|
தாம் என்று மணக்குடவரும்,
இது குடிப்பிறப்பினை நிறுத்துதலுடையதெனப்
பரிமேலழகரும் சிறப்பித்துரைப்பர். தமது தன்மை குன்றுவன செய்யாமையும்,
இகழ்வார்மாட்டுச் செல்லாமையும், இளிவரவுபொறாமையுமென இது மூன்று
வகைப்படுமென்பர். மானமுன் பொறாது மானத்திற்குத்
தாழ்வு வந்தவழி
அதனைத் தாங்கலாற்றாது. இளிவரின் வாழாத மானம் என்ற குறளும்
இக்கருத்துப் பற்றியது. இளிவரின் வாழாத என்றதற்குத் தமக்கோ
ரிழிவுவந்துழிப் பொறுத்து உயிர் வாழாது என்ற பரிமேலழகர் உரையும்
காண்க. இங்கு நாயனாரின் மனைவியார் இளிவரவாகக் கொண்டது தாம்
தமது நாயகரின் பகுக்கப்படாத நண்பினுக்கு உரியராந் தன்மையிழந்தவராகக்
கருதியேயாம். உடனுறைவாகிய புணர்ச்சிக்கு இசையாமை ஒன்றை இங்கு
இளிவரின் வாழாத மானமாய் மனைவியார் கொண்டனர். அது ஊடலிற்
செலுத்த, அது ஆணையிற் செலுத்த, மேற்சரிதம் நிகழ்ந்தது என்க.
பொறாது வந்த
- இளிவரவு பொறுக்கலாற்றாமையால் வந்த.
ஊடல்
- பிணங்கி நிற்றல். இதனையே புலவி என்றும் சொல்வது
வழக்கு. ஊடல் புலந்த செயலின் மேலும், புலவி புலந்த சொல்லின்
மேலும் வழங்கும். இது இன்பத்திற் கின்றியமையாததென்பர். ஊடுதல்
காமத்திற் கின்பம், துனியும் புலவியு மில்லாயிற் காமங்
- கனியும்
கருக்காயுமற்று - குறள். .........நின்சேயிழையார், நலஞ்செய்த புல்லங்கண்
மாட்டேந் தொடல்விடு நற்கலையே என்பது திருக்கோவையார் (358).
ஊடலுவகை - புலவி - முதலிய அகப்பொருளிலக்கணங்களில்
இதன்
இயல்புகளையும், இது கற்பிலக்கணத்துடன் முரணாமையும் அறிந்து கொள்க.
ஆயின் இவ்வூடல் அதற்கின்பம் கூடி முயங்கப்
பெறின் என்ற
தன்மையினின்று மாறி, இங்குப் பின்னர்க் காம இன்பக் கூடுதலுக்குக்
காரணமாகா தொழிந்ததுடன் அதனை இப்பிறப்பின் ஆயுளளவு
மிழத்தற்கே ஏதுவாயிற்றே? எனின், அற்றன்று. ஏனையோரிடத்து நிகழும்
ஊடல் கூடல்கள் இளமை நின்ற போதே நிற்பனவாய், இப்பிறப்பின்
சிற்றின்பத்துக்கும், பின்னர், முறையே மூப்புச் சாக்காடுகளுக்கும்
காரணமாய் ஒழிவன; இவ்வூடலோ எனின், மரணம் பிறப்பென்றிவை
யிரண்டின் மயக்கறுத்தற்கும், மீளப்பெற்ற மாறா இளமைக்கும் அதனோடு
கூடியனுபவிக்கும் என்றும் மாறாத பேரின்பத்துக்கும், காரணமாயிற்று என
இதன் சிறப்பினை அறிந்துகொள்க.
ஏனைய
- மெய்யுறு புணர்ச்சி ஒன்றினை யொழிந்த மற்றைவை.
அவையாவன; நாயகனைப் பேணுதல், விருந்தோம்பல் முதலிய
மனைவாழ்க்கைக்குரிய பிற கடமைகள்.
உடனுறைவு மெய்யுறு புணர்ச்சி
- இணைவிழைச்சு என்பர்.
தேனலர் கமலப் போதில்
திருவினும் உருவம் மிக்கார் - இது
நாயனாரது மனைவியாரின் பருவமும் உருவமும் திகழ்ந்த அழகின்
உயர்வைக் குறித்தது. தேனலர் கமலப் போது
- வண்டுகளால்
அலர்த்தப்பெற்ற புதிதாய் அன்றலர்ந்த தாமரைப் பூ. தேன் பொருந்திப்
புதிதாய் அலர்ந்த என்றலுமாம். போதில் திரு
- இலக்குமி. இங்கு உருவ
மிகுதியே உவமானமாகக் கொண்டமையின் கமலப்போதிலிருக்கும் இருவரில்
திரு என்பது இலக்குமியைக் குறித்தது. திரு
- கல்வியுடைமை
பொருளுடைமை என்றிரண்டு செல்வமும் என்றபடி கல்விச் செல்வியையும்
குறிக்குமாயினும் இலக்குமியின் பொதுப் பெயராக வழங்குவதும் காண்க.
திருவினும்
- திருவைக் காட்டிலும். உருவம் - உருவத்தினால்
-
அழகினால். உருபு தொக்கது. இது இங்கு இவரது அழகின் மிகுதி
குறித்தது. நாயகனுக்குரிய கடப்பாட்டின்படி இவ்வழகிய நாயகியாரைப்
புலவி தீர்த்துக்கூடி யின்பந்துய்தது வாழும் இன்பத்தினையும் வெறுத்து
அடிப்படுத்தித், திருநீல கண்டம் என்ற ஆணையொன்றினையே
பாதுகாத்த நாயனாரது திருத்தொண்டி னுறைப்பையும் திண்மையொழுக்க
நடைசெலுத்திய வலிமையையும் காட்டியபடியாம். இவ்வாறன்றி இத்தகை
அழகு வாய்ந்த அம்மையாரிருப்ப நாயனார் பரத்தையரை
|