|
முண்டு.
எங்ஙனமாயினும் இங்கு ஏர்த்தொழில் புரியுங் குலமாகவே
இப்பெயராற் போந்த குலம் சுட்டப் பெற்றது. “ஏரின் மல்கு வளத்தினால்
வரும்“ என்று அடுத்த பாட்டிலே தொடர்ந்து கூறுவது காண்க.
இப்புராணத்துள்ளே மற்றும் பல நாயன்மார்களை வேளாண்
குலத்தவர்
எனக் குறித்த ஆசிரியர் இங்கு ஏர்த்தொழிலே செய்யும் இந்நாயனார் சூத்திர
நற்குலத்தவர் என்று குறித்தலின் வேற்றுமை ஒன்றும் காணப் பெறவில்லை.
வேளாளரை வாய்மையின் மேன்மைபற்றி அறிவிப்பது ஆசிரியர் மரபு.
உழுதுண்போர் - உழுவித்துண்போர் என்ற பாகுபாடு
கருதி இவ்வாறு
வேறு வேறாக குறிக்கப்பெற்றதோ என்று ஐயங்கொள்வாருமுண்டு.
“பின்னவர் சதுர்த்தர் பெருக்களார் வன்மையர் - மன்னுமுத் தொழிலர்
மண்மகள் புதல்வர் - உழவ ரேரினர் வாணர்
காராளர் - விளைஞர்
மேழியா வேளாள ரென்றிவை - தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர்
பெயரே“ - (பிங்கல கெண்டு - ஐந்தாவது ஆடவர்வகை - பெயர்ப்பிரிவு
- 55). இப்பெயர் பற்றி இந்நாளில் எழும் பல் வகைப் பூசல்களையும்
இப்புராணத்தின் எல்லைக்குட் கொண்டு புகுத்தி இடர்ப்படுதற்கு
யாதோரியைபு மின்றென்க.
குலஞ்செய் தவத்தினால்
- ஞாலம் விளக்கினார் - குலஞ்செய்த
தவப்பேறாக அதனில் வந்தவதரித்து இவ்வுலகை வாழ்வித்தவர் என்க. 408
உரை காண்க. குலம் தவம் செய்து அவரைத் தன்னிடத்துப்
பெற்றதென்பதாம்.
1இளையான்குடிப்பதி
- இளையான்குடியின் தலைவராவார்
என்றலுமாம். பதி - முதல்வர் - தலைவர்.
தவத்தினார்
- என்பதும் பாடம். 1
| 441.
|
ஏரின்
மல்கு வளத்தி னால்வரு மெல்லை
யில்லதோர்
செல்வமும்
|
|
| |
நீரின்
மல்கிய வேணி யாரடி யார்தி றத்து
நிறைந்ததோர்
சீரின் மல்கிய வன்பின் மேன்மை திருந்த
மன்னிய
சிந்தையும்
பாரின் மல்க விரும்பி மற்றவை பெற்ற நீடு பயன்
கொள்வார்,
|
2 |
1இளையான்குடி
- இது சோழநாட்டில் திருநள்ளாற்றுக்கு மேற்கே
2நாழிகையளவில் உள்ளது என்றும், பத்தகுடி என்ற இருப்புப்பாதை
நிலையத்திலிருந்து 3/4 நாழிகையில் மட்சாலையில் இதனை யடையலாம்
என்றும் சிலர் கூறுவர். இவ்வூரில் பழைய சிவாலயமு மொன்றுண்டு.
புராணத்து வரும் நாற்றங்கால் கோயிலுக்குத் தெற்கில் உள்ளது. இதனை
முளைவாரிக்குட்டை - முளைவாரி நாற்றங்கால் என வழங்குகின்றனர்.
சோழமண்டல சதகமும் இப்பதி சோழநாட்டிலுள்ளதாகப் பேசுகின்றது.
தொண்டைமண்டல சதகத்தார் இச்சரிதப் பெருமை
தொண்டைநாட்டிற்குரித்தாகப் பேசுகின்றார்.
மதுரையை யடுத்து இராமநாதபுரம் சில்லாவைச் சேர்ந்த
பரமகுடிக்கு வடகிழக்கில் 7 நாழிகை யளவில் இப்பெயரால் உள்ள ஊரே
இப்புராணத்திற் குறிக்கப்பெற்றதென்று மற்றும் சிலர் கருதுகின்றனர்.
இவ்வூரில் “முளைவாரி யழதளித்த நாற்றங்கால்“
என்ற பெயரால் ஒரு
சர்வ மானிய நிலம் வழங்கிவரப்பெறுகின்றது என்றும், இவ்வூரில் உள்ள
பழைய சிவாலயத்தில் முளை வாரிய முதளித்த விழா நடந்து
வந்ததென்றும், மாறன் என்ற பெயர் பாண்டியர்
மரபுக் குரியதென்றும்,
வைணவ ஆசாரியரான மாறனும் பாண்டியநாட்டவரே
என்றும் கூறுவர்.
ஆசிரியர் இப்பதிக்குரியது எந்த நாடு என்று கூறவில்லை.
இது
இன்னதெனத் துணியக்கூடவில்லை.
|