பக்கம் எண் :


488 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

     தொழுதுடன் போற்றி நின்றார் - கண்ணாரக் கண்டும் கைகளாரத்
தொழுதும், நின்றதுடனே, மனதாரத் துதித்துக்கொண்டும் நின்றார்கள்.
போற்றுதல் - இறைவன் தம்பாற் செய்த பேரருளின்றிறத்தினை வியந்து
பாராட்டுதல். “எத்தனையுமரியநீ யெளியையானாய்;......இத்தனையு
மெம்பரமோ? ஐய! ஐயோ! எம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே!“
(திருத்தாண்டகம்) என்றெல்லாம் அவரது அளவு கடந்த அருள்
வெள்ளத்தினை எண்ணி யெண்ணித் துதித்தல்.

     மேலே உரைத்தவாறன்றி இப்பாட்டிலே கண்டனர் -
தொழுதனர் என்றவற்றிற்கு அதிசயங்கண்டாராய் முதல்வரைக் காணாது
நின்ற பிற உலகர் என்று பொருள் கூறுவாரும் உண்டு. நாயனாரும்
மனைவியாரும் மட்டுமே திருவருட்பெருக்குக் கிலக்காகி அதனைக்
கண்களால் முகந்துகொண்டு போற்றியவராவர். இறைவனது
அருட்காட்சியின் வெளிப்பாடு பக்குவப்பட்ட ஆன்மாக்களே யன்றி
ஏனையோர் தேவரேயாயினும் காண்டலரிது என்பது உண்மை நூல்களின்
துணிபு. இங்கு இறைவன் இடபவாகனத்தின்மீது உமை யம்மையாரோடு
எழுந்தருளிய விண்டரும் பொலிவுபெற்ற காட்சி நாயனாருக்கும்
மனைவியாருக்குமே காட்டினார். அவர்களே கண்டுதொழுது போற்றி
நின்றார்கள் என்றுரைப்பதே பொருளாம். ஏனை உலகரும் தேவரும்
நிகழ்ந்த நிகழ்ச்சிகளாகிய யோகியார் சொற் செயல்களும், நாயனார்
சொற்செயல்களும், மூழ்கி ஏறி முதுமைபோ யிளமை பெற்றமையும்
முதலியவற்றையே கண்டார்கள். அருட்காட்சி நாயனாரு மனைவியாருமே
கண்டார் என்க. திருஞானசம்பந்த நாயனார் புராணத்திலே இறைவனை
ஆகாயத்தில் நேரேகண்டு தோடுடைய செவியன் முதலாகிய திரு
அடையாளங்களாலே இவன் என்னை யிதுசெய்த எம்மான் என்று
ஆளுடைய பிள்ளையார் பாடியருளினர். ஆனால் விண்ணிற்காட்டிய
இறைவன் கோலத்தை அவரது தந்தையாரும் கண்டிலர்; ஏனையோருங்
கண்டிலர்; ஏனை நிகழ்ச்சிகளை மட்டுமே கண்டனர்.

“தாணுவி னைத்தனி கண்டு தொடர்ந்தவர் தம்மைப்போற்
காணுதல் பெற்றில ரேனு நிகழ்ந்தன கண்டுள்ளார்
தோணி புரத்திறை தன்னரு ளாத றுணிந்தார்வம்
பேணு மனத்தொடு முன்புகு காதலர் பின்சென்றார்.
                            - திருஞான புரா - 86

     என்றது காண்க. விரிவு அங்குக் காண்க. அரிய தவஞ் செய்து
ஆளுடைய பிள்ளையாரைத் தமக்கு மகனாராகப் பெற்ற
சிவபாதவிருதயரும் காணக் கூடாத காட்சியைச் சாமானிய உலகர்களா
காணவல்லவர்? எனவே, இப்பாட்டிற்கு யாவரும் தேவரும் இறைவனது
அருட்கோல வெளிப்பாட்டைக் கண்டனர், தொழுதனர், என்றுரைக்கும்
உரைகள் ஒன்றும் பொருந்தாதன என்றொழிக. இறைவன் தொண்டரை
விளக்கங் காண ஞாலத்தார்க்கு நெறி காட்டவே யோகியராய் வந்தார்
என்றமையுங் காண்க.

     விண்டரும் - என்பதனை விண்டு அரும் எனப்
பிரித்துரைப்பாருமுளர்.  41

401. மன்றுளே திருக்கூத் தாடி யடியவர் மனைக
                                 டோறுஞ்
 
  சென்றவர் நிலைமை காட்டுந் தேவர்க டேவர்
                                   தாமும்
“வென்றவைம் புலனான் மிக்கீர்! விருப்புட
                            னிருக்க நம்பா
லென்றுமிவ் விளமை நீங்கா“ தென்றெழுந்
                              தருளினாரே.
42

     (இ-ள்.) வெளிப்படை. திருவம்பலத்திலே திருக்கூத்து ஆடி,
அடியார்களது மனைகள் தோறும் போய் அவர்களது உண்மை நிலையினை
உலகறியக் காட்டுகின்ற தேவ தேவராகிய சிவபெருமானும்“, (நாயனாரையும்
மனைவியாரையும் நோக்கி) “வென்று அடிப்படுத்தப்பட்ட
ஐம்புலன்களினாலே மிக்கு விளங்குபவர்களே! நீங்கள் இப்போது
எமதருளால் மீளப் பெற்றஇந்த இளமை என்றும் நீங்காத