பக்கம் எண் :


490 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

தாழ்ந்து நின்றன என்பதாம். ஐம்புலன்களையும் ஒடுக்கி
அசைவற்றிருக்கும் யோகநிலை வேறு; அவற்றை அடிப்படுத்தித் தம்வழி
நிறுத்தி அவற்றின்கட் செல்லுமவாவை இறை வழிபாட்டிற்செலுத்தி நிற்றல்
வேறு.

“வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறும்
சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி“

     என்ற திருவிளையாடற்புராணமும் காண்க.

     இருக்க - வியங்கோள் - இருப்பீர்களாக. இவ்விளமை நீங்காது
விருப்புடன் நம்பால் என்றுமிருக்க என்றியைத்துக்கொள்க. என்றும்
மாறுபாடின்றி ஒரு தன்மையனாகவுள்ள இறைவன்பா லிருப்பவர்களே
என்றும் மாறுபடாத இளமையோடிருக்க வல்லவர்கள். காலகாலனது
சார்பினாலே அவர்கள் காலத்தை - மரணத்தை - வென்றவர்களாகலான்
என்பது. அன்றியும் ஏனையோர் யாவரையும் சாகச்செய்யும் விடத்தை
உண்டு சாவாமலும் மூவாமலும் இருக்கும் சிவபெருமானொருவனே மூவாத
இளமை தர வல்லவன் என்றலுமாம். “சாவாமூவாச் சிங்கமே“ -
திருப்புகலூர்த் திருத்தாண்டகம் - 2.

     விஷ்ணு, பிரமன், இந்திரன், சந்திரன் முதலிய தேவர்களும்
அவ்வவர் சரிதங்களால் அறியக் கிடக்கின்றபடி, ஐம்புலன் வெல்லமாட்டாது
ஒவ்வோர் குற்றங்களுக்காளாயினர்; இங்கு நமது நாயனாரும்
மனைவியாருமே புலன் வென்று மிக்கார்கள் என்பார், இவ்விடத்துத்
தேவர்கள் தேவன் என்ற பெயராற் கூறினார் என்ற குறிப்புமாம்.
இதுவறை “நின்றா“ ராகிய அவரை இருக்க என்றார் என்ற குறிப்புமாம்.  42

402. விறலுடைத் தொண்ட னாரும் வெண்ணகைச்
                        செவ்வாய் மென்றோ
 
  ளறலியற் கூந்த லாரா மனைவியும் மருளி னார்ந்த
திறலுடைச் செய்கை செய்து சிவலோக மதனை
                                 யெய்திப்
பெறலரு மிளமை பெற்றுப் பேரின்ப முற்றா
                                  ரன்றே.
43

     (இ-ள்.) வெளிப்படை. வலிமைபெற்ற தொண்டரும் மனைவியாரும்
அருளினால் நிறைந்த திறமையான அரிய செய்கை செய்து மேலே
கூறியபடி அதன் விளைவாகிய சிவலோகத்தை யடைந்து பிறர் எவராலும்
பெறுதற்கரிய இளமையைப் பெற்றார்களாய் அப்போதே பேரின்பத்தை
அடைந்து விளங்கினார்கள்.

     (வி-ரை.) விறலுடைத் தொண்டனார் - விறல் - வலிமை.
புலனை வென்றது விறல். “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“
என்றதும் காண்க. இஃது வேண்டாமை என்கின்ற திண்மையால் வரும்
என்றார் நாயனார். “விறலீனும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு“ - குறள்.

     வெண்ணகைச் செவ்வாய் மென்றோள் அறல் இயல் கூந்தலார்
ஆம் மனைவியும - இது மனைவியார் மீளப்பெற்ற இளமைக்
கோலத்தியல்பு கூறியதாம். வெள்ளிய நகையினை - பற்களை - யுடைய
சிவந்த வாயினையும், மெல்லிய தோள்களையும், கருமணல் ஒழுக்குப்
போன்ற கூந்தலையும் பெற்ற இளமை உடையவராய் ஆன மனைவியாரும்.
வெண்ணகை - வெள்ளிய பல்வரிசை. நகை - நகைப்பு. அதனைச்
செய்யும் பல்லுக்காயிற்று. அறல் இயல் கருமணலின் ஒழுக்குப் போன்ற
தன்மை. ஆம் - ஆயின.

     செய்து எய்தி - செய்தல் - காரணம்; எய்துதல் காரியம், விளைவு.
செய்ததனால் எய்தி யென்க.

     தொண்டரும் மனைவியும - செய்து - எய்திப் பெற்று -
அன்றே - பேரின்ப முற்றார் என முடிக்க.

     அருளின் ஆர்ந்த திறலுடைச் செய்கை - அருளிலே
நிறைவுபெற்ற செய்கை. திறலுடைச் செய்கை என்று கூட்டியுரைத்துக்
கொள்க. அருளினாலே நிறைவு பெற்றதாகிய திறல் என்றுரைப்பினுமாம்.
அருளின் ஆர்தலாவது - திருவருள் வசத்திற்கேயன்றி