|
“அதனொ டியைந்த
வொருவினைக் கிளவி“ என்று வகுக்கும் வகையிலே
வைத்து இங்குப் பொருள் கொள்க. “செய்வோன் காரணஞ் செயத்தகு
கருவி யெய்திய தொழின்முத லியைபுடைத் ததன்பொருள்“ என்பர்
ஆசிரியர் அகத்தியனார். ஆசிரியனொடு மாணாக்கன் வந்தான் என்புழிப்
போலக் கொள்க. “கொடியொடு துவக்குண்டான் என்புழிப்போல
வினைமுதற்பொருளுங் கொள்ளுவர். எங்ஙனமாயினும் மனைவியாரிடத்துச்
சிறப்புக் காண்க. ஒடுவின் நீட்டமே ஒடு என்னும் உருபாம்.
மனைவியாரிடம் சார்த்திய சிறப்பாவது நாயனாரது அடிமைத் திறத்தின்
நிகழ்ச்சிக்கு உற்ற கருவியா யிருந்தமையானும், பத்திரகிரியாரும்
சேந்தனாரும் தம்மை வழிப்படுத்திய பட்டினத்தடிகளின் முன்னரே பேறு
பெற்றமை போல, நாயனார் பெறற்கு முன்னர்ப்பேறு பெற்றமையானும்
அமையும்.
போதுக -
அகர வீறு கெட்டது.
பரிவுநோக்கி -
என்பதும் பாடம். 33
437. (வி-ரை.)
திருவளர் சிறப்பு - நாயனாரின்மூலம்
தொண்டின்
உண்மை நிலையினை உலகுக்கு இறைவன் காட்டி யருனினானாதலால்
அருட்டிரு உலகிலே வளர்ச்சிபெற்றது என்க.
தேற்றம் மருவிய
- முன்னர்க் கலங்கிப் பின்னர் மனந்தெளிந்து
கற்பின் நிலை இது எனக் கடைப்பிடித்தவராதலின் (411, 412) தேற்றம்
மருவிய என்றார். தேற்றம் - தெளிந்த நிலை.
கற்புநிலையிற் றேறித்
தெளிந்தவர் என்றலுமாம். தோற்றம் - சிறப்பு
என்ற பொருளும் பெற
நின்றது. கற்பின் றேற்றமே நாயனார் பணித்த பணியிலே அம்மையா
ரிசைந்தொழுகியதற்கும், மேற்சரித நிகழ்ச்சிக்கும் காரணமாயிற்று, ஆதலின்
இங்கு அதனை எடுத்துக் காட்டி அதனால் அம்மையாரைச் சுட்டிக்
கூறினார்.
தக்க
- அவர் பக்குவத்துக்குத் தகுதியாகிய.
பெருகிய அருளின் நீடு
பேறு - அருளிலே திளைத்து நிலைத்து
வாழும்வீடுபேறு.
பொற்பொது
- எங்கும் நிறைவாகிய உண்மையும் அறிவும்
ஆனந்தமுமாகிய நிலை
புக்கர்
- வெளிப்பட்ட நிலையிலிருந்து வியாபக நிலையினுட்
புகுந்தனர்.
இமையோர் ஏத்த -
எப்போதும் துதித்துப் பழகி அருளியல்பினைச்
செம்மையாய் அறிந்தாராதலின் அவர் ஏத்த என்றார். “அமரரெல்லாம்
பொருளார் கவிசொல்ல“ - பொன்வண்ணத்தந்தாதி - 25.
தோற்ற மருவிய
- என்பதும் பாடம். 34
| 438.
|
வானவர்
பூவின் மாரி பொழியமா மறைக ளார்ப்ப
|
|
| |
ஞானமா
முனிவர் போற்ற நலமிகு சிவலோ
கத்தில்
ஊனமி றொண்டர் கும்பிட் டுடனுறை பெருமை
பெற்றார்
ஏனைய சுற்றத் தாரும் வானிடை யின்பம்
பெற்றார்.
|
35 |
(இ-ள்.)
வெளிப்படை. தேவர்கள் பூமழை பொழியவும், பெரிய
வேதங்கள் ஒலிக்கவும், ஞானமா முனிவர்கள் துதிக்கவும், நன்மை மிகுந்த
சிவலோகத்திலே ஊனமற்ற திருத்தொண்டராகிய இயற்பகை நாயனார்,
(முன்னே சேர்ந்த மனைவி யாரோடு) இறைவனுடன் நீங்காமல் இருக்கும்
பெருமை பெற்றனர். இவர்களுடன் பகைத்துப் போர் செய்து இறந்துபட்ட
மற்றச் சுற்றத்தார்களும் வீரசுவர்க்கத்தின் இன்பத்தைப் பெற்றார்கள்.
(வி-ரை.)
வின் மாரி - (398)
பார்க்க.
மறைகளார்ப்ப
- வானவர் ஒரோர் காலம் தாம்கற்ற மறை
விதிகளைமறந்தும், அரன் பெருமைகளை மறந்தும் அபசாரப்படுவர்.
மறைகள் ஈசனருளியல்பினை எஞ்
|