பக்கம் எண் :


திருநீலகண்ட நாயனார் புராணம்491

Periya Puranam

வேறொன்றற்கும் இடந்தராமை திறல் உடைச் செய்கை -
பிறர் எவராலும் செய்யலாகாத அரிய செய்கை. செயற்கருமையே திறல்
எனப்பட்டது. சிவலோகமதனை எய்தி - மேற்பாட்டிலே “நம்பாலிருக்க“
என்று இறைவன் அருளியமையாலே அன்றே சிவலோகத்தை யடைந்தனர்.
நம்பால் என்றது சிவலோகம். ஈண்டுச் சிவலோகம் என்றது சுத்த மாயா
புவனத்தை; அதுவே மீண்டு வராத முத்தியுலகமாதலின் என்க. “நலமிகு
சிவலோகத்தில், ஊனமில் தொண்டர் கும்பிட் டுடனுறை பெருமை பெற்றார்“
என இவ்வாறே இயற்பகை நாயனார் புராணத்திற் (35) கூறியதுங் காண்க.

     பெறலரும் இளமை - பிறர் யாவராலும் பெறுதற்கரியதாய்
முதுமையின் பின் மீளப் பெற்றமையாலும், ஏனை இளமைகள்
போலல்லாமல் என்றும் நீங்காதிருக்கும் நிலைமையாலும் இதனைப்
பெறலரும் என்றார். அன்றியும் திருவாணை என்று நிகழ்ந்ததோ
அன்றைக்கிருந்த அந்த இளமையே மீளப் பெற்றமையும் குறிப்பாம்.

     பேரின்பம் - நமதுசாமானிய பசுகரணங்களால் அனுபவிக்கப்பெறும்
இன்பங்கள் யாவும் சிற்றின்பங்களாம். அவை சிறிதளவே நிற்பன; முடிவில்
துன்பத்துக் கேதுவாவன. ஆனால் தமது கரணங்கள் சிவனருட்
பெருக்கினாலே சிவகரணங்களாக மாறப்பெற்ற இவர்கள் அடைந்தது
காலம், இடம் முதலியன எந்த அளவைகளாலும் அளவு படாததாய்
உள்ளது; பேரானந்தம், பிரமானந்தம், சிவானந்தம் முதலிய பெயர்களால்
வேதங்களிற் பேசப்படும் பெருமையுடையது. அன்று - ஏ அசை என்றொ
துக்குவாரு முண்டு.

“பெற்றசிற் றின்பமே பேரின்ப மாமங்கே
முற்ற வரும்பரி சுந்தீபற, முளையாது மாயையென் றுந்தீபற“
- திருவுந்தியார் - 33

என்று சாத்திரங் கூறிய தொருநிலை. ஆயின் இங்கு நாயனார்
சிற்றின்பத்தைத் துறந்து திருநீலகண்டத் தியானத்திலே முனைந்தனுபவித்து
வாழ்ந்து முடிவில் பேரின்ப நிலையடைந்தனர். 43

403. அயலறி யாத வண்ண மண்ணலா ராணை யுய்த்த
 
  மயலில்சீர்த் தொண்ட னாரை யானறி வகையால்
                              வாழ்த்திப்,
புயல்வளர் மாட நீடும் பூம்புகார் வணிகர்
                              பொய்யில்
செயலியற் பகையார் செய்த திருத்தொண்டு செப்ப
                               லுற்றேன்.
44

     (இ-ள்.) வெளிப்படை. அயலார் ஒருவரும் அறியாத வகையாலே
இறைவனது திருநீலகண்டத் திருவாணையைக் கடவாது பாதுகாத்து
வாழ்ந்தவரும், உலக மயக்கத்துட் படாது நீங்கியவரும் ஆகிய சிறப்புடைய
திருநீலகண்ட நாயனாரை யான் அறிந்த அளவினாலே வாழ்த்தி, அவர்
புராணத்தை நிறைவு செய்துகொண்டு, அத்துணையாலே, மேகங்கள்
தவழ்ந்து தங்கும்படி உயர்ந்த மாடங்கள் நீடிய அழகிய புகார் நகரம்
என்னும் காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த வணிகராகிய பொய்ம்மை
என்பதில்லாத செயல் புரியும் இயற்பகைநாயனார் செய்த
திருத்தொண்டினைச் சொல்லத் தொடங்குகிறேன்.

     (வி-ரை.) இதனால் இதுவரைச் சொல்லிவந்த புராணத்தை
முடித்துக்காட்டி, இனிச் சொல்லப்புகும் புராணத்திற்குத்
தோற்றுவாய் செய்தார்.

     அயலறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த - இதுவே
இப்புராணத்தின் உள்ளுறையாகிய தத்துவமாம். ஆணை உய்த்தல் ஒன்றும்,
அதனை அயலறியாமல் வைத்தது ஒன்றும், ஆகிய இவ்விரண்டையும்
காட்டவே இறைவன் வந்தனர். ஆணையுய்த்தல - எதனை இழக்கவரினும்
ஆணையின் வரம்புகடவாமற் பாதுகாத்தல். உய்த்தல் - கொண்டு
செலுத்துதல். அறியாமை வாழ்ந்தார் (367) என