பக்கம் எண் :


இளையான்குடிமாற நாயனார் புராணம்553

Periya Puranam

     தன்மையின் நன்மையால - தன்மையினால் உளதாகிய நன்மை
காரணமாக.

     நீளுமா நிதியின் பரப்பு நீளும் - மா - பரப்பு - என்பன
செல்வங்களின் வகை தொகைகளின் பெருமை குறீத்த அடைமொழிகள்.
இவை நிலம் முதலிய பலவுங் குறிப்பன. நெருங்கு செல்வம் - இது
பொன் மணி முதலிய பிற செல்வமெல்லாம் குறிக்கும். பரப்பும்
செல்வமும் - உம்மைத் தொகை.

     எண்தோளினார் - சிவபெருமான். “எண்டோள் வீசிநின் றாடும்
பிரான்“ - திருவங்கமாலை. அளகைக் கிருத்திய தோழனார் -
தோளினார் இருத்திய தோழனார் என்க. அளகை - குபேரனது தலைநகர்.
இருத்திய
- அளகையில் அரசு செலுத்தும்படி வைத்த. தோழனார் -
குபேரனைச் சிவபெருமான் றோழர் என்பது வழக்கு. “மித்திரவச்
சிரவணற்கு விருப்பர் போலும்“ - திருத்தாண்டகம், என - என்று
சொல்லும்படி.  5

     445. (வி-ரை.) செல்வம் மேவிய - அடியார் பூசையின் நன்மையாற்
செல்வம் வந்து பொருந்திய.

     மெய்யினால் நல்குரவான் போதிலும - அது காரணமாக
(அருள் காரணமாக) வறுமை வந்து பொருந்திய காலத்திலும் செல்வமும்
வறுமையும் திருவருளினாலே வந்ததென்துவன; இவற்றுள் எது
வந்தெய்தினும் தமது நிலையினின்றும் பிறழாது உண்மைக்
கொள்கையினிற்றல் உணர்ந்தோர் கடன் என்பது நூற்றுணிபு.

     வல்லர் - செல்வம் வந்த காலத்து அடியார் பூசை செய்வதற்கு
அடியார் திறத்து நிறைந்து திருந்திய சிந்தை வேண்டும்; நல்குரவு
வந்தபோது அது செய்தற்கு அதனினும் பெரியதோர் வன்மைவேண்டும்
என்பார் வல்லபர் என்றார். அறிவிக்கவே - உலகம் அறிந்துய்யும்படி
மன்னுயிர்கட்கறிவிப்பதற்கு. இதன் விரிவுவிக்கவே - உலகம்
அறிந்துய்யும்படி மன்னுயிர்கட்கறிவிப்பதற்கு. இதன் விரிவு ஞாலத்தார்
விரும்பியுய்யும் அந்நெறி காட்டுமாற்றால
- (369), காட்டுவான -
(407) என முன்னர்க் கூறிய இடங்களிற் காண்க. ஏகாரம், அதன்
பொருட்டாகவே என முன்னர்க் கூறிய இடங்களிற் காண்க. ஏகாரம்,
அதன் பொருட்டாகவே எனப் பிரிநிலைப் பொருளில் வந்தது.
அடியார்களுக்கு வரும் வறுமை முதலிய துன்பம்போலக்
காண்பனவெல்லாம் இறைவனருளால் இவ்வாறு ஒவ்வோர் நற்காரணம்
பற்றி வருவனவேயன்றி வேறன்று. பிராரத்த முதலியவற்றை
அனுபவிப்பித்துக் கழிக்குமுகத்தானும் அல்லது அன்பினை
வலிமையுடையதாக்கு முகத்தானும், இன்ன பிறவாற்றானும் வருவன.
இவ்வாறு வரும் இன்னல் போன்ற தோற்றங்களைக் கண்டு மயங்கி
அடிமைத்திறத்திலே அபசாரப் படாதிருத்தல் அறிவோர் கடன் என்று
குறிக்க இங்கு அறிவிகவே என்றறிவித்தார் ஆசிரியர் என்க.

     மல்லல் நீடிய செல்வம் - மல்லல் - வளப்பம்; செழிப்பு. மல்லற்
செல்வம
- நீடிய செல்வம் எனப் பிரித்து மேற்பாட்டிற் குறித்த
இருவகைக்கும் பொருந்தும்படி உரைத்துக்கொள்க.

     மெல்ல மறைந்து - நாடொறும் மாறி வந்து; மெல்ல மறைதலாவது
மறைந்துபோம் தன்மை அறிய இயலாதபடி ஒவ்வொன்றாக மறைதல்;
நாள்தோறும் மாறி - மறைந்த செல்வம் திரும்பிவருதல் என்பதின்றி
நாள்தோறும் செல்வம் போய் வறுமையாய் மாற்றப்பெற்று என்பது குறித்தது.
வந்து - அங்ஙனம் மாறுதல் தொடர்பாய் நிகழ்ந்தது என்றதாம்.

     ஒல்லையில் - விரைவிலே. இஃது மெல்ல என்பது முதலாகக்
குறித்தவற்றோடு முரணாமோ வெனின் முரணாது; என்னை?; விரைவில்
வருவது வறுமைப் பதமே யன்றி வறுமை யன்று; செல்வம் மறைந்த
செயலுடனே சார்ந்து வறுமைப்பதமும் விரைவில் ஒட்டியே நிகழ இறைவன்
நினைத்தமையே இங்குக் கூறினார். வறுமை வந்த நிலை வரும் பாட்டிற்
கூறினார். வறுமைப்பதம் - செல்வஞ் சுருங்குநிலை.

     உன்னினார் தில்லை மன்னினார் - பிரபுவின் சிருட்டி காரியம்
அவனது நினைப்பு யாத்திரையானே நிகழும் என்பது வேதம். ஆதலின்,
உன்னினார் என்றார். தில்லை