|
ராதலின் அஃதுமியலாது;
ஆதலின் இதனை இன்னவாறெனத் துணிய
அறியோம் என்றார்.
அருட்சத்தியும் திரோதான சத்தியும் ஒருங்கே தொழிற்பட்டன
என்ற கருத்தால் இவ்வாறு கூறப்பெற்றது போலும்.
நாயனார் இயற்பகையாராயினமையால் தாமும் தமது இயலுக்கு
மாறாக இத்தன்மையில் வெளிப்பட்டு அருளினர் என இங்கு நினைவு
கூர்ந்தவாறாம்.
தம்மேலைச் சார்புணர்ந்தோ? சாரும்பிள்ளைமை
தானோ?
1313
-
திருஞான - புரா - 63
ஆய
பொழுது தம்பெருமா னருளா லேயோ? மேனியினில்
ஏயு மசைவி னயர்வாலோ? வறியோம் -
நமிநந்தி - 26 |
என்றிவைபோலப் பின்னர்க்
கூறுவனவற்றையும் இங்கு வைத்து
ஒப்புநோக்குக.
தூயநீறு
- சுத்தம தாவது நீறு என்றவாறு தான்
தூய்மையுடையதாகும். அதனோடு யாவற்றையும் தூய்மை செய்வதுமாம்.
பொன்மேனி - அழகிய மேனி. பொன் போன்ற
மேனி என்றலுமாம்.
பொன்னார் மேனியனே, பொன்வண்ண மெவ்வண்ண மவ்வண்ண
மேனி - என்பனவாதி திருவாக்குக்கள் காணக தூர்த்தவேடமுந்
தோன்ற - அதனோடு அதற்கு மாறாகத் தூயதல்லாத தூர்த்த வேடமும்
ஒருங்கே காண. உம்மை இழிவு சிறப்பு.
தூர்த்த வேடம்
- பரஸ்திரீ கமனம் செய்யும் காமந்தோன்றும்
அடையாளங்கள் விளங்கும் கோலம். அவை நகக்குறி
- பற்குறி -
மஞ்சட்பூச்சுக்குறி முதலியன. தூர்த்தன் -
காமவசப்பட்ட இயல்புடன்
இழிந்த செயல் செய்பவன். தூர்த்த வேடத்தின் இழிபினைப் போக்க
அதற்குப் பரிகாரமாக அந்த மேனியிலே நீறு அணிந்ததுபோல என்ற
குறிப்புமாம்.
வேதியராய்
- இவ்வேடங்கொண்டு இச்செயல் புரிவதும் இவர்க்கே
உரியது என்று காட்டுவார் வேதியரானார் போலும்.
மாய வண்ணமே கொண்டு
- பிறாறிய இயலாதபடித் தம்மை
மறைத்துக் கொண்ட இவ்வுருவந் தாங்கிக்கொண்டு அதனைக்
காட்டுதலேயன்றி. மாயம் - வஞ்சனை;
மறைவு. 1314
மறாத
வண்ணமும் - வேண்டும் யாவையும் இல்லையென்னாதே
முன் கொடுக்கும் இயல்பினையும். தமது மாயை வண்ணத்தைக்
காட்டுதலேயன்றி மறாத வண்ணத்தையும் - என - உம்மை இறந்து
தழுவிய எச்சவும்மை.
காட்டுவான்
- உலகத்தார்க்குக் காட்டி அடியார் பெருமையை
அறிவுறுத்தி உய்விக்கும்பொருட்டு. (369) உரை காண்க. (அவர் -
இயற்பகையார்). அருளால் - முடித்து - பெருமையே
- எனப் பேணி
வாழ்நாளில் - ஆடுவார் - விளங்கத் - தோன்ற
- வேதியராய்க் -
கொண்டு காட்டுவான் - வந்தார். (அவ்வாறு வந்தது) நாயகி அறியவோ
அறியாமலோ அறியோம் - என இவ்விரண்டு
பாட்டுக்களையும்
தொடர்ந்து கூட்டி முடிக்க.
ஆய நுண்பொருள்
- மாயைவண்ணமே - என்பனவும் பாடங்கள். 4
| 408.
|
வந்து
தண்புகார் வணிகர்தம் மறுகின்
|
|
| |
மருங்கி
யற்பகை யார்மனை புகுத
வெந்தை யெம்பிரா னடியவர ரணைந்தா
ரென்று நின்றதோரின்பவா தரவாற்
சிந்தை யன்பொடு சென்றெதிர் வணங்கிச்
சிறப்பின் மிக்கவர்ச் சனைகண்முன் செய்து
முந்தை யென்பெருந் தவத்தினா லென்கோ
முனிவரிங்கெழுந் தருளிய தென்றார்.
|
5 |
|