|
முன்னரும் இதனைக்
குறித்தமை காண்க. இப்புராணத்திற்கு முன்னர்த்
தோற்றுவாய் செய்தவிடத்து “நிகழ் திருநீலகண்டக்குயவனார்“, “நீடு
வாய்மை திகழுமன்புடைய“, “செய்தவம்“ (359) என்று தொடங்கிக்
காட்டியவை இவையே என்று தொகுத்துக் காட்டியவாறு காண்க.
திருநீலகண்டம் = அண்ணலாராணை; நீடு வாய்மை = உய்த்தல் ;
செய்தவம் = அயலறியாது வாழ்ந்தது என்றிவ்வாறு கண்டுகொள்க.
மயலில்
- ஏனையோர் யாவரையும் மயக்கி வீழ்த்தும் வலிய
உலகமயக்கமாகிய காமத்தினைத் தம்மிடம் இல்லாது செய்த. இல் -
இல்லையாகச் செய்த.
சீர்
- தமக்கே சிறப்பாயுரிய சிறப்பு.
யானறிவகையால் வாழ்த்தி
- செய்தவங் கூறலுற்றாம் (359)
என்றுதொடங்கிய யான் அதனை முற்றவுங் கூறினேனல்லேன் - யான்
என் அறிவின்அளவிலே போந்த வகையாலே வாழ்த்தி முடித்துக்
கொண்டேன். வாழ்த்தி - இச்சரிதப் பெருமை நிலவி வளர்வதாக என்று
துதித்து. இவ்வாறே முன்னரும் “போற்றி வாழ“ (359) என்றமை காண்க.
“அருந்தமிழா கரர்சரிதை யடியேனுக் கவர்பாதந்,
தரும்பரிசா
லறிந்தபடி துதிசெய்தேன்“ திருஞா - புரா - 1256 என்றது போல வரும்
புராணங்கள் தோறும் இவ்வாறே கண்டு கொள்க.
புயல் வளர் மாடம்
- மேகந் தவழும்படி உயர்ந்தோங்கிய மாடம்.
“தவளந்நெடு மாடம்... விண்டாங்குவ போலுமிகு வேணுபுரம்“ -
திருஞான - நட்டபாடை - (1) முதலியன காண்க. இது மாடங்களின்
உயர்வு குறித்தது.
நீடும்
- பெருமையின் அளவாலும் காலத்தாலும் நீண்டிருக்கும்
பூம்புகார்
- புகார் - காவிரிப்பூம்பட்டினத்தின் பெயர். பூ -
அழகு - செல்வம் முதலியன குறித்த அடைமொழி. பூம்புகலூர்
என்றதுபோல. “பூம்புகார்ச் சாய்க்காடே பதியாக வுடையானும்“ -
திருஞான - சீகாமாம் (2) முதலிய பலவும் காண்க. புகார் என்றதனை
ஆளுடைய பிள்ளையார்,
“மண்புகார்;
வான்புகுவர்; மனமிளையார்; பசியாலுங்
கண்புகார்; பிணியறியார்; கற்றாருங் கேட்டாரும்
விண்புகா ரெனவேண்டா; வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாங்க்காட்டெந் தலைவன்றாள் சார்ந்தாரே“ |
என்று
விரித்தருளி யிருப்பது காண்க.
பொய்யில் செயல்
- பொய்ம்மை யில்லாத உள்ளத்தாலே என்றும்
செய்கின்ற செயலையுடைய. இயற்பகையார் -
திருநீலகண்டர் எனப் பெயர்
போந்தது போலப் போந்த காரணப்பெயர் என்பர். இஃதவரியற் பெயராய்
நிகழ்ந்தது.
செய்த திருத்தொண்டு
- சரித வரலாறு.
மயலிலாத் தொண்டனாரை
- என்பதும் பாடம். 44
சுருக்கம்:-
சிதம்பரத்தலத்திலே குயவர் குலத்திலே அவதரித்தவர்
ஒரு பெரியார். இவர் நடராசப் பெருமானை நியதியாக வழிபடுதலைக்
கைக்கொண்டவர்; பொய்யை ஒழித்த அறவழியிலே வாழ்கின்றவர்;
சிவனடியார்களுக்கான எந்தப் பணிவிடையும் செய்யும் விருப்பிலே
நின்றவர்; சைவத்தின் உண்மைச் சார்பே மக்கள் அடையும் பொருளாவது
என்று சார்ந்து ஒழுகும் தன்மையுடையவர். வழிவழி வரும் தமது
குலத்தொழிலை விடாது செய்து வருவாராய், மட்கலங்களைச் செய்யும்
தொழிலைத் தமது சீவனத்துக்காகும் அளவில் ஆக்கிக் கொண்டு,
விரும்பிய சிவனடியார்களுக்கெல்லாம் பிச்சைப் பாத்திரமாகிய
திருவோடுகளைக் கொடுத்து வந்தார். இவ்வாறொழுகி வரும் நாளிலே
மிகுந்த இளமைப் பருவங் காரணமாகச் சிற்றின்பத் துறையிலே தம்மை
எளியராக ஆக்கிக்கொண்டொழுகுவாராயினர். அவர் மனைவியார்
கற்பிலும் அழகிலும் சிறந்தவர். இப்
|