பக்கம் எண் :


486 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     பொழியும் தெய்வப்பூவின் மாமழை - பெய்த கற்பகப் பூமாரி.
திருவருள் வெளிப்பாடு, பெரியார் அவதாரம் முதலிய நன்னிகழ்ச்சிகளைத்
தேவர் முதலிய ஆத்தர்கள் கண்டு பாராட்டிக் காட்டும் நிகழ்ச்சிகளில்
இதுவுமொன்று. “வானவர் வளர்பூமாரி பொழிந்தனர்“ - கண். புரா - 179
முதலியன காண்க. பூவின் - பூப்பெய்தலாகிய இனிய என்றலுமாம். மீள
மூழ்குவார்போன்று யோகியார் கேட்ட வுண்மைக்கிருமுறை
அடையாளமாதல் போல என்ற குறிப்புமாம். 39

     399. (வி-ரை.) அந்நிலை காணும் அதிசயம் கண்டார் - பாரோர்
கேட்பப்பண்டுதஞ்செய்கை சொல்லி மூழ்கினார் நாயனார். அவ்வாறு கேட்ட
உலகர் எல்லாம் கேட்டதுடனில்லாமல் இவ்வாறு இருவரையும் காணும்
அதிசயத்தையும் கண்டார். தொண்டரை விளக்கங்காண உலகர்க்கு
நெறிகாட்ட வந்த யோகியார் காட்டிய அந்நிலையிலே அவரைக் காணும்
எனவும் கூட்டி விரித்துக்கொள்க. “அதிசயங் கண்டாமே“ என
அதிசயப்பத்தில் மாணிக்கவாசகப் பெருமான் அருளியதும் இங்கு
வைத்துக் காண, அதிசயங் கண்டார் என்றார்.

     முன்னிலை நின்ற வேத முதல்வர் - முன்னிலை நின்ற -
முன்னிலையாக நின்ற - முன்னிலையாக வந்தவருக்குள்ளே மறைந்து
நின்று என்றலுமாம். வேத முதல்வர் - வேதம் நாதத்தின் காரியமாகிய
வாக்கு ரூபமாயுள்ளது. வேதத்துக்குக் கருத்தா, வேதத்தாற் றுணியப்படும்
கருத்தா என இருதிறமும் விரித்துக்கொள்க. “சாத்திரயோனித்துவாத்“
என்ற வியாச சூத்திரப்பொருளும் காண்க. ஆதலின் முதல்வர் என்றார்.

     கண்டாரெல்லாம்........கண்டாரில்லை - முன்னிலையாக நின்ற
யோகியாரைக் கண்டார் எல்லாரும் முதல்வரைக் கண்டாரில்லை. எனவே,
சிலர் கண்டார் என்பதாம். அவராவார் - நாயனாரும் மனைவியாருமாம்;
இவர்களே அவரைக்காணத்தக்க பக்குவான்மாக்களாம். அன்றியும்
இவர்களை உலகுக்கு விளக்கங் காட்டி அருளவே இறைவன்
எழுந்தருளினார். ஆதலின் இவ்விருவருமே கண்டார் - பிறர்
கண்டாரில்லை. இவர் கண்டார் எனப் பின்னர் விரித்துக்
கூறுதலும் காண்க.

     துன்னிய விசும்பினூடு - நான்கு பூதங்களிலும் வியாபகமுடைய
ஆகாயத்திலே - கலந்த சிதாகாயத்திலே. (இது ஞானிகளாகிய
பக்குவிகளுக்கு மட்டும் தரிசனமாவதாம்) துணை - அருட்சத்தியாகிய
உமையம்மையாருடன். விடை - அற உருவமானது. “ஏலவார் குழலா
டன்னோ டிடபவா கனனாய்த் தோன்றி“ - இளையான்குடியார் புரா - 25,
“தன்றுணை யுடனே வானிற் றலைவனை விடைமேற் கண்டார்“ -
இயற்பகையார் புரா - 31 முதலிய பலவிடத்தும் இவ்வாறே காண்க.
இவையே அருட்சொரூபமாகையால், அடியார்பால் அருள் வெளிப்பாடு
நிகழும் போதெல்லாம் இவ்வாறே இறைவன் எழுந்தருளுவதியல்பு.

     இந்நிலை யிருந்த வண்ணம் என்னென மருண்டு நின்றார் -
முன்னால் நின்ற வேதியர் காணாது போயினர்; முன் இருந்த மூப்புப்
போயிற்று; முன்னர்க் கழிந்து மறைந்து போயின இளமை காணப்பெற்று
வந்திருந்தது; என இந்நிலைமையாயிருந்த தன்மை. என் என - விளைந்த
வண்ணம் எவ்வண்ணமென்று. மருண்டு - அறிந்தும் அறியாதும்
நிற்கின்றதொரு மயக்க நிலையினையுடையராய். நின்றார் - தெளிய
இயலாது மேற்செயலின்றி நின்றவராகிய நாயனார்.
வினையாலணையும் பெயர்.

     முன்னிலை நின்ற முதல்வர் - என எப்பொருட்கும் சர்வசாட்சியாய்
எல்லாப் பொருளுக்குள்ளும் நிறைந்து நின்றவன் என்ற கருத்துமாம்.

     நின்றார் - என்றது செய்வதறியாது மருண்டு நின்ற நாயனார்
நிலைகுறித்தது. முன்னரும் பலமுறை நின்ற நிலைவேறு; இங்கு நின்ற
நிலைவேறு. முன் நின்றவை இவன் இறைவன், இது அவன் செயல்
என்று அறியாது நின்ற நிலை “நின்றபின்“ (373) “நின்ற
தொண்டரும்“ (377); “உரைப்ப தொன்றின்றி நின்றார்“ (380);