பக்கம் எண் :


திருநீலகண்ட நாயனார் புராணம்489

Periya Puranam

நிலையுடன் எம்மிடத்திலே இருப்பீர்களாக!“ என்று அருளிச்செய்து
தமது நிறைவு நிலையினுள்ளே எழுந்தருளிப்போயினார்.

     (வி-ரை.) மன்றுளே திருக்கூத்து ஆடி - மன்றினியல்பு,
திருக்கூத்தினியல்பு, ஆடும் இயல்பு முதலியன முன்னர் 350, 351
திருப்பாட்டுக்களிலும் பிற இடங்களிலும் உரைக்கப் பெற்றன.

     அடியவர் மனைகள் தோறும் சென்று - “அமர்நீதியார்
திருமடங்குறுக“ - அமர்நீதி - புரா - 9

“............திருமனையி லொருவழியே
தெள்ளுதிரை நீருலக முய்வதற்கு மற்றவர்த
முள்ளநிலைப் பொருளாய உம்பர்பிரான் றாமணை வார்.“
                     - மானக்கஞ்சாறர் - புரா - 21

“கண்டாரைச் சிறுத்தொண்டர் மனைவினவிக் கடிதணைந்து“
- சிறுத்தொண்டர் - புரா - 36

     முதலியவை காண்க. அடியவர்கள் இருக்குமிடந்தோறும் தாமே
சென்று வலிய அவர்களை ஆட்கொள்ளுந் திறத்தாலே உலகத்தையும்
அறிவுறுத்தி ஆட்கொள்வது எமது பெருமானது அருட்பெருக்கின் இயல்பு.
உயிர்களை வழிப்படுத்தி ஆட்படுநெறியிற் செலுத்தும். இதுவே அவரது
ஐந்தொழிற் றிருக்கூத்தினியலும் பொருளுமாம். ஆதலின்
“திருக்கூத்தாடிச் - சென்று - காட்டும்“ என்று
தொடர்புபடுத்திக் கூறினார்.

“இங்குநம் மில்லங்க டோறு மெழுந்தளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை“
- திருவெம்பாவை- 13

“பந்தணை விரலியு நீயுநின் னடியார்
பழங்குடி றொறுமெழுந் தருளிய பரனே“
- திருப்பள்ளியெழுச்சி - 8

     என்ற திருவாசகங்களின் சொல்லும், பொருளும், கருத்தும் இங்கு
வைத்து நினைவு கூர்தற்பாலன.

     அவர் நிலைமை காட்டும - அடியவர் நிலையை உலகுக்குக்
காட்டுவித்து உலகரை நன்னெறியிற் செலுத்தும். “உய்யும் அந்நெறி
காட்டுமாற்றால்“ என்ற விடத்துக் காண்க.

     தேவர்கள் தேவர் - தேவர்களிலெவரும் அடியவர் முன் வர
லாற்றாதவர்கள்; தொண்டர்களின் பின்னே நின்று அவர்களை
ஆசிரயித்துப் பயன்பெற வேண்டியவர்கள். இது முன்னர் விளக்கப்பெற்றது.
ஆதலின் தேவர்கடேவரே முன் வந்து அருள் புரியவல்லார் என்பது.

     வென்ற ஐம்புலனால் மிக்கீர் - ஐம்புலன்களும்
வெல்லப்பட்டமையால் இவர்கள் சொல்வழி அவை ஏவல் கேட்டு
அமைந்து நின்றன. ஏனையோர்களை, அவை, தம்மைப் பின்பற்றி
நடக்குமாறு கீழ்ப்படுத்தித் தாம் மேலோங்கி நிற்பன. ஆதலின்
ஏனையோர்களது நிலைகள் கீழ்ப்பட்டனவே. இவர்களோ ஐம்புலனை
வென்றதனால் நிலைமையில் மேலோங்கியவர்கள். “தம்மை யைந்து
புலனும் பின்செல்லுந் தகையார்“ - சண்டீசர் புரா - 2 என்றது காண்க.
வென்ற - வெல்லப்பட்ட. மிக்கீர் - மேலெழுந்தவர்.

     “ஐந்தவித்தான்“ என்ற குறளில் புலன்களிற் செல்கின்ற
அவாவைந்தனையும் அடக்கினான் எனப் பரிமேலழகரும்,
நுகர்ச்சியாகிய ஐந்தினையும் துறந்தான் என மணக்குடவரும் உரை
விரித்தது காண்க. எனவே புலன்களைந்தும் நின்றன; ஆயின் அவற்றிற்
செல்லும் அவாவும், அது காரணமாக வரும் நுகர்ச்சியும் இல்லையாயின
என்க. இங்கு நாயனாரிடத்தும் மனைவியாரிடத்தும் ஐம்புலனும் இருந்தன.
மெய்யுறு புணர்ச்சி ஒன்றொழிய இல்வாழ்வாரும் அடியாரும் செய்யும்
எல்லாக் கடமைகளையும் நிறைவேற்றினர். புலன்கள் தம் செயலற்று
இவர்கள் வசமாய்த்