|
அளிந்துளார்
- அன்புடன் கொடுத்து உளராயினார் என்றது குறிப்பு.
அளித்து - (404) பார்க்க.
இப்பாட்டால் அடியார்களை உபசரித்து மாகேசுவர பூசை
செய்யும்
முறை கூறப்பெற்றது.
ஈரமென் மதுரப்பதம்
பரிவெய்த முன் உரைசெய்த பின்
செய்யவேண்டுவன இவை என்க.
இன்றைக்கும் மாகேசுவர பூசைகளிலே இத்திருப்பாட்டினையே
பெரும்பாலும் ஓதித் துதித்துப் பூசிக்கும் வழக்கமும் காண்க. இவ்வாறு
பூசிக்கப்பெற்ற அடியார்களான மாகேசுவரர்கள் செய்யும் ஆசீர்வாதமும்
அதன் பயனும் வரும் பாட்டாற் கூறினார். மல்கி எழுகின்ற சீரினைச்
செய்யும் இப்பூசைக்குரிய யாப்பாக ஆசிரியர் இப்பகுதியை எழுசீர்
விருத்தத்தாற் பாடியருளிய அழகும் காண்க.
திறத்தன -
என்பதும் பாடம். 4
| 444.
|
ஆளு நாயக
ரன்ப ரானவ ரளவி லாருள மகிழவே
|
|
| |
நாளு நாளு
நிறைந்து வந்து நுகர்ந்த தன்மையி
னன்மையா
னீளு மாநிதி யின்ப ரப்பு நெருங்கு செல்வ
நிலாவியெண்
டோளி னாரள கைக்கி ருத்திய தோழ னாரென
வாழுநாள்,
|
5 |
| 445.
|
செல்வ
மேவிய நாளி லிச்செயல் செய்வ தன்றியு
மெய்யினால்
|
|
| |
அல்ல
னல்குர வான போதிலும் வல்ல ரென்றறி
விக்கவே
மல்ல னீடிய செல்வ மெல்ல மறைந்து நாடொறும்
மாறிவந்
தொல்லை யில்வறு மைப்ப தம்புக வுன்னி
னார்தில்லை
மன்னினார்.
|
6
|
444.
(இ-ள்.)
வெளிப்படை. எல்லா உயிர்களையும் தமக்கு
ஆளாகஉடைய இறைவனது அன்பராயினார்கள் அளவில்லாதவர்கள்
மனமகிழ்ந்து ஒவ்வோர் நாளும் பெருகிக் கூடிவந்த திருவமுது செய்து
இவருடைய அன்பினை அனுபவித்த தன்மையின் பயனாகிய
நன்மையினாலே, நீளும் பெருஞ் செல்வங்களின் பரப்பும், நெருங்கு
செல்வங்களும் நீடித்துப் பெருக்கெடுக்க, எண்டோளராகிய சிவபெருமான்
அளகாபுரியினை ஆளும்படி அமைத்த தமது தோழனாராகிய குபேரனே
இவர் என்று சொல்லும்படி நாயனார் வாழ்ந்து வருகின்ற நாளிலே,
5
445. (இ-ள்.)
செல்வம் ... அறிவிக்கவே - செல்வங்கள்
மிகுந்திருக்கும் காலத்திலே இச்செய்கைகள் செய்வதன்றியும், மெய்யினாலே
துன்பம் தரும் தரித்திரம் வந்த காலத்திலும் இச்செயல் செய்ய இவர்
வல்லராவர் என்ற உண்மையை உலகுக்கு அறிவிக்கும் பொருட்டாகவே;
மல்லல் ... மன்னினார் - செழித்து நீடிவந்த அச்செல்வங்கள் மெல்ல
மறைந்துபோய் நாடோறும் மாறி வந்து, பின் விரைவிலே வறுமையாகிய
நிலை வந்து சேருமாறு தில்லையில் மன்னிய இறைவனார்
திருவுளஞ்செய்தனர். 6
இவ்விரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன. நுகர்ந்த
-
நன்மையால் - செல்வம் - நிலாவித் தோழனார் - என - வாழுநாள் -
அறிவிக்கவே - செல்வம் - மாறிவந்து - வறுமைப்பதம்புக - மன்னினார்
- உன்னினார் - என முடிக்க.
444. (வி-ரை.)
நாயகரன்பரானவர் - முன்னர்,
வேணியார்
அடியார் (441), ஐயர் அன்பர் (442), நாயகர் தொண்டர் (443), என்று
கூறியதுபோலவே இங்கும் கூறினார். அரனுக்கும் அடியார்க்கும வேற்றுமை
தொக நிற்பதும் அமைப்பாம். நாயகரும் அன்பரும் என்று உம்மைத்
தொகையாக்கி அன்பர்களுக்குள்ளே நின்று நாயகரும் அமுது
கொண்டருளியமை குறிப்பாம். இச்சரித நிகழ்ச்சியிலே அடியாராகி நாயகரே
அமுது கொள்ள வந்தமையும் குறித்தது.
அளவிலார்
- வகையாலும் தொகையாலும் மட்டுமன்றிப்,
பெருமையினாலும் அளவுட்படாதவர்கள். 5-ம் பாட்டும் உரையும் காண்க.
|