவே திருத்தொண்டத் தொகைப்பொருள் யாவும் இறைவன்
அருளிய பதிஞானத்தாற் பாடியதாலும், அவனே தந்த மொழிகொண்டு
பாடியதாலும் அது முற்றும் தியாகே சருடைய வாக்கேயாய்ப்
பதிவாக்காகியவேதமே என்பது துணியப்பெறும்.
பெற பாடி
- பெறுதலினாலே அதன் துணைகொண்டு பாடி.
உலகேத்த - உலகம் அறிந்து ஓதித் துதித்து உய்யும்படி. இதுவே நம்பிகளது
அவதார தத்துவமுமாம் என்பது. “தீதிலாத்திருத் தொண்டத் தொகைதரப்
போதுவார்“ (35) என்று முன்னர்க் கூறப்பெற்றது.
அவர் - வீரத்தார்களான அத்திருத்தொண்டர்கள்.
வன்றொண்டர்
- மன்னவரைச் சென்னியுற அடிவணங்கியவராகிய (346)
அந்த வன்றொண்டர். தொண்டர் எதிர் பணிந்தார் என்று உரைத்துக்கொள்க.
தொகையான்ற - என்பதும் பாடம். 202
திருத்தொண்டத்தொகைத்திருப்பதிகம்
இப்பதிகம் முன்னர்த் திருமலைச்சிறப்பின் இறுதியில்
“பதிகம்“ என்ற
தலைப்புடன் 59, 60, 61 பக்கங்களில் தரப்பெற்றுள்ளது.
பதிகக் குறிப்பு :- தேவாசிரியனில் எழுந்தருளிய
அடியார்களுக்குத்
தனித்தனி வேறடியேன் என்று அவர்களை வணங்கித் துதித்தபடியாம்.
மேலே 347-ம் பாட்டில் ஆர்வத்தால் என்றதன் கீழ்
உரைக்குறிப்புப்
பார்க்க.
பதிகப் பாட்டுக்
குறிப்பு :- பின்னர் ஒவ்வோர் அடியார் புராணத்
தலைப்பிலும் கண்டுகொள்க. சிற்சில குறிப்புக்கள் மட்டும் இங்குத்
தரப்பெறுவன.
|