பக்கம் எண் :


450 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

கோவையாரில் உலகத்துள்ளா ரெல்லாருக்குந் தந்தை; எவ்வுயிர்க்கும்
எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன்“ என்று பேராசிரியர்
உரைத்தமை காண்க.

     திருநீலகண்டம் - தேவர்கள் சாவா மருந்தாகிய அமுதம்பெற
வேண்டித் திருப்பாற் கடலைக் கடைந்தனர். அங்ஙனம் கடைவதற்கு
மேருமலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும்
கொண்டனர். கடையவே வாசுகி வருத்தமிக்கு நஞ்சுமிழ்ந்தது. அது
தேவர்களை வருத்திற்று. முன்னர் வெள்ளை நிறமுடைய திருமால்
மேனிகறுகினர். பொன்னிறத்தவரான பிரமர் புகை நிறமாயினர். தேவர்கள்
இறைவனைத் துதித்து ஓலமிட அவர் அந்த நஞ்சினை உண்டு
கழுத்தளவில் நிறுத்தித் தேவரைக் காத்தனர். அந்த நஞ்சு இருத்தலின்
இறைவனது கண்டம் நீலகண்ட மாயிற்று என்பது வரலாறு. இச்சரிதம்
மாபுராணங்கள் எல்லாவற்றிலும் பேசப் பெற்றது.

     “அடியாரா மிமையவர்தங் கூட்ட முய்ய அலைகடல்வாய்
நஞ்சுண்ட வமுதே“ - திருஞா - புரா - 476 முதலிய பல
திருவாக்குக்களும் காண்க.

     கற்பின் மிக்கார் - கற்பு - கணவனார் வழி நிற்கும்
பெண்ணியல்பு. “கற்பெனப்படுவது சொற்றிறம் பாமை“ என்பது பழமொழி.
மேல்வரும் இரண்டு பாட்டுக்களிற் காணும் மனைவியாரது செயல்
கற்பிலக்கணத்திற்கு மாறுபட்டதன்று என்பது குறிப்பு.

     அருந்ததி - வசிட்டரது மனைவி. கற்பினிற் சிறந்தவள். வரம்
பெற்று அப்பெயர் பூண்ட ஒரு விண்மீனாகி நிற்கின்றாள் எனவும்,
கற்பினுக் குதாரணமாகக் கொள்ளப் பெறுபவள் எனவும் புராணங்கள்
கூறும். கல்யாணச் சடங்குகளில் அருந்ததி காணும் வழக்கம் காண்க. 4

364. ஆனதங் கேள்வ ராங்கோர் பரத்தைபா லணைந்து
                                   நண்ண
 
  மானமுன் பொறாது வந்த வூடலான் மனையின்
                                வாழ்க்கை
யேனைய வெல்லாஞ் செய்தே யுடனுறை விசையா
                                   ரானார்
தேனலர் கமலப் போதிற் றிருவினு முருவ மிக்கார்.
5

     (இ-ள்.) தேன்அலர்....மிக்கார் - தேன் பொருந்திய
செந்தாமரையின் விளங்கும் இலக்குமியைவிட அழகிற் சிறந்த
மனைவியார்; ஆன.....நண்ண - மேலே குறித்த இயல்புடையராயின்
தமது கணவனார் ஒரு நாள் ஒரு பரத்தையிடம் அணைந்து, மனையில்
வந்தாராக; மானம்....ஊடலால் - அதனால் எழுந்த மானத்தினாலே
வந்த மன வருத்தத்தை ஆற்றமாட்டாதவராகி மேற்கொண்ட ஊடலினால்;
மனையின்......ஆனார் - மனை வாழ்க்கையிலே செய்யவேண்டுவனவாகிய
எல்லாக் கடமைகளையும் விதிப்படி செய்து முடித்தும் கணவனாருடன்
மெய்யுறுபுணர்ச்சி ஒன்றினை மட்டும் இசையாதவராயினார்.

     (வி-ரை.) ஆன - ஆயின. மேற்சொன்ன தன்மைகளை
யுடையவரான என வருவித்துரைக்க. உயிர் இறைவனைச் சார்தற்காகிய
தன்மையெல்லாமுடையாரான என்று பொதுப்பட வுரைத்தலு மொன்று.

     கேள்வர் - கணவர் கேண்மைக்கு உரியவர். அவரது
பகுக்கப்படாத நண்பு தமக்கே உரியவர். அதனைப் பகிர்ந்து
வேறொருத்திக்குக் கொடுத்தனர் என மானம் விளைந்ததாதலின்
அதுகுறிக்கக் கேள்வர் என்ற சொல்லாற் கூறினார்.

     பரத்தை - விலைமாது. சேரிப்பரத்தை என்பது பழந் தமிழ்நூல்
வழக்கு. ஆங்கு - அந்நாளில் ஒருநாள் - காலத்தைக் குறித்தது.
இடங்குறித்ததாகக் கொண்டு அத்தெருவில் உள்ள என்றுரை
கூறுவாருமுண்டு. அவமதி கொண்டலையும் இந் நாளிற் போலன்றி,
முன்னாளில், யாண்டும் யாரும் இருத்தற்குரியரல்லர் எனக் கொண்டு
ஒழுகி வந்தனர்; பரத்தையர் தெரு, புறநகரில் ஒரு புறமாக அமைவதாம்;
ஏனைக் குடிமக்கள் வாழும் தெருவில் அவர் வாழ்தற்கியையுமில்லை;
ஆதலின் அது பொருந்தாதென்க.

     மானமுன் பொறாது - மானம் - எக்காலத்தினும் தமது நிலையிற்
றிரியாமையும், தாழ்வு வந்தவழி வாழாமையும் ஆம். இது குடிப்பிறந்தார்க்கு
இன்றியமையாத