பக்கம் எண் :


448 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
362. அளவிலா மரபின் வந்த மட்பல மமுதுக் காக்கி
 
  வளரிளந் திங்கட் கண்ணி மன்றுளா ரடியார்க்
                                கென்றும்
உளமகிழ் சிறப்பின் மல்க வோடளித் தொழுகு
                                  நாளின்
இளமைமீ தூர வின்பத் துறையினி லெளிய
                                  ரானார்.
   3

     (இ-ள்.) அளவிலா......ஆக்கி - (அவர்) அளவுட்படாத -
பரம்பரையில் தமது மரபு வழியே நின்று செய்துவந்த தொழிலிலே செய்யும்
மட்கலங்களைத் தமது இல்வாழ்க்கையின் சீவனத்துக்கு ஆகிய அளவில்
மட்டுமே ஆக்கிக்கொண்டு; வளர்.....ஓடளித்து - வளர் பிறையை அணிந்த
இறைவனடியார்கள் வேண்டிய பலிப்பாத்திரங்களை அவர்கள் எப்போதும்
மகிழ்ந்து கொள்ளும்படி நிறையக் கொடுத்து; ஒழுகு நாளில் - ஒழுகி
வருகின்ற நாளிலே; இளமை....ஆனார் - இளமை மீதூர் தலினால்
சிற்றின்பத் துறையிலே எளியராயினார்.

     (வி-ரை.) அளவிலா மரபின் வந்த - அளவு காணமுடியாதபடி
தொன்று தொட்டு வழங்கி வந்த மட்கலத்தொழில். அளவிட முடியாத
பயனுடையதாய், “ஆரியன் குலால னாய்நின்றாக்குவ னுலக மெல்லாம்“
என்றபடி, இறைவனது சிருட்டித் தொழிலுக்கு இணை சொல்லத்தக்க மரபில்
வந்ததாய் உள்ள என்றுரைத்தலுமொன்று.

     அமுதுக்காக்கி - அமுது சமைத்தற்காக வேண்டிய பற்பல
வகைகளிலும் படைத்து என்று உரை கூறுவாருமுண்டு. தமது அமுதுக்கு
- சீவனத்துக்காக மட்கலங்களையும், அடியார்க்கு உதவ ஓடுகளையும் -
பலிப்பாத்திரம் முதலியவையும் - செய்து வந்தார் என்பதே சிறந்த
பொருளாம். தமது குலத்துக்குரிய அளவிலா மட்பாண்டங்களைச்
சீவனார்த்தமாக வனைந்து என்பது இராமநாதச் செட்டியார் உரைக்குறிப்பு.

     வளர் இளந் திங்கட் கண்ணி மன்றுளார் - வளர் திங்கள்
எனவும், இளந்திங்கள் எனவும் கூட்டுக. முன்னர்த் தேய்ந்து வந்தது
வளர்ச்சி பெறுவதாய் என்க. இளந்திங்கள் - பிறைச்சந்திரன். “மாதர்ப்
பிறைக்கண்ணி யானை“, “போழிளங் கண்ணியினானை“, “வளர்மதிக்
கண்ணியி னானை“ என்ற அப்பர் பெருமான் தேவாரங்கள் (திருவையாறு
- காந்தாரம்) காண்க. திங்களைத் தலையிற் சூட்டிய மாலைபோல
அணிந்தவன். உளமகிழ் சிறப்பின் - உள்ளம் மகிழத்தக்க சிறப்பினாலே.
மல்க
- நிறைய. மகிழ் சிறப்பின் உளம் மல்க என்று மாற்றிக்
கூட்டியுரைத்தலுமாம்.

     இளமை மீதூர - இளமை மீதூரப்பெற்றதனாலே. மீதூர -
மிகுதிப்பாட்டை அடைந்ததனாலே. இன்பத்துறை - இங்குச் சிற்றின்பப்
பகுதியாகிய காமச்செயல்களைக் குறித்து நின்றது.

     எளியரானார் - அது வலிமைபெறத் தாம் அதன் ஆட்சிக்குட்பட்டு
எளியராக ஆயினார். ஆயினவகை பின்பாட்டிற் குறித்தார்.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் நூல்களிற் றடுக்கப்பட்டதாயினும்
எளியராயினமையில் அதனை விலக்கலாகாதவராயினார்.

     இளமை மீதூர - என்பதற்குக் கழிந்த இளமை பிறர்போலக்
கழிந்தே போகாது மீளவும் பெறும்படியாக; மீது - மேலும்; ஊர - வர -
என்ற சரிதக்குறிப்புப் பொருளும் தொனித்தல் காண்க. என்றும் மன்றுளார்
உளமகிழ் சிறப்பின் மல்க அடியார்க்கு ஓடளித்து என்று கூட்டி
யுரைத்தலுமொன்று.

     அளவிலாப் - பொருளின் மரபின் வாழ்க்கை - என்பனவும்
பாடங்கள்.  3

363. அவர்தங்கண் மனைவி யாரு மருந்ததிக் கற்பின்
                                மிக்கார்
 
  புவனங்க ளுய்ய வையர் பொங்குநஞ் சுண்ண
                            யாஞ்செய்
தவநின்று தடுத்த தென்னத் தகைந்துதான் றரித்த
                              தென்று
சிவனெந்தை கண்டந் தன்னைத் “திருநீல கண்ட“
                             மென்பார்.
4