பக்கம் எண் :


548 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
442. ஆர மென்பு புனைந்த வையர்த மன்ப
                     ரென்பதொர் தன்மையா
 
  னேர வந்தவர் யாவ ராயினு நித்த மாகிய
                            பத்திமுன் கூர
வந்தெதிர் கொண்டு கைகள் குவித்து நின்று
                              செவிப்புலத்
தீர மென்மது ரப்ப தம்பரி வெய்த முன்னுரை
                               செய்தபின்,
3

443. 1கொண்டு வந்து மனைப்பு குந்து குலாவு பாதம்
                               விளக்கியே
 
  மண்டு காதலி னாத னத்திடை வைத்த ருச்சனை
                               செய்தபின்
உண்டி நாலு விதத்தி லாறு சுவைத்தி றத்தினி
                               லொப்பிலா
வண்டர் நாயகர் தொண்டரிச்சையி லமுது செய்ய
                              வளித்துளார்.
4

     441. (இ-ள்.) வெளிப்படை. ஏர்த்தொழிலால் நிறைந்து பெருகும்
உழவு வளங்களினாலே வரும் உணவும், அவை கொண்டு ஆக்கப் பெரும்
அளவில்லாத பிற செல்வமும், கங்கை தங்கிய சடையாரடியவர்கள்
திறத்திலே நிறைந்ததாகிய ஓரும் சிறப்பினின் மிக்க அன்பினது மேன்மை
திருந்தும்படி நிலைத்த மனமும் உலகிலே வளர்ந்து நிலவுமாறு விரும்பி,
அவைகளைத் தாம் பெற்றதனாலாகிய நீடிய பயனை அடைவாராய்,    2

     442. (இ-ள்.) வெளிப்படை. ஆரமும் எலும்பும் அணிந்த ஐயரது
அன்பர்கள் என்ற ஒரே தன்மையினை உட்கொண்டு, அதுவே காரணமாக
வைத்து, முன்னே வந்தவர்கள் யாவரேயாயினும் உறுதியாகி நிலைத்த பத்தி
கூர வந்து எதிர் கொண்டு அழைத்துக் கை குவித்து எதிரே வணக்கமாக
நின்று அவர்கள் கேட்குமாறு குளிர்ந்த அன்பான இனிய மொழிகளை
அவர்கள் அன்புகொள்ளுமாறு சொல்லி அதன் பின்,                3

     443. (இ-ள்.) வெளிப்படை. அவர்களைத் தமது மனைக்குள்ளே,
அழைத்துக் கொண்டு வந்துபுகுந்து, குலவுகின்ற அவர்களது திருவடிகளை
விளக்கி, மிகுந்த ஆசையினாலே ஆசனத்தில் எழுந்தருளுவித்து,
அருச்சித்து, அதன்பின் நான்கு விதத்தில் இயன்ற ஆறுசுவை
யுணவுகளையும், ஒப்பில்லாத சிவபெருமா னடியவர்களிச்சையில் அமுது
செய்தருளுமாறு கொடுத்துள்ளார்.                                4

     இம்மூன்று பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.

     441. (வி-ரை.) ரின் மல்குவளம் - ஏர்த்தொழிலால் உளவாய்
மிக்க விளைவு. ஏர் - ஆகுபெயராய் ஏர்த்தொழிலாகிய உழவைக்
குறித்தது. வளம - விளைவு.

     செல்வம - விளைவினாலே தரப்படும் பலவகை உணவுப்
பொருள்களும், விளைவுகொண்டு பெறும் பிற எல்லாவகைச்
செல்வங்களும் ஆம். உழவே ஏனை எல்லாச் செல்வங்களுக்கும்
காரணமாதல் குறிப்பு. ஏரின்றெனில் விளைவு - உணவு இல்லை;
அஃதின்றேல் உயிரில்லை என்பர்; ஆதலின் எல்லையில்லதோர்
என்றார். எல்லாவகையு மடங்க மல்குவளம் என்றார்.

     ஓர் - ஒப்பற்ற. “உழுவா ருலகத்தார்க் காணி யஃதாற்றா,
தெழுவாரையெல்லாம் பொறுத்து“, “சுழன்று மேர்ப்பின்ன துலகம் அதனா,
லுழந்து முழவே தலை“, “பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பார்,
அலகுடை நீழலவர்“ என்பன வாதி உண்மைக் கூற்றுக்களைக் காண்க.
ஏரின் வளத்தாலே உலகம் இயல்கின்றது. பொன் முதலிய வேறு
எவ்வகையிற் சிறக்கினும் உழவில்லையேல் உலகம் உணவின்றி யிறக்கும்.
இவ்வுண்மையை இந்நாள் உலகம் மறந்து அலைந்து பேய்போற் பிற
பலவற்றின் பின்னே திரிகின்றது; ஏருக்குத் தீமையும் புரிகின்றது; இதனால்
ஏர்வளம் சுருங்கவும், அது பிற வளங்களைத் தரமாட்டாது வாடவும்
வைக்கும் இந்நாள் உலக நிலை பெரிதும் வருந்தத்தக்கது. உலகம்
ஏர்க்கண்ணே திரும்பித் திருந்தி யுய்வதாக.

     நீரின்மல்கிய வேணியர் - நீர் - கங்கை. மல்கிய நீரின் வேணி
என மாற்றிக் கொள்க. நீரின்மல்கிய - உலகத்திற்காதரவாகிய முற்கூறிய
ஏரின் வளத்திற்