|
“இறைஞ்சி
நின்றார்“ (382) என்ற இடங்கள் காண்க. இங்கு நின்றது
அறிவு மறியாமையும் கலந்த நிலை. அதனால் மருண்டு என்றார்.
“முன்னின்ற தெருட்சி மருட்சியினான் முதல்வன் கருணைக் கடன்
மூழ்கினரே“ (திருநாவு - புரா - 71) என்றது காண்க. வரும் பாட்டில்
“போற்றி நின்றார்“ (400) என்றது அறிந்த நிலை குறித்தது. இவ்வாறு
இம்மூன்று நிலைகளினியல்பும் இவற்றில் ஆன்ம போதம் நிகழுநிலையும்
இறைவனருட்சத்தி நிறைந்து ஆன்ம சிற்சத்தியைக் கொண்டுசெலுத்தியியக்கு
நிலையும் அறிந்து கொள்க. குரு இயல்பும் அருளியல்பும் ஆன்ம இயல்பும்
இச்சரிதத்தால் விளக்கம்பெற்று உயிர்கள் கடைப்பிடித் தொழுகும் நெறி
காட்டப் பெறுதலால் “மின்னொளிர் சடையோன்றானும் தொண்டரை
விளக்கங் காண, நன்னெறி யிதுவாமென்று ஞாலத்தோர் விரும்பி
யுய்யும்அந்நெறி காட்டுமாற்றால்“ குருவாகி வந்தார் என்று முன்னர்க்
குறித்தது (369) காண்க.
அதிசயங் கண்டார் மருண்டு நின்றார் எனக் கூட்டி
யுரைப்பாரு
முளர். 40
| 400.
|
கண்டனர்,
கைக ளாரத் தொழுதனர்; கலந்த காத
|
|
| |
லண்டரு
மேத்தி னார்க; ளன்பர்தம் பெருமை
நோக்கி
விண்டரும் பொலிவு காட்டி விடையின்மேல்
வருவார்
தம்மைத்
தொண்டரும் மனைவி யாருந் தொழுதுடன்
போற்றி
நின்றார்.
|
41 |
(இ-ள்.)
வெளிப்படை. கண்ணாரக்கண்டார்கள்; கைகள் நிறைந்து
திருப்தியடையக் கும்பிட்டார்கள்; அன்பருடைய பெருமையைப் பார்த்து
விருப்ப மிகுந்த தேவர்களும் துதித்தார்கள்; ஆகாயத்திலே பொருந்திய
அழகிய திருக்கோலத்தினை வெளிப்படக் காட்டி இடபவாகனத்தின் மேல்
எழுந்தருளிவந்த இறைவரை நாயனாரும் மனைவியாரும் தொழுதும் உடன்
துதித்துக் கொண்டும் நின்றார்கள்.
(வி-ரை.)
கண்டனர் - விடைமேற்
கண்டார் கண்ணாரக் கண்டனர்.
“கண்ணாரக் கண்டுமென் கையாரக்கூப்பியும், எண்ணாரவெண்ணத்தா
லெண்ணியும்“ - என்ற அம்மையார் அற்புதத் திருவந்தாதி (85) காண்க.
முன்னர் “விடைமேற் கண்டார்“ என்றதும் நிருவிகற்பமாகிய பொதுக்காட்சி;
யோகியாரைக் காணாதும், தந்நிலைமை மாறியும் மருண்டு நின்றவர்கள்
மேலே ஒரு காட்சி கண்டனர். கண்டதும் இவையெல்லாம் இறைவனது
திருவருட்செயலேயென்று தெளிந்தவர்களாய்க் கண்ணாரகண்டுகொண்டு
நின்றார்கள். முன் கண்டது வாயிற் காட்சி; இது அதனைச் சிந்தித்துத
்தெளிந்த அனுபவக் காட்சி.
கைகளாரத் தொழுதனர்
- மனநிறைவுபெறக் கைகளாற் கும்பிட்டு
நின்றனர்.
கலந்த காதல் அண்டரும்
- போக பதங்களை விரும்பி
யாகாதிகளைச்செய்து அவற்றிலே முழுகி இன்பத் துன்பங்களை
அனுபவித்து நின்ற தேவர்களும், தமது நிலைகளினெல்லாம் பெரிதாகிய
இந்நிலையினைக் கண்டு இதிலே ஆசை கெண்டவர்களாகி அன்பர்தம்
பெருமை நோக்கிக் கலந்த காதலால் ஏத்தினார்கள் என்று கூட்டியுரைக்க.
காதல் கலந்த அண்டரும் நோக்கி ஏத்தினார்கள் என்றுரைத்தலுமாம்.
காதல் கலந்த அன்பர் பெருமை என்று கூட்டி யுரைப்பாருமுண்டு.
அன்பர்தம் பெருமை
நோக்கி - நாயனாரது பெருமைகண்டு.
திரு ஆணைகாத்த உறைப்பினாலே பிறரெவரும் கடத்தற்கரிய
காமக்கடலைக் கடந்து தாம்கொண்ட சபதத்தைக் கடைபோகக் காத்தும்
இறைவனை வெளிப்படக் கண்டும் மீளஇளமை பெற்றுத் திருவருட்
பெருஞ் செல்வத்து மூழ்கிய பெருமையைப் பார்த்து. அன்பின்
பெருமையே எப்பொருட்கு மேலாய் விளங்குகின்றது கண்டு.
விண்தரும் பொலிவு
காட்டி - விண் - ஞானாகாயம். தரும் -
பக்குவமுடைய ஞானநாட்டம் பெற்றவர்களுக்குத் தருகின்ற. பொலிவு -
பொலிந்து வெளிப்பட்ட திருக்கோலம். தரும்
- கருணை தருகின்ற
என்றுரைப்பாருமுண்டு
|